பெற்றோரை குழந்தையுடன் இணைக்கும் விஷயங்கள் என்னென்ன??

பெற்றோர் குழந்தைக்கு இடையேயான பிணைப்பு என்பது அற்புதமானதாகும். சிலருக்கு உங்கள் குழந்தையின் முதல் சோனோகிராம் படத்தை பார்க்கும்போதே இந்த பிணைப்பு தொடங்கிவிடும். சிலருக்கு குழந்தை பிறந்து முகத்தை பார்த்தவுடன் ஆரம்பிக்கும். எனினும், சிலருக்கு இந்த பிணைப்பு உருவாக்க சில காலம் எடுக்கும். உண்மையில், 20% சதவீத புதிய பெற்றோர்களுக்கு இந்த பிணைப்பு தாமதகத்தான் உண்டாகிறது. இந்த பிணைப்பை எப்படி சீக்கிரம் உருவாக்காலாம் என்பதை இங்கு காணலாம். 

1 தூக்கி கொஞ்சுதல்

உங்கள் குழந்தையை தொடுவதுதான் அடிப்படையாகும், அவர்களை தூக்கி கொஞ்சுங்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் கைகளை பிடித்து விளையாடுங்கள். அவர்களை உங்கள் மார்போடு கட்டியணைத்து கொள்ளுங்கள். உங்கள் இருவருக்குமிடையேயான தொடுதலே பிணைப்பிற்கான ஆரம்பமாகும்.

2 கவனித்தல்

இதை செய்ய ஒரே வழி, உங்கள் குழந்தையை உங்களுக்கு மீது அதிக கவனம் செலுத்துவதே ஆகும். எந்நேரமும் அவர்களை கண்காணிப்பதோடு முடிந்தவரை அவர்களின் முகபாவங்களையும் கவனிக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரத்தை அவர்களுடன் செலவிடுங்கள். இந்த வழி நீங்கள் உங்கள் குழந்தையின் ஒவ்வொரு நகர்வையும் தெரிந்துகொள்ள உதவுவதோடு அவர்களின் பசி, தூக்கமின்மை போன்றவற்றை புரிந்துகொள்ளவும் உதவும் .

3 நிறைய பேசுதல்

இது அனைத்து பெற்றோர்களும் கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒன்றாகும். குழந்தைகள் கருவில் இருக்கும்போதே பெற்றோர்களின் குரலை கவனிக்க தொடங்கிவிடுவார்கள். எனவே அர்த்தமில்லை என்றாலும் உங்கள் குழந்தையிடம் எதையாவது பேசிக்கொண்டே இருங்கள். குறிப்பாக நிறைய புத்தத்தங்களை வாசித்து காட்டுங்கள். அவர்களுக்கு அது புரியாவிட்டாலும் உங்கள் குரலே அவர்களை குதூகலப்படுத்தும்.

4 பாடுதல்

பெரும்பாலான பெற்றோர்கள் இதை செய்வதில்லை, ஆனால் பாடுவது உங்கள் குழந்தையை மகிழ்ச்சியடைய செய்யும். எனவே குழந்தைகள் பாடலையோ அல்லது உங்களுக்கு பிடித்த திரைப்பட பாடலையோ அடிக்கடி பாடுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் பாடல் எவ்வளவு மோசமனதாய் இருந்தாலும் பரவாயில்லை, உங்கள் குரலே குழந்தைக்கு முக்கியம். நீங்கள் மோசமான பாடகரை இருந்தாலும், உங்கள் குழந்தை உங்கள் பாடலை விரும்பித்தான் செய்யும்.

5 தனித்துவமாய் இருத்தல்

அவர்களை குதூகலப்படுத்த சிறப்பான, தனித்துவமான ஒரு வழியை உருவாக்கவும். அவர்களுக்கு தொட்டில் ஆட்டும்போதும் உங்களுக்கென பிரத்யேக வழியை கடைபிடியுங்கள். இதிலிருந்தே அவர்கள் உங்களை எளிமையாக அடையாளப்படுத்தி கொள்வார்கள். அவர்கள் சாப்பிடுவதற்கும், தூங்குவதற்குமென சிறப்பு வார்த்தைகளை பயன்படுத்த தொடங்குங்கள், இதன் மூலம் உங்கள் குழந்தை நீங்கள் சொல்வதை புரிந்துகொள்ள தொடங்குவார்கள்.

6 மசாஜ் செய்தல்

குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது அவர்களுடன் உள்ள பிணைப்பை அதிகமாக்குவதோடு அவர்களின் மன அழுத்தத்தையும் குறைக்கும். பெரும்பாலான குழந்தைகள் மசாஜை விரும்புவார்கள் இது உங்கள் மீதான அன்பை அதிகமாக்கும்.

7 நெருக்கமாய் இருத்தல்

எப்போதும் அவர்களுடன் நெருக்கமாய் இருங்கள் அவர்களின் தொட்டில் உங்கள் படுக்கைக்கு அருகிலியே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் உங்கள் அருகிலே படுக்கவைத்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்கள் பாய் மீது விளையாடுகிறார்கள் என்றால், நீங்கள் அவர்களுக்கு அருகிலிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.பெற்றோர்கள் அருகாமையில் இருக்கும்போதுதான் குழந்தை பாதுகாப்பாக உணருவார்கள்.

இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவவில்லையென்றால், உங்கள் குழந்தையுடன் அந்த உணர்வுபூர்வமான இணைப்பு இருப்பதாக உணரவில்லை என்றால், உங்களின் குழந்தைகள் மருத்துவரை தொடர்புகொண்டு, நீங்கள் எப்படி உணருகிறீர்களோ அதை அவரிடம் சொல்லுங்கள். அவர்கள் இது உளவியல் சிக்கலா இல்லை, உடல்ரீதியான சிக்கலா என ஆராய்ந்து உங்களை சரியான பாதையில் பயணிக்க உதவுவார்கள்.

Leave a Reply

%d bloggers like this: