மருத்துவரிடம் கர்ப்பிணி பெண்கள் கேட்கும் 7 கேள்விகள்..!

தாய்மை என்பது பெண்களுக்கே உண்டான தனித்துவமான விஷயமாகும். இதில் உங்களுக்கு பல சந்தேகங்கள் எழும். இங்கே கர்ப்பமான பெண்களுக்கு எழும் சில சந்தேகங்களையும் அதற்கான பதில்களையும் கொடுத்துள்ளோம்.

1 கர்ப்ப காலத்தில் தசைப்பிடிப்பு மற்றும் ரத்தப்போக்கு சாதரணமானது தானா?

முதல் மூன்று மாதங்களுக்கு இது சகஜமானது என்றாலும், இந்த நிலை நீடித்தால் மருத்துவரை அணுகவும். ஏனென்றால் இது பெண்ணுறுப்பு அல்லது கர்ப்பப்பை தொற்றாக கூட இருக்கலாம் அல்லது ectopic கர்ப்பமாக இருக்கலாம்.

2 கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்?

கர்ப்பத்தின் போது எவ்வளவு உடல் எடை கூடலாம் என்பதை கர்ப்பத்தின் முன் எடுக்கப்பட்ட உடல் நிறை குறீயீட்டெண் கொண்டு கணக்கிடலாம். உங்கள் மருத்துவர் அந்தந்த மாதத்திற்கு ஏற்றார் போல் உடல் எடை அதிகரிக்கும் வரம்பை நிர்ணயிப்பர்.

3 கர்ப்பத்தின் போது எந்த மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யலாம்?

கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்பாக இருப்பது உங்கள் உடல் நலத்திற்கும் உங்கள் குழந்தையின் உடல் நலத்திற்கும் நல்லது. நடைப்பயிற்சி, நீச்சல், யோகா போன்றவை பாதுகாப்பானது, ஆனால், கவனமாக செய்ய வேண்டும். கடிமான உடற்பயிற்சிகளை செய்யாதீர்கள்.

4 எவ்வளவு மணி நேரம் வேலை செய்யலாம்?

இது நீங்கள் செய்யும் வேலையை பொறுத்தது. உடல் உழைப்பு செய்ய வேண்டிய வேலையாக இருந்தாலோ அல்லது சிக்கலான கர்ப்பமாக இருந்தாலோ ஓய்வு எடுப்பது அவசியம்.

5 பிரசவம் குறித்த திட்டமிடல் அவசியமா?

இது உங்கள் பிரசவம் சிக்கலான பிரசவமாக இருந்தால் உதவியாக இருக்கும். இத்தருணங்களில் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.

6 எந்த மாதிரியான பிரசவம் ஏற்படும்?

உங்களுக்கு எந்த மாதிரியான பிரசவம் நிகழும் என்று உங்களுக்கு வலி வந்த பிறகு தான் தெரியும். மருத்துவர் பரிசோதித்து விட்டு குழந்தையின் நிலை அறிந்து மேற்கொண்டு செயல்படுவர்.

7 எப்போது சிசேரியன் தேவைப்படும்?

உங்கள் கர்ப்பத்தின் நிலை அறிந்து மருத்துவர்கள் அதை முடிவு செய்வார்கள். 

Leave a Reply

%d bloggers like this: