உங்கள் குழந்தைகள் பேயுடன் பேசுகிறார்களா..?

குழந்தைகளுக்கு எப்போதும் கற்பனை திறன் அதிகமாக இருக்கும். அது பெரியவர்களை ஒப்பிடும் போது பல வழிகளில் சிறந்ததாக இருக்கும். அவர்கள் இப்போது வளர்ச்சி பருவத்தில் இருப்பதால், மூளையின் கற்பனை திறன் மிகவும் அதிகரிக்கும். இதனால் அவர்கள் அதிக அளவிலான விஷயங்களையும், இல்லாத மற்றும் நடக்காத விஷயங்களை பற்றியும் அதிகமாக கற்பனை செய்வார்கள். இது உங்கள் குழந்தையிடம் எதோ தவறாக இருப்பதாக அர்த்தமில்லை. உண்மையில் கற்பனை நண்பர்களை உருவாக்க கூடிய குழந்தைகள் மிகவும் புத்திசாலியாகவும், படைப்பாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

முற்றிலும் வித்தியாசமான ஒரு தோற்றத்தை உருவாக்கவும், மேலும் அதனுடன் ஒரு நபரை உருவாக்கவும் மூளையின் சக்தி அதிகமாக தேவைப்படும். நம்மால் இது போன்ற கற்பனையான உலகை உருவாக்குவது என்பது கடினமான ஒன்று. கற்பனையாக நண்பர்களின் தோற்றத்தை உருவாக்குவது எளிதானதல்ல. ஒருவர் உண்மையில் இருக்கும் போதும், அவர்களுடன் நாம் மனம் திறந்து பேசும் போதும் மட்டுமே நம்மால் ஒருவரை ஏற்றுக் கொண்டு நம்ப முடியும். புத்திசாலித்தனமான மற்றும் அதீத படைப்பாற்றல் கொண்ட குழந்தைகளால் மட்டுமே இது முடியும்.

கற்பனை நண்பர்களை உருவாக்குவது தவறான செயலல்ல. உண்மையில் கற்பனை நண்பர்களை கொண்டிருக்கும் குழந்தைகள் அதிகமாக சிரிக்கிறார்கள், மற்றவர்களை விட குறைவாக வெட்க படுவார்கள் மற்றும் எளிதில் நண்பர்களை உருவாக்கி கொள்வார்கள். கற்பனை நண்பர்களை கொண்டிருக்கும் குழந்தைகள் எப்போதும் தனியாக இருப்பார்கள் மற்றும் மற்ற குழந்தைகளுடன் நெருக்கி பழக மிகவும் சிரமப்படுவார்கள் என்பது தவறான கருத்து. அவர்களது படைப்பாற்றல் அதிக அளவில் இருக்கும். அவர்களை மனிதர்களை போன்றே கற்பனையான ஒரு நபரை உருவாக்கி அவர்களுடன் நேரம் செலவிடுவார்கள். சில நேரங்களில் கோபப்படவும் செய்வார்கள்.

உங்கள் குழந்தைக்கு கற்பனை நண்பர்கள் இருந்தால், அதை வியப்பாய் மற்றும் வித்தியாசமாக பார்க்காமல் அவர்களுடன் அமர்ந்து பேசுவது சிறந்தது. அவர்களது கற்பனையின் எந்த எல்லையில் வேண்டுமானாலும் பயணித்து கொண்டிருக்கலாம். அவர்களிடம் கற்பனை நண்பர்களை பற்றி மெல்ல விசாரியுங்கள். இதிலிருந்து உங்கள் குழந்தையின் கற்பனை திறன் எந்த நிலையில் இருக்கிறது என்று உங்களால் தெரிந்து கொள்ள முடியும். அது தவறான வழியில் இருந்தால், உங்கள் குழந்தைக்கு தத்துவ கதைகள் மூலம் உணர்த்த முயற்சியுங்கள். இது அவர்களது கற்பனை திறனை நல்ல வழியில் செலுத்த உதவும்.

நாம் நம்பிக் கொண்டிருப்பதை போல் கற்பனைகள் எப்போதும் மோசமானவை இல்லை. சில நேரங்களில் அவை நமக்கும் குழந்தைகளுக்கும் உதவிகரமாகவும், நல்ல வாழ்கை பாடத்தையும் கற்றுக் கொடுக்கின்றன. உங்கள் குழந்தைகள் கற்பனை நண்பர்களை கொண்டிருந்தால், அவர்கள் சில நல்ல குணங்களை பெறுவார்கள்.

Leave a Reply

%d bloggers like this: