கர்ப்பகாலத்திற்கு முன் மற்றும் பின் அந்தரங்க உறுப்பில் ஏற்படும் வெளியேற்றங்கள்..

நீங்கள் கர்ப்பகாலம் அல்லது உங்களது பிரசவ காலத்திற்கு பின் இருக்கும் போது, உங்களது அந்தரங்க உறுப்பில் என்னவென்று தெரியாத ஒரு திரவ பொருள் வெளிப்பட்டு, நீங்களும் அதைப்பற்றி அறியாமல் இருந்தால், இப்போது அறிந்து கொள்ளுங்கள். உங்கள் பிரசவ காலத்திற்கு முன் அல்லது பின் உங்களது அந்தரங்க உறுப்பில் ஏற்படும், இந்த வெளியேற்றம் வெவ்வேறு வகையான மற்றும் பல காரணங்களால் ஏற்படுகிறது. இங்கு என்ன காரணங்கள், எதனால் ஏற்படுகின்றன என்பதை பார்க்கலாம்.

1 ஈஸ்ட் தொற்று

நீங்கள் அதைப் பெற்றிருக்கலாம் அல்லது அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் இது பிறப்புறுப்பு வெளியேற்றத்தின் பொதுவான வடிவமாகும். இது எந்த விதமான வாடையும் இல்லாமல், வெள்ளை நிறத்தில் வழவழவென பாலாடைக்கட்டி போன்று இருக்கும். இது உங்கள் அந்தரங்க பகுதியில் புண் அல்லது வலியை கூட ஏற்படுத்தும், ஆனால் சரியான மருந்துகளை பயன்படுத்தி, அதை குணப்படுத்துவது எளிது. இதில் கவலை படுவதற்கு ஏதும் இல்லை. ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால், கர்ப்பிணிப் பெண்களின் பெரும்பான்மையானவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள், முறையான மருந்துடன் சிகிச்சையளிப்பதன் மூலம் இதை சரி செய்வது எளிது.

2 உடலுறவின் மூலம் பரவும் நோய்கள்

உங்களது கர்ப்பகாலத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பற்ற உடலுறவினால், இது ஏற்படுகிறது. இது இரண்டாவது பொதுவான நிகழ்வாகும். உங்கள் அந்தரங்க உறுப்பில் ஏற்படும் இந்த வெளியேற்றம், மஞ்சள் நிறத்தில் அல்லது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் மோசமான துர்நாற்றத்துடன் இருக்கும். பெண்களிடம் பொதுவான காணப்படும் இவை, உடலுறவின் மூலம் பரவும் நோயான டிரிகோமோனசிஸ் ஆகும். இது இந்த வகையான வெளியேற்றத்தை விளைவிக்கிறது. இது போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்தித்தால், உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்.

3 பாக்டீரியல் வஜினோசீஸ்

உங்களது அந்தரங்க உறுப்பில் இருக்கும் பாக்ட்டீரியங்கள், சிறிது அதிகரிக்க முடிவு செய்யும் போது, அதன் காரணமாக பச்சையுடன் வெள்ளை கலந்த நிறத்தில் மீன் மனத்தில் இந்த வெளியேற்றம் இருக்கும் அல்லது அடிப்படையாக விரும்பத்தகாத ஒரு மணத்துடன் இருக்கும். நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலை ஏற்படுத்தும். இது பனிக்குடம் உடைதல் அல்லது குறைப்பிரசவ வலிக்கு வழிவகுக்கும். இது குறித்து கவனமாக இருங்கள், தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனை பெறுங்கள்.

4 அம்னோடிக் திரவங்கள்

அம்னோடிக் திரவங்கள் உங்கள் கருப்பையில் இருக்க கூடிய ஒன்று. இது உங்கள் குழந்தைக்கு ஆற்றல் கொடுக்க கூடிய அனைத்தையும் கொண்டிருக்கிறது. இது குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. உங்களது கர்ப்பகாலம் முழுவதும், ஒரு விதமான கசிவு ஏற்பட்டிருக்கும். உங்கள் கருப்பை பிரசவத்திற்கு தயாராகி கொண்டிருக்கும் 36-வது வாரத்தில் இது கடுமையாக குறைந்திருக்கும். இந்த அம்னோடிக் திரவத்தின் கசிவை கண்டால், உங்களுக்கு ஒலிகோஹைடிராம்னியோஸ் இருக்கிறதென்று அர்த்தம். உங்களது மூன்றாவது 3 மாத காலத்தில் பிரசவ நேரத்தை நோக்கிய பயணத்தின் போது, உங்களுக்கு கசிவு ஏற்பட்டால் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

5 கருப்பை திரவம்

பிரசவம் முடிந்த பின் உங்கள் கருப்பையிலிருந்து மெல்லிய கோடு போல், கருப்பை திரவம் தானாகவே வெளியேறும். பிரசவம் முடிந்த நான்காவது நாளில் இளம்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இந்த கழிவு வெளியேற்றப்படும். பத்து நாட்களுக்கு பிறகு இந்த வெளியேற்றமானது மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். 

Leave a Reply

%d bloggers like this: