உறவின் தன்மை பற்றி சொல்லும் உறக்க நிலைகள்..!

தூக்கம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இது கடவுள் கொடுத்த வரம் என்றே சொல்லலாம். நீங்கள் தூங்கும் நிலைகளை வைத்தே உங்கள் குணாதிசயங்களை அறிய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் பெரும்பாலும் குப்புற படுத்து தூங்கினால், விளையாட்டு போக்குடன் வாழ்கை எதிர்கொண்டு அனுபவசாலியாக இருப்பார்கள்.

உடலின் அனைத்து அசைவுகளையும் உங்கள் மூளை கட்டுப்படுத்துவதாக சொல்கிறது உளவியல். இதில் உங்கள் உறக்க நிலைகளும் அடங்கும். உடல் மொழி உங்கள் மூளையால் கட்டுப்படுத்தப்பட கூடிய ஒன்று. நீங்கள் உங்கள் துணையுடன் இருப்பதை போன்று கனவு கண்டிருக்கலாம், இது உங்கள் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்களை உங்கள் மூளை நினைவு கூறும் செயலாகும். இங்கு உங்கள் துணையுடன் தூங்கும் நிலைகளை வைத்து, உறவின் தன்மை பற்றி அறியலாம்.

1 கால்களை மடக்கி உறங்குதல்

இந்த நிலை உங்கள் துணை உங்களை மிகவும் நம்புகிறார்கள் என்று அர்த்தம். இந்த நிலை உங்கள் துணையை உற்சாகப்படுத்துவதோடு, பாதுகாப்பாகவும் நெருக்கமாகவும் உணர செய்யும். பெண்களது பின் பகுதியும் ஆணின் அந்தரங்க பகுதியும் இணையும், சிறந்த தாம்பத்திய நிலையும் கூட. இது உங்களுக்குள் நல்ல நெருக்கம் இருப்பதற்கான வெளிப்பாடாகும்.

2 ஓடுவது போல

இது ஒருவரை ஒருவர் துரத்துவது போன்ற நிலையாகும். இது படுக்கையில் இருந்து ஒருவர் விலகி செல்வதை போலவும், மற்றவர் அவர்களை விடாமல் பிடித்து வைத்து உறங்குவது போலவும் இருக்கும். இதை நாம் இரு வழிகளில் உணரலாம்.

1 ஓடி கொண்டிருக்கும் ஒருவரை மற்றொருவர் முந்தி சென்று வெற்றி பெறுவதை போல, குறிப்பாக ஒருவர் மற்றவரின் இதயத்தை வெற்றி கொள்ள முந்தி செல்வதாகும்.

2 அன்பை பெறுவதற்காகவும், அதீத அன்புடனும் முரட்டு தனமாக விளையாடுபவர்களாக இருப்பார்கள்.

மூன்றாவது உண்மை என்னவென்றால், அவர்களுக்கான தனியாக இடம் சிறிது காலத்திற்கு தேவை என்பதாகும்.

3 மார்பின் மீது தலை வைத்து துயிலுதல்

இந்த நிலை நீங்கள் உங்கள் கணவரை சார்ந்திருப்பதால் வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாய் பொருள் படும். உங்கள் கணவர் தலையை மேல் நோக்கியும், முதுகு புறமாக உறங்கினால் மிகவும் பலசாலியான மற்றும் அதிக தன்னம்பிக்கை கொண்ட மனிதராக இருப்பார். அவரது பலத்தின் மூலம் உங்களை காப்பாற்றவும், உங்களுக்காக உலகையும் எதிர்த்து உங்களை பாதுகாக்க கூடியவராகவும் இருப்பார்.

4 எதிர் நோக்குதல்

ஒருவரின் முகத்தை மற்றவர் பார்த்தபடி உறங்குதல் முற்றிலும் காதல் நிரம்பிய ஒன்று தான். ஆனால், இது உங்கள் கணவர் உங்களை விட்டு விலகிவிடாமல் இருக்க விரும்புவதாய் உணர்த்துவதாகும். உங்களுடைய துணை உங்களுக்கு எதிராக தனது இடுப்பை அழுத்துவதை போல் நீங்கள் உணர்ந்தால், அது இதற்கான ஒரு சிறிய அடையாளம் என்பதை உணருங்கள். அவர் சிலவற்றை விரும்புகிறார் என்பதை உணர்ந்து நெருங்கி உங்கள் உறவை பலப்படுத்துங்கள்.

5 இரு வேறு திசை

ஒரே படுக்கையில் இரவு நேரத்தில் இருவரும் இரு வேறு திசை நோக்கி உறங்குதல். இது உங்கள் துணை உங்களை விட்டு விலகி சென்று கொண்டிருப்பதை உணர்த்துவதாகும். இதனால் நீங்கள் உங்களது இரவு நேர அரவணைப்பு மற்றும் நெருக்கத்தை இழக்கலாம். அவர்கள் உங்களது இதயத்தில் அவர்களுக்கான இடத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணருங்கள்.

அதே போல், சில நேரங்களில் உங்கள் கணவர் வேலை பளு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை உங்களிடம் இருந்து மறைக்கவும் இது போல் செய்யலாம். எப்போதும் உங்கள் வாழ்கை துணையுடன், நெருக்கத்தோடு இருங்கள்.

Leave a Reply

%d bloggers like this: