தாய்மார்களே! பனிக்கூட நீர் பற்றி அறிவீரா??

கர்ப்பத்தின் போது கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கும் கர்ப்பப்பைக்கும் இடையே ஒரு நீர்ப்படலம் இருக்கும். குழந்தையைச் சுற்றியிருக்கும் இந்த நீரை Amnotic fluid என்கிறோம். இது குழந்தையின் இயல்பான சுவாசத்துக்கும் பாதுகாப்புக்கும் உதவும். ஊட்டச்சத்துகள் நிறைந்த அந்த நீரானது சிலருக்கு குறைவாகவும் சிலருக்கு அதிகமாகவும் இருக்கும். இதுவே பனிக்குட நீர் என அழைக்கப்படுகிறது. இதனைப் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.. 

இது குறையும் போது அது குழந்தைக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். பனிக்குட நீர் குறைவதற்கு 2 காரணங்கள் உள்ளன.

1. குழந்தையிடம் உள்ள பிரச்சனைகளால் இந்த நீர் பற்றாக்குறை ஏற்படலாம்.

2. தாயிடம் உள்ள குறையாலும் ஏற்படலாம்.

குரோமோசோம் குறைபாட்டின் காரணமாக சில குழந்தைகளுக்கு இப்பிரச்னை ஏற்படும். யூரினரி ட்ராக்ட் அடைப்புக் காரணமாகவும் (Posterior urethral valve) இந்தப் பிரச்னை ஏற்படும். (யூரினரி ட்ராக்ட் அடைப்பு ஆண் குழந்தைகளுக்கே ஏற்படும்.)

அடுத்து நஞ்சுக்கொடி மூலம் குழந்தைக்கு ரத்த ஓட்டம் குறையும் போதும் குழந்தையின் கிட்னி வளர்ச்சி குறைபாட்டின் காரணமாகவும் ஏற்படும் மிஹிநிஸி பிரச்னையாலும் பனிக்குட நீர் குறைந்து போகும். தாயிடமிருந்து ஏற்படும் பிரச்னைகளில் கர்ப்பப்பையில் ஏற்படும் நோய்தொற்று ஒரு முக்கியக் காரணம். கர்ப்பிணிக்கு ஏற்படும் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவையும் காரணமாகலாம்.

நஞ்சுக்கொடியானது முறையான வகையில் அமையாமல் ஏடாகூடமாக கர்ப்பப்பையில் ஒட்டி இருந்தாலும் பனிக்குட நீரின் அளவு மாறுபடும். பிரசவ தேதி தாண்டிப் போகும் போதும் இயல்பாக பனிக்குட நீர் குறைய ஆரம்பிக்கும். நஞ்சுக்கொடியின் அழுத்தத்தின் காரணமாக குழந்தையின் முகத்திலும் மாறுதல்கள் ஏற்படலாம். இன்னும் நீர் வற்றும் போது குழந்தையின் உயிருக்கே கூட பாதிப்பு ஏற்படலாம் என்பதால்தான், பனிக்குட நீர் மிகவும் குறைந்து காணப்படும் நிலையை அபாயமான சூழ்நிலை என்கிறோம்.

‘வயிற்றில் குழந்தையின் அசைவு தெரியவில்லை’ என்பதே இதற்கான பெரிய அடையாளம். குழந்தையைச் சுற்றி நாலா பக்கமும் இருக்கும் இந்த பனிக்குட நீர், குறைந்தது 2 செ.மீ. அளவிலாவது இருக்க வேண்டும். அதை விடவும் குறையும் போது குழந்தை சுற்றி வராமல் கர்ப்பப்பையினுள் ஒரே இடத்தில் ஒரே நிலையில் நின்று விடும். இதனால்தான் பிரசவத்தின் போது குழந்தை தலைகீழாக இருப்பதாகச் சொல்வார்கள். சில நேரங்களில் குறுக்கு நெடுக்காகவும் நின்று போகும்.

தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக அந்த நஞ்சுக்கொடியானது (Umblical cord) கர்ப்பப்பையோடு ஒட்டிக் கொண்டு விடும். இதனால் குழந்தைக்கு போகவேண்டிய ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போவதால் குழந்தையின் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. அதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம்.

நுரையீரல் வளர்ச்சியிலும் குறை ஏற்படலாம். பிரசவத்துக்கு முன்னும் பின்னும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் போன்ற நிறைய சிக்கல்களும் ஏற்படும். ஒரே நிலையில் இருப்பதால் Club foot எனப்படும் குழந்தைக்கு வளைந்த நிலை பாதங்கள்ஏற்படலாம்.

சிலருக்கு கர்ப்பப்பை ரொம்ப சிறியதாக இருப்பதைப் பார்த்துக் கூட பனிக்குட நீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதைக் கண்டறியலாம். கர்ப்பத்தின் ஆரம்ப கால ஸ்கேன்களில் தோன்றும் மாறுபாட்டால், ஒருவேளை பனிக்குட நீர் குறைபாடு ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் குரோமோசோமல் பரிசோதனை செய்து அறியலாம். 

இப்பதிப்பின் தொடர்ச்சியை படித்தறிய நாளை வரை காத்திருங்கள்..! நாளை மதியம் பதிப்பு வெளியாகும்…!

Leave a Reply

%d bloggers like this: