விரைவில் பெண்கள் கருத்தரிக்க சில வழிமுறைகள்.!

இயற்கையான முறையில் பெண்கள் கருத்தரிக்க சில எளிய வழிமுறைகள் இரண்டு ஆண்டுகள் சச்தோஷமாக இருந்துவிட்டுபின் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று இப்போதுள்ள இளைய தலைமுறையினர் விரும்புகிறார்கள். ஆனால் குழந்தைப்பேறு என்பது நாம் எண்ணிய வண்ணம் நடக்காது. உடல், மனம், சூழல், ஆரோக்கியம், தாது, கரு, கருமுட்டை, எனப் பல்வேறு காரணிகள் கருத்தரிப்பதற்குத் துணை செய்ய வேண்டும். மேலும் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், பலர் கருத்தரிக்க முடியாமல் இருக்கின்றனர்.

ஏனெனில் இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள், வலிமை குறைந்து, மன அழுத்தம் அதிகரித்து, நல்ல இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவாறு இருக்கின்றன. எனவே, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், கீழே கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றி வந்தால், விரைவில் கர்ப்பம் அடையலாம்.

ஆண்களின் விந்தணுக்கள், குளிர்ச்சியான சூழலில் நன்கு உற்பத்தியாகின்றன. மடியிலேயே கணிப் பொறியை வைத்துக் கொண்டு பணிபுரியும் ஆண்களுக்கு, விந்துக்களின் உற்பத்தி மற்றும் கருத்தரிக்கும் திறன் குறைவாக இருக்கும். மேலும் ஆண்கள் நீண்ட நேரம், வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெந்நீரில் குளித்தவர்கள், குளிர்ந்த நீரில் குளிக்கத் தொடங்கியதால், ஆண்களின் விந்தணு உற்பத்தி ஐந்து மடங்காகப் பெருகியதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், உடலை இறுக்கிப் பிடிக்கும், கால் சட்டைகளைத் தவிர்த்து, தொளதொளவென்றிருக்கும், பாக்ஸர் கால் சட்டைகளை அணிய வேண்டும்.

சூரிய வெளிச்சமானது, வைட்டமின் டி-யை உற்பத்தி செய்யும், இது கருத்தரிக்கும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இது ஆண், பெண் என இருபாலாருக்குமேதான். மேலும் பெண்களுக்கான பாலின ஹார்மோன்களான மாத விலக்கை நெறிப்படுத்தும், புரோஜெஸ்டிரோன் மற்றும் கருவுறும் திறனைக் கட்டுப்படுத்தும் ஈஸ்டிரோஜென் ஆகியவற்றின் அளவை அதிகரிக்க வைட்டமின் டி உதவுகிறது என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வைட்டமின் டி-யானது, ஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. பதட்டமும், மன அழுத்தமும், பெண்களின் கருவுறும் தன்மையை வெகுவாகப் பாதிப்பதோடு, ஆண்களின் உயிரணு உற்பத்தி வீதத்தையும் மட்டுப்படுத்துகின்றன. மேலும், பாலியல் இச்சையையும் குறைக்கின்றன. முழுக் கொழுப்புள்ள பாலை, பெண்கள் தினமும் பருகி வந்தால், மலட்டுத்தன்மையானது 25% க்கு மேல் குறைந்ததாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெண்களின் கருமுட்டைப்பைகள் நன்கு வேலை செய்ய, இந்த பால் கொழுப்புக்கள் உதவுகின்றன.

கருவுறுதலுக்குத் தேவையான ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 மற்றும் செலினியம் ஆகியவை அடங்கிய மல்டி வைட்டமின் மருந்து மாத்திரைகளை தினமும் உட்கொள்வதால், கருவுறும் திறன் இரண்டு மடங்கு அதிகமாகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைப்பிடிக்கும் பெண்கள் புகைப்பிடிக்காத பெண்களை விட 30% குறைவாகவே கருத்தரிக்கும் விகிதத்தைப் பெறுகின்றனர்.

ஏனெனில் புகைப்பது, கருப்பையில் சிசு தங்குவதைத் தடுக்கிறது. குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், அருந்தும் மதுவின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது. அதிக அளவு மது அருந்துவது கருமுட்டை உற்பத்தியையும், விந்தணு உற்பத்தியையும் வெகுவாகப் பாதிக்கின்றது எனக் கண்ட றியப்பட்டுள்ளது.

தற்போது நிறைய மென்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில், மாதவிலக்கு நா ட்காட்டி, கருத்தரிக்க வழி காட்டி, (Period Diary, Fertility Friend, Menstrual Calendar) போன்றவை உட ல் வெப்பம், பருவ சுழற்சி ஆகியவற்றைக் கொண்டு கணக்கிட்டு, எந்தத் தேதி யில், தாம்பத்திய உறவு வை த்துக் கொண்டால், கருத்தரி க்கும் வாய்ப்பு அதிகம் என் று தெரிவிக்கும். ஆகவே இதுபோன்ற மென்பொருட்களைப் பய ன்படுத்தி, உறவில் ஈடுபடுவது நல்லது.

Leave a Reply

%d bloggers like this: