ஃபார்முலா பாலின் 4 அத்யாவசிய தேவைகள்..!

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை விட சிறந்தது ஏதும் இல்லை. சில நேரங்களில், சில காரணங்களால் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும். அந்த சமயத்தில் குழந்தைக்கு ஃபார்முலா பாலை தேர்ந்தெடுப்பது சிறந்தது. நீங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலுடன் கூடுதலாக ஏதும் கொடுக்க விரும்பினால், உங்கள் குழந்தைக்கு 3 முதல் 4 வாரங்கள் வரை காத்திருங்கள். அதன் பின் தாய்ப்பால் நன்றாக சுரக்க துவங்கிவிடும். உங்கள் குகுழந்தைக்கு எவ்வளவு ஃபார்முலா கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும் என்கிற சந்தேகங்கள் தோன்றலாம். குழந்தைகளின் எடை மற்றும் வளர்ச்சியை பொறுத்து ஒவ்வொரு குழந்தைக்கும் இது மாறுபடும். குழந்தைகளுக்கு பசி எடுக்கும் போது சாப்பிடவும், போதும் எனும் போது நிறுத்தி கொள்ளவும் செய்வார்கள். 

1 ஃபார்முலா வகைகள்

குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய குழந்தைகளுக்கான ஃபார்முலாக்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை தாய்ப்பால் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் படி உருவாக்குகிறார்கள். பெரும்பாலும் ஃபார்முலாக்கள் மாட்டு பாலிலிருந்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதிக அளவில் தரமான தயாரிப்புகள் அனைத்தும் இதையே தான் பின்பற்றுகிறார்கள். உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள். இல்லையெனில் இரும்பு சத்துக்களால் செறிவூட்டப்பட்டவற்றை தேர்வு செய்யுங்கள். ஃபார்முலாக்கள் மூன்று வகைகளில் கிடைக்கின்றன.

1 உடனடியாக ஊட்டுவது

2 திரவத்துடன் கலந்து

3 தூளாக அல்லது பொடியாக

2 எவ்வளவு ஃபார்முலா போதுமானதாக இருக்கும்?

பெரும்பாலும் பிறந்த குழந்தைகள் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பால் குடிப்பார்கள். முதல் வாரத்தில் குழந்தையின் தேவைக்கு ஏற்ப ஃபார்முலா கொடுக்கலாம். உங்கள் குழந்தையை ஆரோக்கியமான எடையில் வைக்க அதிகமாக கொடுக்காமல் இருப்பது முக்கியமான ஒன்றாகும். பிறந்த குழந்தையின் வயிறு சிறிதாக இருப்பதால், அவர்களால் குறைவான அளவே சாப்பிட முடியும். ஒவ்வொரு முறை கொடுக்கும் போதும் ஒன்றிலிருந்து இரண்டு அவுன்ஸ் போதுமானதாக இருக்கும். குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும், அவர்களின் வயிறும் வளர்ச்சி அடைந்திருக்கும். இப்போது அவர்களால் சில புட்டி ஃபார்முலாவை அருந்த முடியும். குழந்தை ஒரு மாதத்தில் இருக்கும் போது, 5 – 6 முறைகளில் 4 அவுன்ஸ் பாலை ஒவ்வொரு நாளும் கொடுக்கலாம். குழந்தை இரண்டாவது மாதத்தில் இருக்கும் போது, 6 – 7 முறைகளில் 24 -லிருந்து 32 அவுன்ஸ் பாலை ஒரு நாளில் கொடுக்கலாம். குழந்தைகள் ஆறாவது மாதத்தில் இருந்தால், 4 – 5 முறைகளில் 6 முதல் 8 அவுன்ஸ் பாலை நாளொன்றுக்கு அவர்களின் முதல் வயது வரை கொடுக்கலாம். இதனுடன் சேர்த்து சில திட உணவுகள் மற்றும் காய்கறிகளையும் குழந்தைகளுக்கு கொடுங்கள்.

3 குழந்தைக்கு தேவையான ஃபார்முலா கிடைத்து விட்டதற்கான அறிகுறிகள்

1 முதல் இரண்டு வாரங்களில் குழந்தையின் உடல் எடை நன்றாக அதிகரித்திருந்தால், முதல் வயது வரை அவற்றை பராமரிக்க வேண்டும். இது உங்கள் குழந்தையின் உடல் எடை சரியான வேகத்தில் அதிகரிக்கிறது என்று உணர்த்தும்.

2 குழந்தைகள் 5 முதல் 6 முறை தூக்கி எறியக் கூடிய நாப்கின்களை ஈரம் செய்தல் அல்லது நீங்கள் உபயோகிக்கும் துணிகளை 6 முதல் 8 முறை செய்வார்கள்.

3 இறுதியில் குழந்தைகள் திருப்தியடைந்தும் வசதியாகவும் உணர்ந்தால், மகிழ்ச்சியான குழந்தைகள் என்று கூறப்படுகிறார்கள்.

4 நினைவில் கொள்ள வேண்டியவை

நிலை : குழந்தைகளுக்கு உணவளிக்கும் போது, தலை சற்று உயர்வாக இருக்கும் படி வைக்க வேண்டும். இதனால் குழந்தை பால் புட்டிகளில் பால் குடிக்கும் போது காற்றை விழுங்குதல் தவிர்க்கப்படுகிறது.

நாப்கின் அல்லது துணி : குழந்தை வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி நாப்கின் அல்லது துணியை ஈரம் செய்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். இது குழந்தையின் உடலில் நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும்.

பால் புட்டியின் துளை : பால் புட்டியின் துளை சரியான அளவில் இல்லாமல், துளை பெரிதாக இருந்தால், குழந்தையின் வாயில் அதிக அளவில் பால் உட்செல்லும். இதனால் குழந்தைகள் வாந்தி எடுக்கலாம். அதுவே துளை சிறிதாக இருந்தால், குழந்தைகள் அதில் பால் குடிக்க சிரமப்படுவார்கள். 

Leave a Reply

%d bloggers like this: