குழந்தைகள் எப்போதும் விரும்பும் 5 சுவைகள்..!

குழந்தை பிறந்த ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதால் பெற்றோர்க்கு குழந்தை உணவை பற்றிய கவலை இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், அவர்கள் ஆறு மாதத்தை கடந்த பிறகு எது போன்ற உணவுகளை கொடுக்கலாம் என பெற்றோர் மத்தில் ஒரு கேள்வி எழும். அதன் பின் அவர்கள் குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டும் எப்படி கொடுக்க வேண்டும், குழந்தைகள் விரும்பும் சுவை என அனைத்தையும் அறிந்திருப்பார்கள். ஒரே சுவையை எப்போதும் கொடுத்தால், அவர்கள் அதை விரும்பமாட்டார்கள். ஆனால் குழந்தைகள் எப்போதும் ஏற்று கொள்ள கூடிய மற்றும் விரும்ப கூடிய சுவைகளை இங்கு பார்க்கலாம்.  

1 சாக்லேட்

சாக்லேட்டை விரும்பாத குழந்தைகளே இருக்கமாட்டார்கள். சாக்லேட் என்றதுமே குழந்தைகள் மகிழ்ச்சியடைய துவங்கி விடுவார்கள். உண்மையில் சாக்லேட்கள் குழந்தைக்கு ஆரோக்கியத்தை கொடுப்பவையே. வீட்டில் தயாரிக்கப்படும் கருப்பு சாக்லேட்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்கள் இருப்பதால், அவை உடலுக்கு சிறந்தவையே. இவற்றை பயன்படுத்தி நீங்கள் தயாரிப்பவற்றை குழந்தைகள் விரும்பி உண்வார்கள். ஆனால், சாப்பிட்ட உடன் வாய் கொப்பளிக்க செய்வது அவர்களின் பற்களை பாதுகாக்க உதவும்.

2 வேர்க்கடலை வெண்ணை (Peanut butter)

இது குழந்தைக்கு அருமையான சுவையுடைய, அவர்கள் விரும்பக்கூடிய உணவை தயாரித்து கொடுக்க உதவுகிறது. வேர்க்கடலை வெண்ணை பிஸ்கட்டுகள், வேர்க்கடலை வெண்ணெயுடன் வாழைப்பழம் மற்றும் பல விதமாக தயாரித்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய இரும்பு, ஃபைபர் மற்றும் புரதம் போன்ற பல ஊட்டச்சத்துகள் வேர்க்கடலை வெண்ணெயில் நிறைந்திருக்கின்றன.

3 பாலடைக்கட்டி (cheese)

பாலாடை கட்டி என்றாலே குழந்தைகளுக்கு அலாதி பிரியம் தான். இப்போதைய குழந்தைகள் பிஸ்சா, பர்கர் என்று மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறி கொண்டிருப்பதால், அவர்களுக்கு பாலடைக்கட்டிகளின் மீது தனி ஈர்ப்பு இருக்கிறது. பாலாடைக்கட்டி மற்றும் பிற பால் பொருட்களில் புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இருப்பினும், இதில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிக அளவில் இருப்பதால், குழந்தைகளுக்கு குறைந்த அளவில் கொடுப்பது சிறந்தது.

4 காரம்

இது உங்கள் குழந்தையின் இனிமையான பற்களுக்கு மட்டுமல்ல. அவர்களின் சுவை நரம்புகளுக்கும் கூட. இப்போது பெரும்பாலான குழந்தைகள் காரமான உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை அல்ல. முடிந்தவரை காரத்தை மிதமாக கொடுங்கள், சில குழந்தைகள் காரத்தினால் அழ துவங்கி விடுவார்கள்.

5 பழங்கள்

உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக அவர்களை கைக்குள்ளேயே வைத்திருப்பீர்கள். அவர்களுக்கு பிடித்தமானதை அறிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் குழந்தைகளுக்கு பிடித்தமானவை எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் குழந்தைகளுக்கு பிடித்தமானது பழங்களாகவே இருக்கும். குழந்தைகளுக்கு ஒரே பழமாக சாப்பிட கொடுப்பதை விட வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களின் மீது சாக்லேட் துருவல்களை சேர்த்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். இதில் உங்கள் குழந்தைக்கு பிடித்தமான பழங்களுடன் தேன் சேர்த்தும் கொடுக்கலாம். 

Leave a Reply

%d bloggers like this: