அந்தரங்க முடிகள் பற்றி முழுதாக அறியுங்கள் பெண்களே!!

முடிகள் இல்லாத வழவழப்பான சருமத்தையே அனைவரும் விரும்புகிறோம். தலை முடி மட்டும் தான் அதிகமாக இருக்க வேண்டும். மற்ற இடங்களில் தோன்றும் முடிகளை களைவதில் தான் நமது சிந்தனை இருக்கிறது. ஆனால் அது நல்லது அல்ல. உடலில் இருக்கும் முடிகள் பாலூட்டிகளுக்கு மட்டுமே இருக்கும் ஒரு வேறுபட்ட தன்மையாகும். அதற்கும் காரணங்கள் உண்டு. உடலில் இருக்கும் முடிகளின் நன்மைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

நாகரீக யுகத்தில் எல்லா பகுதியிலும் இருக்கும் முடிகளையும் நீக்கி, தற்போது, அந்தரங்க பகுதியில் இருக்கும் முடியையும் அகற்றும் நிலையில் இருக்கிறோம். அதற்கு முன்பாக, முடிகளை இருப்பதற்கான காரணங்களை உணர்ந்து கொள்வது நல்லது.

உங்களை பாதுகாக்கிறது

முடிகள் பாதுகாப்பிற்காக படைக்கப்பட்டது. அந்தரங்க பகுதியில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் கிருமி தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. எப்போதும் அந்தரங்க பகுதிகள் ஈரமாக இருக்கும். அதனால் கிருமிகள் அந்த இடத்தில் அதிகமாக இருக்கும். அத்தகைய கிருமிகளிடம் இருந்து உங்கள் பாதுகாக்கவே இந்த முடிகள் உள்ளது.

உங்கள் சுகாதார காரணங்களுக்காக அவற்றை நீக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை அறிந்து கொள்வது அவசியம். அந்த இடத்தில் நீர் மற்றும் சோப் கொண்டு சுத்தம் செய்வது மட்டுமே போதுமானது. சைக்கிளிங் அல்லது குதிரை ஏற்றம் போன்ற செயல்பாடுகளின் போது அந்தரங்க முடிகள் ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கிறது.

எரிச்சல் ஏற்படுகிறது

பிளேடை பயன்படுத்தி முடிகளை அகற்றும்போது, நமக்கே தெரியாமல் பிறப்புறுப்பில் சில கோடுகளை ஏற்படுத்துகிறோம். இவை சில நேரம் வீக்கத்தை உண்டாக்கி விபரீதங்களை தோற்றுவிக்கலாம்.

தொடர்ந்து ரேசர் பயன்படுத்தி முடிகளை நீக்கும்போது மென்மையான பகுதி எரிச்சல் அடையலாம். அந்தரங்க உறுப்பில் முடிகளை அகற்றிய பின் 80% பெண்களுக்கு எரிச்சல் உண்டாவதாக கூறப்படுகிறது. வாக்ஸிங் போன்ற முறைகளை பயன்படுத்துவதாலும் பாதிப்பு உண்டாகிறது.

உராய்வை தடுக்கிறது

உடல் பருமன் உள்ளவர்களுக்கு நடக்கும் போது இரண்டு கால்களுக்கு இடையிலும் உராய்வு ஏற்படுகிறது. முடிகள் ஒரு லுபிரிகேன்ட் போல் செயலாற்றுகிறது. இதனால் அந்த இடத்தில் உராய்வால் காயம் ஏற்படுவது குறைகிறது.

வெப்ப நிலையை நிர்வகிக்க முடிகிறது

வெப்ப நிலை மாறுபாட்டை எதிர் கொள்வதற்காகவும், பாலூட்டிகளுக்கு முடி உதவுகிறது. முடிகள், வெப்ப நிலையை சீராக வைக்கிறது. குளிர் பிரதேசங்களில் அல்லது வெப்ப பிரதேசங்களில் அந்தரங்க பகுதியை வெது வெதுப்பான நிலையில் வைக்க முடிகள் உதவுகின்றன. அந்தரங்க பகுதில் இருக்கும் முடிகளின் வேர்க்கால்கள் எண்ணெய்யை சுரக்கும். இவை அந்த இடத்தை குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றன.

துணைவரை ஈர்க்கிறது

முடிகளை அகற்றுவதால் அழகாக இருப்பீர்கள் என்பது ஒரு மாயை. அந்தரங்க பகுதியில் முடிகள் இருப்பதால் வியர்வை துளிர்க்கிறது. வியர்வுடன் இருக்கும் முடிகள் தங்கள் துணைவரை அதிகம் ஈர்க்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் தான் பல வாசனை திரவியங்கள் மற்றும் சென்ட் தயாரிப்பாளர்கள் மனித வியர்வை துளிகளை அவர்களின் தயாரிப்பில் பயன்படுத்துகின்றனர்.

நமது வாழ்க்கை முறையில் பல விஷயங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை தான். ஆனால் சில விஷயங்கள் மாறாமல் அப்படியே இருக்கின்றன. எதிர்பாலின ஈர்ப்பு, வெப்ப நிலை கட்டுப்பாடு போன்றவற்றில் எந்த ஒரு மாற்றமும் ஏற்பட வில்லை. பூப்பெய்தும்போதும், மாதவிடாய் காலத்தின்போது முடிகளால் சில அசௌகரியங்கள் இருப்பது உண்மை. ஆனால் அதன் நற்பயன்கள் ஏராளம். மருத்துவரிடம் அல்லது உங்கள் துணைவரிடம் கலந்து பேசி இதற்கான தீர்வை எடுப்பது சிறந்தது. பாதுகாப்பும் , சௌகரியமும் இருக்கும்பட்சத்தில் அந்தரங்க முடிகளை அகற்றாமல் இருப்பது நல்ல முடிவாகும்.

Leave a Reply

%d bloggers like this: