தாய்மை தாம்பத்தியத்தை கொல்கிறதா??

குழந்தை கருவில் உருவானதும் கையில் ஏந்த வேண்டும் என காத்திருப்பீர்கள். குழந்தை பிறந்து கையில் ஏந்தும் போது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள். குழந்தையை வாழ்வின் அர்த்தமாக கருதி இருப்பீர்கள். குழந்தை பிறந்ததும் உங்கள் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும், அவற்றுள் முக்கியமான ஒன்று தாம்பத்தியம். நீங்கள் கர்ப்பமாக இருந்த போது, சில ஹார்மோன் மாற்றம் உங்கள் தாம்பத்திய வாழ்வின் வீரியத்தை குறைந்திருக்கும். நீங்கள் சில நேரங்களில் உங்கள் கணவருடன் தாம்பத்தியதில் ஈடுபட்டிருக்கலாம். நீங்கள் ஏதும் செய்யாமல் படுக்கையில் படுத்து கொண்டு உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கலாம்.

நீங்கள் குழந்தை பிறந்த பிறகு இவை எல்லாம் எளிதாக சரியாகி விடும் என நினைத்திருக்கலாம். ஆனால், உண்மையில் அப்படி சரியாகி விடாது. உங்கள் குழந்தை கருவில் பாதுகாப்பாக இருந்ததால், நீங்கள் அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இப்போது குழந்தை பிறந்து கையில் இருப்பதால், உங்கள் முழு கவனமும் குழந்தையை சுற்றி எப்போதும் இருந்து கொண்டு இருக்கும்.

நீங்கள் இப்போது உங்கள் பிறந்த குழந்தைக்காக, உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை விட்டு கொடுக்க வேண்டியிருக்கும். உங்களது நாட்களையும், நேரங்களையும் குழந்தைகளுக்காகவே செலவிடுவீர்கள். உங்கள் குழந்தையின் ஒரு வயது வரை இது தொடர்கதை தான். அதன் பின் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை தொடரலாம் என்றால், அதிலும் சில சிக்கல்கள் இருக்க தான் செய்யும்.

நீங்கள் பிரசவத்திலிருந்து உங்கள் குழந்தையின் ஆறுமாதம் வரை தாய்ப்பாலும், அதன் பின் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு அட்டவணையை பின்பற்றுதல், இரண்டாவது வயதில் அவர்களின் வளர்ச்சியை கவனித்தல் என குழந்தையின் வாழ்வில் ஒட்டி ஒன்றி போய் இருந்திருப்பீர்கள். இரண்டு வயது முடித்தவுடன் அவர்களை பள்ளிக்கு அனுப்புவது, உணவு தயாரிப்பது, அவர்களை பாதுகாப்பது என அனைத்தையும் செய்வீர்கள். அம்மாவின் பொறுப்புகள் வாழ்நாள் முழுவதும் தொடர கூடியவை. இவை பார்ப்பதற்கு எளிதாக தோன்றலாம். ஆனால், அதை செய்யும் போது மட்டுமே உணர முடியும்.

நீங்கள் சந்திக்க போகும் மோசமான உண்மை என்னவென்றால், உங்கள் கணவருடன் உடலுறவில் ஈடுபட திட்டமிட வேண்டியிருக்கும். நான் குழந்தையை காலையில் பள்ளியில் விட வேண்டும், அலுவலகம் செல்ல வேண்டும், பயண நேரம் அதிகம், அந்த வேலை இந்த வேலை என தவிர்க்காதீர்கள். இது எல்லாருடைய வாழ்விலும் நடக்க கூடிய ஒன்று தான். இந்த பிரச்சனைகளில் நீங்கள் அனைத்து நம்பிக்கையையும் இழந்து, தாம்பத்திய வாழ்வை தவிர்த்து விடுவீர்கள். நீங்கள் உங்கள் தாம்பத்தியத்தை எப்போதும் தவிர்த்து கொண்டிருந்தால், அவை படிப்படியாக குறைந்து அமைதி நிலைக்கு சென்று மடிந்து விடும்.

உங்கள் குழந்தைக்கு ஒதுக்கும் நேரத்தில் குறைந்த அளவிலாவது உங்கள் கணவருடன் செலவிடுங்கள். குழந்தை உங்களுடன் இல்லாத நேரத்தில் நீங்கள் தன்னிச்சையாகவும், மிக நெருக்கத்துடனும் இருப்பீர்கள். உங்களது முட்டாள் தனமான அன்பு அப்போது தான் வெளிப்படும். நீங்கள் உங்கள் கணவருடன் தினசரி உடலுறவில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. உங்கள் கணவருடன் சிறிது நேரம் பேசுதல், சிரித்தல் போன்றவற்றை செய்யுங்கள். இது உங்கள் துணையுடனான நெருக்கத்தை அதிகப்படுத்தும். இவை உங்கள் வாழ்வை மீண்டும் மீட்டெடுத்து கொடுக்கும். இதன் பின் உங்கள் இலக்கு நேரத்தை பொறுத்து அமையும்.

Leave a Reply

%d bloggers like this: