குழந்தைகளுக்கான 10 சிறந்த இந்தியன் கார்ட்டூன்கள்..!!

குழந்தைகள் என்றாலே கார்ட்டூன் பிரியர்களாக தான் பெரும்பாலும் இருப்பர். குழந்தைகள் இந்த கார்ட்டூனிற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்; இதைக் கண்காணிப்பது பெற்றோரின் கடமையே! குழந்தைகளுக்கு சிறந்த கார்ட்டூன்களை அறிமுகப்படுத்த வேண்டியதும் பெற்றோரின் கடமையே! ஆகையால், பெற்றோர்களே! உங்கள் கடமையை சிறப்பாய் செய்ய, குழந்தைகள் பார்க்க வேண்டிய 10 சிறந்த கார்ட்டூன்கள் என்னென்ன என்று படித்தறியுங்கள்.. 

1. சோட்டா பீம்..!

சோட்டா பீம் குழந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டிய கார்ட்டூன் என்றே சொல்லலாம். ஏனெனில் இதில் வரும் நண்பர்கள் நட்பின் மகிமையை எளிதில் குழந்தைகளுக்கு உணர்த்திவிடுவர்; மேலும் எந்த பிரச்சனை நேர்ந்தாலும் அதை புத்திசாலித்தனத்துடன் சமாளிப்பது பற்றி, பீமின் செயல்கள் பார்த்து குழந்தைகள் அறிந்து கொள்வர்.

2. டாம் – ஜெர்ரி..

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கண்டு மகிழ்ந்து ஆனந்தம் கொள்ள உதவும் ஒரு கார்ட்டூன் என்றால் அது டாம், ஜெர்ரி தான்…! ஆகையால், குழந்தைகளை மறக்காமல் காணச் செய்யுங்கள்..

3. Mr.பீன்..

Mr.பீன் அனிமேட்டட் சீரிஸ் மற்றும் Mr.பீன் என்று இரண்டு வகைகளில் வெளிவரும்; இவை நல்ல நகைச்சுவை கார்ட்டூன்கள், குழந்தைகள் கண்டு மகிழ ஏற்றது.

4. டோரேமான்..

இதில் வரும் ரோபோட்டிக் பூனை மற்றும் நோபிடா போன்ற குணச்சித்திரங்கள் சிறந்த நட்பையும், அறிவியல் ரீதியான விஷயங்களை உணர்த்துவனவாக உள்ளன.

5. SpongeBob SquarePants

இந்த தொடரில் நண்பர்கள் சாகச செயல்களில் ஈடுபட்டு, பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் அமைந்திருக்கும்..!

6. பென் 10..

பென் 10 ல் ஒரு சிறுவன் வெளிக்கிரக வாசிகளை துவம்சம் செய்யும், சாகச செயல்கள் ஒளிபரப்பப்படும். குழந்தைகள் பார்த்து மகிழ ஏற்றது.

7. நிஞ்ஜா ஹட்டோரி..

இதில் ஒரு சோம்பேறி சிறுவனை ஆசிரியர், நண்பர்கள் என அனைவரும் சேர்ந்து, திருத்தி அவனை சாதாரண செயல்களை செய்யும் வகையிலும், அவனுக்கு உதவியாகவும் இருந்து உதவுகின்றனர். இதுவும் குழந்தைகள் பார்க்க ஏற்றது.

8. Oggy and the cockroaches

இது ஒரு வித்தியாசமான கார்ட்டூன். பெரும்பாலுமான குழந்தைகளால் விரும்பிப் பார்க்கப்படும் ஒன்று. உங்கள் குழந்தைக்கும் இந்த கார்ட்டூனை அறிமுகப்படுத்துங்கள்..

9. மிக்கி மௌஸ் கிளப் ஹவுஸ்

இந்த கார்ட்டூன், மிக்கி எலியும் அதன் நண்பர்களும் சேர்ந்து கலக்கும் அருமை நிகழ்ச்சியாகவும். பெரும்பாலுமான குழந்தைகளால் விரும்பப்படும் ஒன்று..

10. டோரா தி எஸ்ப்ளோரர்..

இந்த கார்ட்டூனில் டோரா மற்றும் அவள் தோழன் புஜ்ஜி இருவர் மற்றும் அவர்களின் பிற நண்பர்கள் சேர்ந்து பிரச்சனைகளை சரி செய்யும் விதம் அருமையாக இருக்கும். மேலும் இதில் குழந்தைகள் நிறைய புது வார்த்தைகள் கற்றுக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு மிக பிடித்த கார்ட்டூனாக டோரா விளங்குகிறது.. 

Leave a Reply

%d bloggers like this: