குழந்தைகளுக்கான 3 கஞ்சி வகைகள்..!!

குழந்தைகள் பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் அருந்தியே வாழ்ந்து வந்திருப்பர்; இதனால் அவர்கள் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் பெற்றிருப்பர், மேலும் 6 மாதங்களாக தாய்ப்பால் அருந்தியிருப்பதால், அவர்களுக்கு போர் கூட அடித்திருக்கலாம். குழந்தைகளுக்கு 6 மாத வயது ஆகிய பின்னர் நீங்கள் திட உணவுகளை, அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். நீங்கள் அளிக்கப்பபோகும் திட உணவுகள் சத்தானதாக இருக்க வேண்டும் அல்லவா? இந்த விஷயத்தில் சத்தான திட உணவுகளை தேர்ந்தெடுக்கவே இந்த பதிப்பு…! படித்து பயனடையுங்கள் தாய்மார்களே!  

1. அரிசி தானியக்கஞ்சி..!

தேவையானவை..

இயற்கை பிரவுன் அரிசி அல்லது அரிசி 500கி, ½ கப் தண்ணீர்.

செய்முறை..!

1. அரிசியை 20 நிமிடங்களுக்கு ஊற வைத்து, நன்றாக கழுவி, ஆற வைத்துக் கொள்ளவும்.

2. பின் ஆறிய வறுத்து, அதனை அரைத்துக் கொள்ளவும்.

3. தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் அரைத்த அரிசி மாவினை சேர்த்து கட்டி சேராமல் கிளறவும்.

4. கஞ்சி பதத்திற்கு வந்தவுடன் அதில் சிறிது, தாய்ப்பால் அல்லது பசும்பால் கலந்து குழந்தைக்கு அளிக்கவும்.

2. உடைந்த கோதுமை, ஓட்ஸ், ஆப்பிள் கஞ்சி..

தேவையானவை..

¼ கப் கழுவி ஊற வைத்த உடைந்த கோதுமை, ¼ கப் ஓட்ஸ், 1 கப் தோலுரிக்காது நறுக்கப்பட்ட ஆப்பிள், ¼ கப் சர்க்கரை, 2 தேக்கரண்டி வெண்ணெய், 1 கப் பால்.

செய்முறை..!

1. குக்கரில் வெண்ணெய் இட்டு, பின் அதில் உடைந்த கோதுமையை சேர்த்து 3 நிமிடங்களுக்கு வறுக்கவும்.

2. பின் அதனுடன் ஓட்ஸினை சேர்த்து 2 நிமிடங்களுக்கு கிளறவும்.

3. பின் இக்கலவையில் பால் மற்றும் 1 கப் தண்ணீரை சேர்த்து குக்கரை மூடிவிடவும்; இரண்டு விசில்கள் வரும்வரை வேக வைக்கவும்.

4. கஞ்சி பதத்திற்கு வந்தவுடன், அதில் சர்க்கரை மற்றும் ஆப்பிள் கலந்து, மசித்து குழந்தைக்கு அளிக்கவும்.

3. வாழைப்பழத்தேன் கஞ்சி..!

தேவையானவை..

1 கப் ஓட்ஸ், 2 கப் தண்ணீர், 1 மசித்த வாழைப்பழம், 2 தேக்கரண்டி தேன்.

செய்முறை..!

1. ஓட்ஸினை தண்ணீருடன் சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து, வேக வைக்கவும்.

4. பின் அதில் சிறிது, மசித்த வாழைப்பழம் சேர்த்து, கஞ்சி பதத்திற்கு மாற்றி, அதன் மீது தேனினை விரவி, குழந்தைக்கு அளிக்கவும்.

Leave a Reply

%d bloggers like this: