குழந்தைக்கு பெயர் வைத்தல்:சரியான வழி..!

குழந்தைகள் கருவில் உருவான நொடி முதல், அவர்கள் முழுமையாக உருவாகி வெளிவரும் வரை பெற்றோர்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற சூழ்நிலைகளை, வலிகளை சொல்லி மாளாது. ஆனால் அவை எல்லாவற்றையும் விட மிகக் கஷ்டமான விஷயம் குழந்தைக்கு ஏற்ற பெயரை தேர்ந்தெடுப்பது தான். அந்தக் கஷ்டமான விஷயத்தில் உங்களுக்கு உதவவே இந்த பதிப்பு..! 

1. அர்த்தம்..!

குழந்தை வாழ்க்கை முழுதும் அனைவராலும் கூப்பிடக்கூடிய அர்த்தம் கொண்டிருக்க வேண்டும் என்பதே மிகப்பெரிய ஆசை. இதற்காக அவர்கள் தேடல் என்பது எல்லையற்றது..!

2. ஒலி..! தொனி..

குழந்தையின் பெயர் சரியான தொனியில், ஒலியைக் கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் குழந்தையின் சக தோழர்கள், குழந்தையைக் கேலி, கிண்டல் செய்து மனம் உடையச் செய்யலாம்.

3. தனித்துவம்..!

குழந்தைக்கு சூட்டப்படும் பெயர் தனித்தன்மை கொண்டதாய், தனித்துவம் நிறைந்ததாய் இருத்தல் அவசியம்.

4. என்றென்றும் புதுமை..!

நீங்கள் சூட்டப்போகும் பெயர், எக்காலமானாலும் அதற்கு பொருந்தும் வகையிலும், எல்லோராலும் விரும்பப்படும் வகையிலும் இருக்க வேண்டும்.

5. பொதுப்பெயர்..!

ஆண் மற்றும் பெண் இருவருக்கும் சூட்டப்படும் பொதுப்பெயராக இல்லாது இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்..!

6. கலாச்சாரம்..

கலாச்சாரம், பரம்பரை, சாதி என்று கூறி குழந்தையின் பெயரில் அவற்றைக் காட்ட எண்ணாதீர்கள்.

மேலும் குழந்தைக்கு சூட்டப்போகும் பெயர், பிற்காலத்தில் குழந்தைக்கு பிடித்ததாகவும், அப்பெயரை சொல்லி அழைக்கும் போதெல்லாம், அது குழந்தைக்கு தன்னம்பிக்கை அளிப்பதாய் இருக்க வேண்டும்…!

Leave a Reply

%d bloggers like this: