குழந்தை பெறத் தயாராகும் உங்கள் சகோதரிக்கு தர வேண்டிய 10 சிறந்த பரிசுகள்..!!

சகோதரியாய் பிறந்த நீங்கள் வாழ்வில், சிறந்த தோழிகளாய், சகோதரிகளாய், அன்னையாய், அக்காவாய், தங்கையாய் பல முகங்களுடன் வாழ்ந்து வந்திருப்பீர். உங்கள் சகோதரி குழந்தை பெறத் தயாராகிறார் என்றால், அவரை வாழ்த்தும் வகையில், அவருக்கு உங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் நீங்கள் சிறந்த பரிசினை அளிக்கலாம். என்ன பரிசினை அளிப்பது? என்ற சந்தேகமா? இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவவே இந்த பதிப்பு..! படித்து பரிசளியுங்கள்.. 

1. தலையணை..!

கர்ப்ப காலத்தில் உறக்கம் என்பது மிக முக்கிய, அவசிய தேவை. இந்த காலகட்டத்தில் அவர்கள் உறங்க அதிக விருப்பம் கொள்வர்; அதனால், முழு உடல் தலையணை (Full body Pillow) என்பதனை வாங்கி, சகோதரிக்கு பரிசளிக்கலாம்.

2. குழந்தை வளர்ச்சி புத்தகம்..!

Baby Scrape book எனும் குழந்தை வளர்ச்சியை பதிவு செய்யும் புத்தகத்தை பரிசளிக்கலாம். இதன் மூலம் சகோதரி, தன் குழந்தையின் வளர்ச்சியை பரிசோதித்து அதை பதிவு செய்து வைத்து மகிழலாம்.

3. பாத மசாஜ்..!

பரிசு என்பது வழங்குவதாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை; நீங்கள் சகோதரிக்காக செய்வதாகவும் இருக்கலாம். கர்ப்ப காலத்தில் பெண்களின் கால்களில் அதிக வீக்கம் மற்றும் வலி ஏற்படும். அதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நீங்கள் மசாஜ் செய்து விடலாம்.

4. நாற்காலி..

உங்கள் சகோதரி குழந்தை பெற்ற பின், அவருக்கு அதிக முதுகு மற்றும் வயிற்று வலி ஏற்படலாம். அச்சமயம் அவர் படுத்தே இருக்க முடியாதல்லவா..! அவர் உட்கார்ந்து ஓய்வெடுக்க சிறந்த நாற்காலியை பரிசளிக்கலாம்.

5. பழச்சாறு..

கர்ப்ப காலத்தில், பெண்கள் அதிகம் பழச்சாறு அருந்த வேண்டியிருக்கும். அதற்கு உதவும் வகையில், பல வகைப் பழங்களைக் கொண்டு பழச்சாறு தயாரித்து உங்கள் சகோதரியின் குளிர்சாதனப் பெட்டியை நிரப்பலாம் அல்லது பழச்சாறு தயாரிக்கும் சாதனத்தை பரிசளிக்கலாம்.

6. குழந்தையின் தேவை.

பிறக்கப்போகும் குழந்தைக்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் ஆடைகளை வாங்கி, பரிசளிக்கலாம்.

7. உணவுகள்..

கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக உணவு உட்கொள்வர்; ஆகையால் அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து வழங்கலாம். இது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து, வயிறையும் மனதையும் நிரப்பும்.

8. கர்ப்பகால ஆடைகள்..

உங்கள் சகோதரிக்கு தேவைப்படும் கர்ப்பகால ஆடைகள் மற்றும் பொருட்களை வாங்கி பரிசளித்து மகிழலாம்; மகிழ்விக்கலாம்.

9. வைட்டமின் இ எண்ணெய்..

பிரசவத்திற்கு பின் ஏற்படும் வரித்தழும்பு பிரச்சனைகளில் இருந்து விடுபடும் நிவாரண மருந்து மற்றும் எண்ணெய்களை பரிசளிக்கலாம்.

10. குழந்தை…

ஏதேனும் ஒரு இரவு அல்லது ஒரு நாள் குழந்தையை நீங்கள் கவனித்துக் கொண்டு, சகோதரி தன் கணவருடன் நேரம் செலவழிக்க அல்லது ஓய்வெடுக்க வாய்ப்பு அளிக்கலாம்.

Leave a Reply

%d bloggers like this: