குழந்தை வளர்ப்பு:குழந்தை நல மருத்துவர் விளக்கும் 10 கட்டுக்கதைகள்..!

பெற்றோர்களே! குழந்தை வளர்ப்பு பற்றி பலவித கட்டுக் கதைகள் நிலவி வருகின்றன. அவற்றில் எது உண்மை எது பொய் என அறியாமல் பல பெற்றோர்கள் அவற்றை பின்பற்றி வருகின்றனர். அந்த கட்டுக் கதைகளின் உண்மை நிலையை விளக்கவே இந்த பதிப்பு.. படித்து பயனடையவும்.. 

1. காய்ச்சல் மற்றும் சளி

குழந்தைகள் குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம் உண்பதால், உண்ட உடனே காய்ச்சல் மற்றும் சளி வந்துவிடாது. குழந்தைகளின் நோய் எதிப்பு சக்தி குறைவாக இருந்தாலோ அல்லது அளவுக்கு அதிகமாக ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களை உட்கொண்டாலோ குழந்தைகள் நோய்களால் பாதிக்கப்படலாம்.

2. டெட்டனஸ் தடுப்பூசி

குழந்தைகளுக்கு சிறு அடி பட்டால் கூட டெட்டனஸ் போட்டுவிட வேண்டும் என்று பெற்றோர் எண்ணுவது தவறு. குழந்தைகளுக்கு 1 ½ , 5, 10, 16 வயதுகளில் இந்த தடுப்பூசி போடா வேண்டும். 16 வயதிற்கு பின் 10 வருடங்களுக்கு ஒருமுறை இந்த தடுப்பூசி போட்டால் போதுமானது.

3. குண்டுக் குழந்தைகள்..

குழந்தைகள் குண்டாக இருந்தால் தான் ஆரோக்கியம் என்பது முற்றிலும் தவறு. குழந்தைகள் சிறு பிராயத்திலே குண்டாக அதாவது அந்த வயதிற்கான எடையை விட அதிகமாக இருந்தால், அதை பெற்றோர் குழந்தை மிக ஆரோக்கியமாக உள்ளது என்று எண்ணி விட்டுவிடாது, குழந்தைக்கு சரியான உணவினை அளித்து சரியான உடல் எடைக்கு கொண்டு வர வேண்டும்.

4. பல் துலக்குதல்..!

குழந்தை பருவத்தில் பல் துலக்குவது அவ்வளவு முக்கியமானதல்ல; பெரியவர் ஆனவுடன் துலக்கிக் கொள்ளலாம் என்பது மிகப்பெரிய முட்டாள்தனம். ஏனெனில் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் பழக்கங்களே அவர்களின் இறுதி காலம் வரை தொடரும் மற்றும் குழந்தை பருவத்திலேயே பல் துலக்குவது அவர்களின் பற்களின் வலிமையை அதிகரிக்கும்.

5. குழந்தையின் உயரம்..

குழந்தை உயரம் குறைவாக இருந்தால், இணைக்கம்பிகளை பிடித்து தொங்குவது, நீச்சல் செய்ய வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடச் செய்தால் அவர்கள் உயரமாகி விடுவார்கள் என்பது துளி கூட உண்மை இல்லாத கட்டுக்கதையே.

6. இடக்கை பழக்கம்..

குழந்தைகளுக்கு இடக்கை பழக்கம் இருப்பது தவறான விஷயம் என்று நம்பப்படுகிறது. குழந்தைகள் எந்த கை கொண்டு செயல்கள் செய்ய எத்தனித்தாலும் அது சரியே! அவர்களுக்கு எது எளிதாக வருகிறதோ, அதை அவர்கள் பின்பற்றலாம்; பல சாதனை மனிதர்கள் இடக்கை பழக்கம் உடைவார்களே!

7. பிறப்புறுப்பு..

குழந்தைகளின் பிறப்புறுப்பினை அடிக்கடி அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற மிகப்பெரிய கதை நம்மிடையே நிலவி வருகிறது. இது பொய்யே. குழந்தைகளுக்கு ஏதேனும் அறுவை சிகிச்சை பிறப்புறுப்பில் நடந்திருந்தால், காயம் இருந்தால், அதிக அழுக்கு இருந்தால் கவனம் தேவை.

8. குழந்தையின் சாப்பாடு..

தாய்ப்பால் நிறுத்திய பின் குழந்தை உண்ணாது அழுதால், அதற்கு குழந்தை தாய்ப்பாலுக்கு அடிமையாகிவிட்டது; குழந்தைக்கு இந்த உணவுகள் பிடிக்கவில்லை என்று அர்த்தமில்லை. குழந்தைகள் இத்தனை நாள் பாலையே அருந்திவிட்டதால், திடீரென திட உணவு அருந்தும் போது அதற்கு எப்படி உண்பது என்று தெரியாது; மேலும் உணவின் சுவை என பல காரணம் இருக்கலாம்.

9. தலைக்குளியல்..

குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டு விட்டால், அதன்பின் இளநீர், பால், வாழைப்பழம் கொடுக்கக்கூடாது என்ற கதை உள்ளது. இது உண்மையல்ல. குழந்தைக்கு ஓத்துக் கொள்ளுமானால், நீங்கள் தாராளமாக அளிக்கலாம்.

10. புழுக்கடி..

குழந்தைக்கு புழுக்கடி இருக்கிறதா என்பதனை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும் இல்லையேல் ஆபத்து என்பதெல்லாம் வெறும் கதை. குழந்தைக்கு 1 ½ அல்லது 2 வயது ஆகும் வரை மாதம் ஒருமுறை குழந்தைக்கு புழுக்கடி பிரச்சனை உள்ளதா என்று பரிசோதிக்கவும்.

ஆகையால், கேட்பன எல்லாம் உண்மை என நம்பாமல், தீர விசாரித்து, படித்தறிந்து, மருத்துவரை ஆலோசித்து எந்த செயலையும், மருந்தையும் குழந்தைக்கு பின்பற்ற ஆரம்பியுங்கள்..! குழந்தைக்கு சிறந்த பெற்றோராக திகழ முயலுங்கள்..

Leave a Reply

%d bloggers like this: