உங்கள்

இன்றைய கால குழந்தைகள் செல்போன் மற்றும் கணினிக்கு அடிமையாகி, வீடியோ கேம் விளையாட்டுக்கள் மற்றும் படங்கள் என இவையே உலகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; அப்படி வீட்டினுள்ளேயே அடைந்து, ஏதேனும் துரித உணவுகளை உண்டுகொண்டு, அலைபேசியில் மூழ்கிக் கிடக்கிறார்கள், நம் இன்றைய குழந்தைச் செல்வங்கள்..!

இவ்விதம் குழந்தைகளை ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழச் செய்தது, தூண்டியது பெற்றோரின் தவறான வளர்ப்புமுறையே! இப்பொழுது அந்த தவறான வளர்ப்பில், வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளை, அவர்தம் பெற்றோர்கள் தான் நல்வழிப்படுத்த வேண்டும். குழந்தைகளை எப்படி நல்வழிப்படுத்துவது? என்ற சந்தேகமா.. குழந்தைகளை தங்கள் பள்ளி நேரம் தவிர்த்து, இதர நேரங்களில், மற்ற செயல்களில் ஈடுபட, நீங்கள் அவர்களை தூண்ட வேண்டும்.

நீச்சல், யோகா, கராத்தே, ஓவியம், இசை, இசைக்கருவி வாசிப்பு என ஏதேனும் குழந்தைக்கு பிடித்த ஒரு வகுப்புகளில் சேர்த்து, குழந்தைகள் புதிதாக கற்கவும், அவர்கள் நேரம் சரியான வழியில் செலவாகவும், அவர்கள் வாழ்வு வளமுடையவும் ஒரு பெற்றோராய் உங்கள் கடமையை ஆற்ற முயலுங்கள்..!

குழந்தைகள் தங்கள் கிரியேட்டிவ் திறன் என்று சொல்லப்படும் கற்பனை மற்றும் உருவாக்கத்திறன் மேம்படும் வகையில், சில செயல்களை நீங்கள் அறிமுகப்படுத்தலாம் அல்லது அவர்களையே காணச் செய்து, அவர்களின் ஆர்வத்தைத் தூண்டி அவர்களே அச்செயல்களில் ஈடுபடச் செய்யலாம்..!

அப்படி குழந்தைகளின் உருவாக்கத்திறனை மேம்படுத்த உதவும் காணொளியை பதிப்போடு இணைத்துள்ளோம்; இக்காணொளியை நீங்கள் கண்டு, குழந்தைகளை காணச் செய்து, அவர்கள் திறனை மேம்படுத்த முயல்வீராக..!!! 

Leave a Reply

%d bloggers like this: