குழந்தைகளின் பற்களை பற்றிய அம்மாக்களின் அலட்சியம்..!

குழந்தையின் பொக்கை வாய்ச் சிரிப்புக்கு மயங்காதவர் யாருமே இருக்க முடியாது. குழந்தையின் பற்களை ஆரம்பத்திலிருந்து பராமரிக்க வேண்டியது அவசியம்.இதில் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தாய்ப்பால் குடிக்கும் பச்சிளம் குழந்தைகளின் பல் பராமரிப்பு பற்றிய சில அத்தியாவசியத் தகவல்கள் மற்றும் இங்கு ஏன் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கும்போதே சொத்தையாக வளர்கிறது என்பதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். 

தாய்ப்பால் குடித்த பிறகு:

குழந்தை பால் குடித்து முடித்த ஒவ்வொரு முறையுமே, நம் விரலில் தூய்மையான துணியை சுற்றி குழந்தையின் ஈறுகளை நன்றாக சுத்தம் செய்துவிடவேண்டும்.

பால் பற்கள்: 

குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைத்ததும், அவர்களுக்கென இருக்கும் பிரத்தியேக டூத் பிரஷ், பேஸ்ட் கொண்டு தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல் துலக்கிவிடவும். பின்னர் பெரியவர்கள் பயன்படுத்தும் டங்க் க்ளீனரை பயன்படுத்தாமல், தூய்மையான துணியாலோ அல்லது குழந்தைக்கு பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ் கொண்டோ நாக்கினை சுத்தம் செய்துவிடலாம்.

அம்மாக்கள் செய்யும் தவறு: 

பெரும்பாலான அம்மாகள், இரவு நேரத்தில் பால் புட்டியை வாயில் வைத்தபடியே குழந்தைகளை தூங்க வைப்பார்கள். அதனால் இரவு முழுக்க குழந்தையின் பற்களில் பாலில் இருக்கும் இனிப்பு, பாக்டீரியாக்களுடன் வினைபுரிய வாய்ப்பிருக்கிறது. இச்செயல்பாடு தொடர்ந்தால், சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பல் சொத்தை உள்ளிட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது.

நிரந்தரப் பல்: 

சிறுவயதில் குழந்தைகளுக்கு பற்களில் பிரச்சனை உண்டானால் நிரந்த பற்கள் முளைக்கும்போது சரியாகிவிடும் என குழந்தைகளின் பல் பராமரிப்பில் பல பெற்றோர்கள் கவனம் செலுத்த மாட்டார்கள். இது முற்றிலும் தவறானது. பால் பற்கள், நிரந்தர பற்களின் சக்தியையும் தாங்கி வளர்கின்றன என்பதால், இதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நடவடிக்கைகள்: 

வாயில் விரல் வைத்து சூப்புவது, நாக்கினை இரண்டு பற்களுக்கு இடைபட்ட பகுதியில் அடிக்கடி வைத்துக்கொள்வது போன்ற செயல்பாடுகளை பெரும்பாலான குழந்தைகள் செய்வார்கள். இதனால் அவர்கள் பல் வரிசை சீரற்றதாகவும், முக அமைப்பு மாறவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளின் இந்த நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: