குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை..!

குழந்தை பிறப்பு முதல் மனிதனின் இறப்பு வரை பல சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். குழந்தை பிறந்ததும் அவர்களுக்கு சர்க்கரை தண்ணீர் கொடுத்தல், பெயர் சூட்டுதல், மொட்டை அடித்தல், பிறந்த நாள் கொண்டாட்டம், காது குத்துதல் மற்றும் திருமணம் என பல சடங்குகளும், சம்பிரதாயங்களும் நம் வாழ்வில் கட்டாயம் இடம் பெறுகின்றன. குழந்தைக்கான பெயரை தேடி பெயர் சூட்டி முடித்த கொஞ்ச காலத்திலேயே, மீண்டும் செய்ய வேண்டிய சடங்கு குழந்தைக்கு காது குத்துவது. இதை ஒவ்வொருவரும் அவர்களின் முறைப்படி செய்வார்கள். எந்த முறைப்படி செய்தாலும், நாம் சிலவற்றை தவறாமல் கவனிக்க வேண்டியது அவசியம். இங்கு அவற்றை பற்றி பார்க்கலாம். 

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

1 குழந்தைக்கு காது குத்தலாம் என முடிவு செய்யும் போது, அவர்களுக்கு போடா வேண்டிய தடுப்பூசிகள் அனைத்தும் முடித்த பின் காது குத்துவது சிறந்தது. இதனால் அவர்களுக்கு ஏற்படும் நோய் தொற்று மற்றும் காய்ச்சலை தவிர்க்கலாம்.

2 காது குத்தும் இடம் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு குறைவாக இருப்பதால், அவர்கள் நோய் தொற்றுகளால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

3 குழந்தைக்கு காது குத்தும் போது சிறிது வலி நிவாரணியை கொடுத்தால், அதிக அளவில் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

4 குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் தோடு தொங்குவது போல இருந்தால், அவற்றை இழுத்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது அவர்களுக்கு வலியை ஏற்படுத்தும். சிறிய தோடுகளை குழந்தைகளுக்கு அணிவிப்பது நல்லது.

5 குழந்தைகளுக்கு காது குத்தி முடித்த உடன் சிறிது ஹைட்ரஜன் பெராக்சைடு அல்லது ஆல்கஹாலை பஞ்சில் நனைத்து காது குத்தப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். இது சிறிது எரிச்சலை ஏற்படுத்தினாலும், நோய் தொற்றிலிருந்து குழந்தையை பாதுகாக்கும்.

6 காது குத்த பயன்படுத்திய கருவி சுத்தமாக இல்லை என்றாலோ அல்லது அவர்களுக்கு அணிவிக்கும் தோடு தரமானதாக இல்லை என்றாலோ, கிருமிகளால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

7 குழந்தைகளின் கம்மலை தினம் இரண்டு முறை சுற்றி விட வேண்டும். இது போல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு செய்து வர வேண்டும். ஒரு வருடத்திற்கு கம்மலை மாற்ற கூடாது. மேலும் அங்கு தேங்காய் எண்ணெய் வைத்து வர வேண்டும்.

8 குழந்தைகளின் காதணிகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இது குழந்தைகளை பாதிக்கும்.

காது குத்துவத்தின் நன்மைகள்

1 இனப்பெருக்க உறுப்புகளை பராமரிக்கவும், ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்கும் உதவுகின்றன.

2 மூளை வளர்ச்சி மற்றும் சிறந்த கண் பார்வைக்கு உதவுகின்றன.

3 காதுகளை ஆரோக்கியமாக வைப்பதற்கு அவசியமாகின்றன.

4 இது கவலை, மன சுழற்சி மற்றும் பதட்டம் போன்ற நிலைகளிலிருந்து பாதுகாக்கிறது.

5 செரிமான மண்டலத்தை சரி வர இயங்க வைக்க பெரிதும் உதவுகிறது.

6 காது குத்தும் போது ஆண் குழந்தைகளுக்கு வலது பக்கமும், பெண் குழந்தைக்கு இடது பக்கமும் முதலில் குத்தப்படுகிறது. காதுகள் மாற்றி குத்தப்பட்டால், இனப்பெருக்க உறுப்பு பிரச்சனையை ஏற்படுத்தும்.

Leave a Reply

%d bloggers like this: