குழந்தைகள் ஏன் இரவில் அழுகிறார்கள்..?

குழந்தைகள் இரவு முழுவதும் அழுவது பெற்றோரை சோர்வடையவும், அவர்களுக்கு மனக்கவலையையும் ஏற்படுத்தும். பெரும்பாலும் குழந்தைகள் உங்களை தொடர்பு கொள்ளவும், உங்களது கவனத்தை பெறவுமே அழுகிறார்கள். இதனாலேயே குழந்தைகள் சௌகர்யமாக உணரும் போது அழுகையை நிறுத்தி விடுகிறார்கள். நீங்கள் என்ன செய்தும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை என்றால், அவர்களுக்கு எதோ பிரச்சனை என்று அர்த்தம். 

குழந்தைகள் இரவில் அழுவது சாதாரணமான ஒன்று தான். குழந்தைகள் அவர்களின் தேவையை பெறுவதற்காகவே அழுகிறார்கள். அவர்கள் கருவறையில் இருந்ததால், அவர்களுக்கு இரவு பகல் வித்தியாசம் தெரியாது. இதனாலேயே, அவர்கள் இரவிலும் எழுந்து அழுகிறார்கள். அவர்கள் அழுகையின் மூலம் சொல்ல வரும் விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

1 பசி

குழந்தையின் பசிக்கான அறிகுறிகளை அறிந்து கொள்வது, அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவூட்ட உதவும் மற்றும் குழந்தையின் பசி அழுகையை எட்டும் முன் தவிர்த்திடலாம். குழந்தைகள் சோர்வாக இருத்தல், வாயை சப்புதல் மற்றும் வாயில் கை வைத்தல் போன்றவை பசியின் அறிகுறியாகும்.

2 வயிற்று வலி

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உபாதை அவர்களை அதிகமாக அழச் செய்யும். நீங்கள் உணவூட்டிய பிறகும் உங்கள் குழந்தை அழுதால், அவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக மருத்துவரை அணுகி என்ன பிரச்சனை என்பதை கண்டறிந்து, அதற்கான மருத்துவ ஆலோசனை பெறுங்கள். வாயு கோளாறை தவிர்க்கும் மருந்தையோ அல்லது கிரேப் வாட்டரையோ மருத்துவர் பரிந்துரைக்காமல் கொடுப்பதை தவிர்க்கவும்.

3 அசுத்தமான நாப்கின்

சில குழந்தைகள் அசுத்தமான நாப்கின்களை வைத்திருப்பதை சகித்துக் கொள்ள மாட்டார்கள். எனவே, அழுகை மூலமாக நம்மை தொடர்பு கொண்டு, அவற்றை மாற்ற சொல்வார்கள்.

4 தூக்கம்

சோர்வுடன் அரைத் தூக்கத்தில் இருக்கும் குழந்தைகள் தூங்கி விடுவார்கள் என நீங்கள் நினைத்தால், அது தவறு. குழந்தைகள் தூங்குவதற்கு பதிலாக அதிக சோர்வின் காரணமாக அழ துவங்கி விடுவார்கள்.

5 அதிக வெப்பநிலை

குழந்தைகள் அறையின் வெப்பநிலையை அசௌகரியமாக உணர்ந்தால், அழ துவங்கி விடுவார்கள். குழந்தைகள் மிதமான வெப்பநிலையிலேயே இருக்க விரும்புவார்கள், அதிக வெப்ப நிலை என்றால் அவர்கள் அதை அறிந்து கொள்வார்கள். குழந்தைகள் அதிக வெப்ப நிலையை உணர்த்து அழும் போது இருக்கும் முக தோற்றம், அவர்கள் குளிரினால் அழும் போது இருக்கும் முகத்தோற்றத்தை விட வித்தியாசமாக இருக்கும்.

6 பல் வலி

பல் முளைத்தல் என்பது குழந்தைகளுக்கு வலியை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. பற்கள் ஈறுகளிலிருந்து வெளிவர அதிக அளவிலான வலியை அவர்களுக்கு ஏற்படுத்தும். இந்த வலியானது அவர்களை அதிகமாக அழச் செய்யும். உங்கள் கையை குழந்தையின் பல் ஈறுகளில் வைத்து உணர முயற்சி செய்யுங்கள். பல் முளைக்க போகும் இடம் கடின தன்மையுடன் இருக்கும்.

7 உடல் நல பிரச்சனை

குழந்தையின் எல்லா அவசிய தேவைகளை சரி செய்த பின்னும் குழந்தை அழுதால், அவர்களுக்கு உடல் நல பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தையின் உடல் வெப்ப நிலையை பரிசோதியுங்கள். குழந்தையின் உடல் நல கோளாறுகளுக்கான அறிகுறிகளை அறிந்து வைத்திருங்கள். உங்களால் கண்டறிய முடியாத போது மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். 

Leave a Reply

%d bloggers like this: