திருமண உறவு ஏற்படுத்தும் நன்மைகள்..!!

உறவுகள் என்றாலே மகிழ்ச்சியும் சேர்ந்தே வரும். அதுவும் கணவன், மனைவி உறவு சரியாக அமைந்து விட்டால் இன்னும் மகிழ்ச்சி தான். இந்த உறவினால் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் மேம்படுகிறது. பல ஆய்வுகள் ஆரோக்கியமான திருமண உறவானது மனவளத்தை மேம்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இளம் தம்பதிகளின் ரோமேண்டிக்கான காதலானது ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. திருமணம் நம்மில் ஏற்படுத்தும் மாற்றங்கள், அது நமக்கு அளிக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிப்பில் பார்க்கலாமா நண்பர்களே..! 

ஆய்வு 

தனக்கு ஏற்ற, தன்னை முழுவதும் புரிந்து கொண்டு நடக்கக்கூடிய, மனப்பொருத்தம் நிறைந்த துணை கிடைப்பது அறிது தான் என்றாலும், இவ்வாறான உறவு அமைவது உங்களது மன நலனுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மன அழுத்தம் 

இந்தியாவில் 5 கோடி பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இது தற்கொலைகள் நிகழ முக்கிய காரணமாகவும் உள்ளதாம். ஒரு நல்ல உறவால் மட்டுமே ஒருவரை தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்க முடியும். காதலில் இருக்கும் இளைஞர்களிடன் இது பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஆரோக்கியமான காதலால் மன அழுத்தம் குறைகிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோபத்தை கட்டுப்படுத்தும் திறன் 

நிலையான உறவில் இருப்பவர்களுக்கு வாழ்க்கையை சரியாக நடத்துவதில், பெரிதாக எந்த தடுமாற்றமும் இருப்பதில்லை. ஆனால், காதல் முறிவில் உள்ளவர்கள் மற்றும் உறவில் இணையாதவர்களுக்கு தங்களது கோபம் மற்றும் வாழ்க்கையை நடத்துவதில் சிறிது சிரமம் இருக்கிறது. உறவில் உள்ளவர்கள் தங்களது கோபத்தை எளிதில் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள்.

தன்னம்பிகை 

காதல் உறவில் இருப்பவர்கள் எளிதில் மற்றவர்களுடன் நல்ல நட்பில் இணைந்து விடுகிறார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் உடை மற்றும் வாயை துர்நாற்றம் வீசாமல் பார்த்துக்கொள்வது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் உறவில் இல்லாதவர்கள், இதில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

ஆரோக்கியமான உறவு 

ஆரோக்கியமான உறவு கணவன் மனைவி இருவருக்கு இடையே மட்டுமல்ல, குழந்தைகள், பெற்றோர்கள் என யாரிடம் இருந்தாலும், அந்த அன்பானது நமது மன வளத்தை மேம்படுத்துகிறது. இதனால் பல நோய்களில் இருந்து தப்பிக்கவும் முடிகிறது.

Leave a Reply

%d bloggers like this: