புதிய அம்மாக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்..!

கர்ப்ப காலம் மற்றும் பிரசவம் என பலவற்றை கடந்து, நீங்கள் இப்போது உங்கள் குழந்தைக்கு தாயாகி இருப்பீர்கள். உங்கள் கனவு நனவாகி, உங்கள் அழகான குழந்தை உங்கள் கைகளில் இருக்கும். இதற்காக நீங்களும் உங்கள் உடலும் பலவற்றை இழந்திருப்பீர்கள். உங்களது 9 மாத கர்ப்பம் கடுமையான மற்றும் கடினமான ஒன்று. ஆனால், அதன் பயன்தான் உங்களுக்கு உலகினும் சிறந்த உங்கள் குழந்தை. 

நீங்கள் இப்போது தாய்மையின் அழகிய தருணத்தில் பயணித்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் குழந்தையின் மீது மட்டுமே உங்கள் கவனம் இருக்கும். நீங்கள் இப்போது உங்கள் உடல்நலனிலும் அக்கறை எடுத்துகொள்ள வேண்டிய தருணம். இங்கு புதிய அம்மாக்களுக்கான தேவையான 5 விஷயங்களை பார்க்கலாம்.

1 தண்ணீர்

நீங்கள் இப்போது அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இது மனித உடலுக்கு தேவைப்பட கூடிய முக்கியமான திரவமாகும். தண்ணீர் இல்லாமல் மனிதனால் உயிர்வாழ முடியாது. எனவே உடலின் ஈரப்பதத்தை தக்க வைக்க தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். பொதுவாக, மனித உடல் உறிஞ்சுதல், சிறுநீர் மற்றும் உடல் வெப்பம் போன்ற காரணத்தால் நீரை இழக்கிறது. குழந்தை பிறப்பிற்கு பின், உங்கள் குழந்தையும் உங்கள் உடலின் நீரை தாய்ப்பால் மூலமாக எடுத்து கொள்ளும். இதனால் நீங்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

2 உள்ளுணர்வை கேளுங்கள்

குழந்தை வளர்ப்பு என்பது எளிதான ஒன்றல்ல என்பது கடவுளுக்கும் தெரிந்த ஒன்று. இதனால் தான் அவர்களுக்கு சரியாக முடிவெடுக்கும் திறனை கொடுத்திருக்கிறார். இந்த ஆறாம் அறிவு அற்புதமான ஒன்று மற்றும் இது உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது. ஒன்றிரண்டு முறை தவறாகலாம். ஆனால், பெரும்பாலும் சரியாகவே இருக்கும். அந்த உணர்வை நம்புங்கள் மற்றும் பின்பற்றுங்கள்.

3 தூக்கம்

தூக்கம் என்பது அவசியமான ஒன்று. ஆனால் உங்களால் இரவில் கட்டாயம் தூங்க முடியாது. உங்களை மகிழ்விக்க வந்த செல்வம் இப்போது, அப்புறம் என்று அழுது உங்களை எழுப்பி கொண்டிருக்கும். ஆனால், அது விரைவில் உங்களுக்கு பழகி விடும். அப்பாவியான குழந்தைக்கு உங்கள் சோர்வை பற்றி எல்லாம் தெரியாததால் அழுத கொண்டே இருப்பார்கள். அவற்றை புரிந்து கொள்ள சில காலம் எடுக்கும். அது வரை குழந்தை தூங்கும் போது, நீங்களும் தூங்கி ஓய்வெடுங்கள். சில நேரங்களில் உங்கள் கணவரின் உதவியை நாடுங்கள்.

4 மருத்துவ உதவி

உங்களது உடல்நலனிலோ அல்லது குழந்தையின் உடல்நலனிலோ ஏதேனும் மாற்றம் தெரிந்தால் வெறுப்படையாமல் மருத்துவரை கூப்பிடுங்கள். அதை பற்றி கவலைபடவோ அல்லது மனதில் கொள்ளவோ ஏதுமில்லை. அவர்களுக்கு நாளின் எந்த நேரத்திலும் அம்மாக்கள் தொடர்ந்து அழைத்து என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று கேட்பதெல்லாம் பழகி இருக்கும். எனவே, என்ன உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் மருத்துவரின் உதவியை நாடுங்கள். இது அவர்களின் பணியுடன் சேர்ந்த ஒன்று.

5 அமைதி

இது உங்களுக்கு புது அனுபவமாக இருப்பதால், கட்டாயம் பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் பயத்துடன் பார்ப்பது குழந்தையை மோசமடைய செய்வதோடு, அவர்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியதையும் பாதிக்கும். நீங்கள் பதட்டமான சூழலை உணரும் போது மூச்சை இழுத்து விட்டு உங்களை அமைதிப்படுத்தி கொள்ளுங்கள். உங்களால் முடிந்தவரை சரி செய்ய பாருங்கள், முடியாத சமயத்தில் மற்றவரின் உதவியை நாடுங்கள். நீங்கள் புதிய அம்மாவாக இருப்பதால், நீங்கள் அனைத்தையும் சரியாக செய்ய வேண்டும் என யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். சில தவறுகள் நேர்ந்தாலும் பதறாமல், அதை சரி செய்வதற்கான தீர்வை தேடுங்கள்.

தாய்மை என்பது ரோலர் ஹோஸ்டர் போல, நீங்கள் அதில் உட்கார்ந்தே தான் ஆகவேண்டும். அதே போல் உங்கள் வாழ்விலும் ஏற்ற, இறங்கங்கள் இருக்கும். ஆனால், இவை உங்கள் வாழ்வின் சிறந்த அனுபவங்களை கொடுத்திருக்கும். நீங்கள் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தாலும், உங்கள் குழந்தையின் புன்னகையை பார்க்கும் போது அனைத்தும் மறைந்திடும். 

Leave a Reply

%d bloggers like this: