தாய்ப்பாலூட்டும் போது தவிர்க்க வேண்டிய பழங்கள்..!

குழந்தை கருவில் இருக்கும் போதே, செய்ய கூடியவை செய்ய கூடாதவை பற்றி பட்டியலிட துவங்கி விடுவார்கள். இது குழந்தை பிறந்த பிறகும் தொடர கூடிய ஒன்று. எதை எப்படி செய்ய வேண்டும் என நமக்கு கற்று கொடுப்பவர்கள், எப்படி செய்ய கூடாது என்பதை கற்று கொடுப்பதில்லை. தாய்ப்பாலூட்டும் போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் பழங்கள் வாங்கி வந்து தருவார்கள், பழங்கள் ஆரோக்கியமானவை என நாமும் சாப்பிடுவோம். ஆனால், தாய்ப்பாலூட்டும் போது பெண்கள் சாப்பிட கூடாதவை பற்றி அறிந்து வைத்து கொள்ளுதல் அவசியம். இங்கு தாய்ப்பாலூட்டும் போது தவிர்க்க வேண்டிய பழங்கள் என்ன என்பதை பார்க்கலாம். 

1 சிட்ரஸ் பழங்கள்

அனைவராலும் பெரும்பாலும் விரும்பப்படும் சிட்ரஸ் நிறைந்த பழங்கள் ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை ஆகியவை. இவற்றில் அதிக அளவில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்திருப்பதோடு நமக்கு புத்துணர்வை ஏற்படுத்துகின்றன. ஆனால், சிட்ரஸ் பழங்களில் இருக்கும் அமிலங்கள் தாய்ப்பாலில் கலந்து குழந்தைக்கு வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும். சிட்ரஸ் அமிலம் தாய்ப்பாலில் கலந்து கார சுவையை கொடுக்கிறது. சில குழந்தைகள் இதை பொருட்படுத்துவதில்லை. ஆனால் சில குழந்தைகள் வாந்தி எடுப்பார்கள்.

2 ஸ்ட்ராபெர்ரி

இது தாய்ப்பாலில் கலந்து அதிக அளவில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவில் சேரும். உங்கள் குடும்பத்தில் ஸ்ட்ராபெர்ரி ஒவ்வாமை இருந்தால், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த உடனேயே அலர்ஜியை ஏற்படுத்தும். வாயு கோளாறு, வயிற்று போக்கு, சோர்வு மற்றும் சில குழந்தைகளுக்கு தோளில் தடிப்பு ஏற்படுதல் போன்றவை இதன் அறிகுறியாகும்.

3 அன்னாசி பழம்

அன்னாசி பழம் மற்றும் அதன் சாறில் நிறைந்துள்ள அமிலங்கள் குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். குறிப்பாக நாப்கின் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.

4 கிவி பழம்

அதிக அளவில் சத்துக்கள் நிறைந்த பழமாக இருந்தாலும், தாய்ப்பாலூட்டும் போது கிவி பழத்தை சாப்பிடுவது, குழந்தைக்கு வாயு கோளாறை ஏற்படுத்தும்.

5 செர்ரி

அதிக அளவில் செர்ரி பழங்களை சாப்பிடுவது சில விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் இது மலமிளக்கியாக செயல்படுவதால், குழந்தைகளுக்கு வாயு கோளாறு மற்றும் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும்.

6 உலர்ந்த பிளம்ஸ் 

இதுவும் மலமிளக்கியாக செயல் பட கூடிய ஒன்று தான். தாய்ப்பாலூட்டும் போது இவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வது குழந்தைக்கு அடிக்கடி நாப்கின் மாற்ற செய்யும்.

Leave a Reply

%d bloggers like this: