கருத்தடை மாத்திரையினால் உண்டான விளைவு..!

கருத்தரிக்க விரும்பாத தம்பதிகள், கருத்தரிப்பதை தடுக்க நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனால், பலரும் ஆணுறையை விட அதிகம் கருத்தடை மாத்திரைகள் தான் பயன்படுத்துகிறார்கள். இதனால் பெண்களின் உடல்நலனில் நிறைய குறைபாடுகள் ஏற்படுகின்றன.

அதிகமாக கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் எதிர்காலத்தில் நீங்கள் விரும்பினால் கூட கருத்தரிக்க முடியாத அபாயம் ஏற்படலாம். இது மட்டுமின்றி கருத்தடை மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்தினால் ஏராளமான பக்கவிளைவுகளும் ஏற்படும்.

எப்படி செயல்படுகிறது ? :

எப்படி செயல்படுகிறது ? :

கர்ப்பப்பைவாய் பகுதியில் ஒருவகையான திரவம் இருக்கும். கருமுட்டை வெடிக்கிற தருணத்தில் அது மிகவும் சன்னமாக மாறிவிடும். இந்த எமர்ஜென்சி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உயிரணு உள்ளே செல்ல முடியாத அளவுக்கு அது அடர்த்தியாக மாறும்.

அதனால் கருமுட்டை வெடிப்பது தவிர்க்கப்படுகிறது அல்லது தாமதப்படுகிறது.

மாத்திரை வகைகள் :

மாத்திரை வகைகள் :

கருத்தடை மாத்திரைகளில் புரொஜெஸ்ட்ரோன் மட்டும் சேர்த்தது, ஈஸ்ட்ரோஜென் மட்டும் சேர்த்தது, இரண்டும் கலந்தது என மூன்று வகைகள் கிடைக்கின்றன. கடைகளில் பெரும்பாலும் புரொஜெஸ்ட்ரோன் மட்டும் சேர்த்ததுதான் கிடைக்கிறது. இதில் யாருக்கு எந்த வகையான மாத்திரையை அளிக்க வேண்டும் என்று மருத்துவர் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

தொற்று :

தொற்று :

நீரிழிவு நோயுள்ள பெண்கள் அதிகமாக கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் திறன் குறைந்து ஈஸ்ட் தொற்று ஏற்பட வாய்புகள் இருக்கின்றன.

பார்வை :

பார்வை :

கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் கண் பார்வையை வெகுவாக பாதிக்கிறது. சில அறிகுறிகள் உங்கள் கண்ணை வறண்டு போன மாதிரி உணர வைக்கும், இது கண் சார்ந்த பெரிய பிரச்சனையின் ஆரம்பமாக இருக்கலாம்.

கட்டி :

கட்டி :

இரத்த கட்டிகள் ஏற்படுவது என்பது கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் மிகவும் அரிதாக ஏற்பட கூடிய பக்க விளைவாகும். இதய வலி, சுவாசிப்பதில் சிரமம், போன்றவை நுரையீரல் அல்லது இதயத்தில் இரத்த கட்டிகள் ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள். காலில் வலி அல்லது வீக்கம் ஏற்படுதல் போன்றவை காலின் கீழ் பகுதியில் இரத்த கட்டி ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள்.

தலைவலி :

தலைவலி :

அதிகமாக கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதால் ஒற்றை தலைவலி அடிக்கடி ஏற்படும். கருத்தடை மாத்திரையினால் ஈஸ்ட்ரோஜெனில் ஏற்படும் குறைபாடு தான் இதற்கு காரணம்.

மன அழுத்தம் :

மன அழுத்தம் :

பெண்கள் அதிகம் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதால் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்ஸில் ஏற்படும் சமநிலை இன்மையின் காரணமாக தான் இவ்வாறு நடக்கிறது.

அதீத வலி :

அதீத வலி :

கருத்தடை மாத்திரைகள் அதிகம் உட்கொள்வதால் கீழ் இடுப்பு பகுதியில், உடலுறவுக் கொள்ளும் போது வலி ஏற்படும். கருத்தடை மாத்திரையின் விளைவால் ஈஸ்ட்ரோஜெனில் ஏற்படும் குறைபாடினால் தான் இந்த வலி ஏற்படுகிறது.

Leave a Reply

%d bloggers like this: