குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் நிலைகள்..!

குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு. இது மற்ற செயல்களை போல் இல்லாமல், பயிற்சியின் மூலம் உங்களை சரியாக செய்ய வைத்து விடும். தாய்ப்பால் உருவாவது என்பது புதிய தாய்மார்களுக்கும் ஒரு பெரிய செய்யல்ல. ஆனால், குழந்தைக்கு எப்போது, எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை அவர்களால் துல்லியமாக அறிந்து கொள்ள முடியாது. ஆனால், காலப்போக்கில் கற்று கொண்டு கைதேர்ந்தவர்களாகி விடுவார்கள். முதல் சில நேரங்களில் அபாயகரமானதாகவும், வித்தியாசமாக தோன்றினாலும், விரைவில் பழகி கொள்வீர்கள். இங்கு குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் நிலைகள் பற்றி பார்க்கலாம்.

1 தொட்டில் நிலை

இந்த நிலையில் உங்கள் குழந்தையை பிடியுங்கள். குழந்தையின் தலை வளைந்திருக்கும் உங்கள் முழங்கையில் சரியாக பொருந்தி இருக்கும் நிலையில் குழந்தைக்கு அருகில் உங்கள் மார்பகம் இருக்கும் படி குழந்தையின் உடலோடு சேர்த்து பிடியுங்கள். மற்றொரு கையில் உங்களது மார்பை பிடித்து, உங்கள் குழந்தையின் மூக்கு உங்கள் மார்பகத்தை தொடும் இடத்தில் கட்டை விரலை வையுங்கள். மார்பகத்தில் உங்கள் குழந்தையின் கன்னம் தொடும் இடத்தில், ஆள்காட்டி விரலை வையுங்கள். இப்போது உங்களது மார்பகத்தை மெல்ல நகற்றினால், மார்பக காம்பு உங்கள் குழந்தையின் வாயினுள் சென்று விடும். இந்த நிலையில் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டலாம்.

2 குறுக்கு நிலை

தாய்ப்பாலூட்டும் மார்பகத்தின் எதிரில் இருக்கும் கையை வைத்து குழந்தையின் தலையை பிடித்து கொள்ள வேண்டும். குழந்தையின் தோள்பட்டைகளுக்கு இடையில் உங்களது மணிக்கட்டு இருக்க வேண்டும். உங்களது விரல்கள் குழந்தையின் இரு காதுகளையும் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்றொரு கையை வைத்து நீங்கள் இப்போது குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட துவங்கலாம்.

3 கால்பந்து நிலை

இதுவும் குழந்தையை பிடித்துக் கொள்ளும் நிலை தான். இரட்டை குழந்தைகள், அறுவை சிகிக்சை பிரசவம், அடிவயிற்றில் குழந்தை படுவதை தவிர்க்க விரும்பினால், பெரிய மார்பகங்கள், சிறிய அல்லது குறை பிரசவத்தில் குழந்தை பிறந்திருந்தல் போன்ற சமயங்களில் நீங்கள் இந்த நிலையை மேற்கொள்ளலாம். குழந்தையின் முகம், உங்கள் முகத்தை பார்க்கும் படி இருக்க வேண்டும். குழந்தையின் கால்கள் நீங்கள் தாய்ப்பாலூட்ட போகும் மார்பகத்திற்கு அருகில் உள்ள உங்கள் தோளிற்கு அடியில் இருக்க வேண்டும். அதே புறம் இருக்கும் கையால் குழந்தையை பிடித்துக் கொண்டு, மேற்கூறியதை போல் குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட துவங்குங்கள்.

4 முதுகு புறமாய் படுத்தல்

சிறிய மார்பகங்களை கொண்டிருக்கும் அம்மாக்களுக்கு இது சரியானது. உங்கள் முதுகு புறமாக படுத்துக் கொண்டு, தலையணையை ஆதரவாக வைத்து கொள்ளுங்கள். குழந்தையின் வயிறு உங்கள் உடலில் படும் படியும், குழந்தையின் வாய் உங்கள் மார்பகத்திற்கு படும் படியும் குழந்தையை படுக்க வைக்கவும். இப்போது குழந்தைக்கு தாய்ப்பாலூட்டி கொண்டே ஓய்வெடுங்கள்.

5 பக்க நிலை

நீங்கள் இரவில் எழுந்திருக்க விரும்பவில்லை என்றால், இது உங்களுக்கு சிறந்த நிலை. நீங்களும் உங்கள் குழந்தையும் ஒரு புறமாக படுத்து கொள்ளுங்கள். இப்போது உங்கள் கைகளை மார்பகத்தில் வைத்து குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட துவங்குங்கள். 

Leave a Reply

%d bloggers like this: