சிசேரியன் செய்த பெண்கள் பின்பற்ற வேண்டிய 8 விஷயங்கள்..!!

மன வலிமை மற்றும் உடல் வலிமை குறைவினால், பெரும்பாலான பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் சூழ்நிலைகள் ஏற்படுகிறது. ஆனால், அவ்வாறு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்கள், ஒருசில விடயங்களில் பின்பற்றினால் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அறுவை சிகிச்சை செய்த பெண்கள் பின்பற்ற வேண்டியவை பற்றி இந்த பதிப்பில் படித்தறியலாம்..! 

அறுவை சிகிச்சை செய்த பெண்கள் பின்பற்ற வேண்டியவை

1. அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள், புரோபயாடிக் நிறைந்த தயிர் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலின் ஆரோக்கியம் வலிமையாகும்.

2. அறுவை சிகிச்சை மூலம் ஏற்பட்ட கீறல்கள் உள்ள இடத்தில் அதிக அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அந்த இடத்தில் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்க குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும்.

3. அறுவை சிகிச்சை செய்த பெண்கள், உடலில் ரத்தக் கட்டிகள் ஏற்படாமல் தடுக்க, அடிக்கடி சிறிது நேரம் நடைப்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

4. ஊட்டச்சத்துக்கள், விட்டமின் C மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அறுவை சிகிச்சை செய்த பெண்கள் அதிகமாக சாப்பிட வேண்டும். இதனால் உடலின் தசை வலிமை அதிகமாகும்.

5. மலச்சிக்கல் பிரச்சனை அறுவை சிகிச்சை செய்த பெண்களுக்கு வராமல் தடுக்க, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

6. அதிக எடை கொண்ட பொருட்களை அறுவை சிகிச்சை செய்த பெண்கள் தூக்கக் கூடாது. ஏனெனில் இதனால் சிசேரியன் செய்த இடத்தில் அதிக வலியை உண்டாகும்.

7. அறுவை சிகிச்சை செய்த பெண்கள், ஜிம்மிற்கு செல்லும் போது, சில மாதங்கள் வரை க்ரஞ்சஸ் பயிற்சி செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

8. அறுவை சிகிச்சைக்கு பின் பெண்கள் உடலுறவில் ஈடுபடுவதால், அதிக வலி ஏற்படும். இந்த வலியானது 18 மாதங்கள் வரை கூட நீடிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

%d bloggers like this: