படுக்கையறையில் ஆண்கள் செய்யும் 7 தவறுகள்..!

வீட்டு வேலை, அலுவலக வேலை என கணவன் மனைவிக்கு இருவரும் வாழ்கை சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கும் சூழ்நிலையில், அவர்களுக்கு தனியே கிடைக்க கூடிய இடம் படுக்கை அறைதான். இன்றைய இளம் ஆண்கள் படுக்கை அறையில் அனுபவம் இல்லாதவர்களாகவும், உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாகவும் இருப்பதால், படுக்கை அறையில் பல தவறுகளை செய்கிறார்கள். ஆனால், அவர்கள் படிப்படியாக அவற்றை கற்று கொள்கிறார்கள். ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, அவர்கள் உடலுறவில் ஈடுபடும்போது அவர்களது துணையை திருப்தி படுத்தி விட்டதாக அனுமானித்து கொள்வது தான். இங்கு படுக்கை அறையில் ஆண்கள் செய்யும் 7 தவறுகளை பார்க்கலாம்.

1 கேள்வி கேட்பது

உடலுறவில் ஈடுபடும் போது, அதில் மட்டும் கவனம் செலுத்துவது சிறந்தது. நீங்கள் அவர்களிடம், நீ உன் உச்ச நிலையை அடைந்து விட்டாயா? அல்லது நான் உனக்கு மிக பெரிதாக இருக்கிறேனா? மற்றும் இது போன்ற கேள்விகளை கேட்பது அவர்களை வெறுப்படைய செய்யும்.

2 உச்ச நிலை

பெண்களுக்கு முன்னுரிமை! படுக்கை அறையிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். அவர்களை முதலில் உச்ச நிலையை அடைய விடுங்கள். அதை விடுத்து படுக்கையில் உங்களது சந்தோசத்தை மட்டும் பார்த்தால், பெண்களே அவர்களை திருப்திப்படுத்தி கொள்ள அவர்களாகவே முயற்சிக்க துவங்கி விடுவார்கள்.

3 ஈர்க்க முயற்சி செய்யுங்கள்

உங்கள் மனைவி உடன் நீங்கள் வெளியில் செலவிடும் நேரம், படுக்கை அறையில் செலவிடும் நேரத்தை விடவும் குறைவு. உங்களால் எல்லா நேரத்திலும் மன அழுத்தம் இல்லாமலும், கோபப்படாமல் இருக்க முடியாது. ஆனால், அவற்றால் ஏற்பட்ட மன கசப்பை சரி செய்யும் இடம் படுக்கை அறை தான். அவர்களை உங்கள் அன்பால், காதலால் ஈர்க்க முயற்சி செய்யுங்கள்.

4 ஆபாச படங்கள்

இன்றைய காலத்தில் ஏற்பட்டிருக்கும் இணைய வளர்ச்சி அனைத்தையும் நொடியில் கொடுத்து விடுகிறது. போதை என்பது இப்போது மதுவில் மட்டுமல்லாமல், பலவற்றில் இருக்கிறது. அவற்றில் ஒன்று தான், இன்றைய இளைஞர்கள் ஆபாச படம் பார்ப்பது. பார்ப்பது மட்டுமல்லாமல், மனைவிகளிடம் முயற்சிக்கிறார்கள். இது மனைவிகளுக்கு விருப்பமில்லை என்றால், அவர்களை வெறுப்படைய செய்யும்.

5 பல் துலக்க சொல்வது

உங்களுக்கு அதிகாலை நேர உடலுறவில் ஈடுபாடிருந்தால், அந்த நேரத்தில் உங்கள் மனைவியிடம் சுத்தத்தை எதிர்பார்க்க கூடாது. உன் வாயிலிருந்து துர்நாற்றம் வருகிறது, பற்களை துலக்கு என்றால், அவர்களது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு உறக்கத்தைத் தொடர சென்று விடுவார்கள்.

6 அளவை நினைத்து கவலைப்படுத்தல்

அந்தரங்க உறுப்பின் அளவிற்கும், பெண்கள் உச்ச நிலை அடைவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என நிபுணர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்கள் உச்ச நிலையை அடைவதற்கு பல வழிகள் மற்றும் காரணங்கள் உள்ளன. இங்கு அளவை நினைத்து கவலைப்படுவது முட்டாள் தனமான ஒன்று.

7 அதிக சுத்தம் அல்லது அதிக அசுத்தம்

அதிக சுத்தத்திற்காக கட்டாயப்படுத்துவது மனநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கும். அதே போல் தான், அதிக அசுத்தமும். தாம்பத்தியம் என்பது அன்புடன் காதலை உருவாக்க கூடிய அசுத்தமான விளையாட்டுதான், இங்கு சுத்தம் என்பது மனதை மாற்றும் ஒன்று தான். 

Leave a Reply

%d bloggers like this: