மனைவிகளைக் கவரும் கணவரின் செயல்கள்..!!

பெண்களைக் கவர்ந்து இழுப்பதற்காகவே ஆண்கள் பல்வேறு விதங்களில் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவர்களுடைய தோற்றமோ அல்லது உடலோ கை கொடுப்பதில்லை. எந்த ஆண் தன்னை மிகவும் நேசிக்கிறானோ, எவன் ஒருவன் தன்னிடம் மிகவும் பொசஸிவ்வாக இருக்கிறானோ அந்த ஆணிடம் தான் ஒரு பெண் (அல்லது பல பெண்கள்?)விரும்புகிறார்கள். இது போன்ற குண நலன்கள் தான் ஆண்களுக்குப் பெரும்பாலும் பெண்களை கவர உதவுகின்றன. இப்படி மனைவிகளை கவரும் ஆண்களின் பழக்கவழக்கங்கள் என்னென்ன என்று இந்த பதிப்பில் படித்து அறியலாமா, பெண்களே..! 

புத்திசாலித்தனம்

ஆண்களின் புத்திசாலித்தனத்தை எப்போதுமே பெண்கள் மதிப்பார்கள்; அதில் மதி மயங்கவும் செய்வார்கள். இருவரும் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய கருத்துக்கு அந்தப் பெண்ணின் பதில் என்ன என்பதை புத்திசாலியான ஆண் உன்னிப்பாகக் கவனிப்பான். அவளை சுதந்திரமாகப் பேச விட்டுக் கேட்பான். அவ்வப்போது நகைச்சுவையாகவும் பேசி, அவளைச் சிரிக்க வைப்பான். அவனுடன் இருப்பதால் அந்தப் பெண்ணுக்கு எப்போதுமே போரடிக்காது.

நம்பிக்கை

ஆண் சுய நம்பிக்கைக்கு மட்டுமல்ல, அந்தப் பெண்ணின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருப்பான். தான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பான். அது அவளுக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் பெண்ணுடன் வேலைப் பார்க்கும் மற்ற ஆண்களிடமும், அந்தப் பெண்ணின் வேறு ஆண் நண்பர்களிடமும் பொறாமைப்பட மாட்டான். இந்த ஆண்களிடமும் பெண்கள் நிச்சயம் அதிக அன்பு கொள்வார்கள்..

படைப்பாற்றல்

இதுபோன்ற ஆண்கள் சுயமாக இயங்குபவர்கள். அந்த நிமிடத்தில் வாழ்பவர்கள். கதை, கவிதை, பேச்சு, பெயிண்ட்டிங் என்று தன்னுடைய படைப்பாற்றலை பெண்ணிடம் வெளிப்படுத்துவார்கள். அந்தக் காலத்து பாலசந்தர் படங்கள் போலத் தான் இருக்கும். ஆனாலும், இந்தப் படைப்பாற்றல் மிக்க ஆண்களின் அன்பு ‘வலை’யில் பெண்களால் சிக்காமல் இருக்க இயலாது.

கவர்ச்சி

பெண்கள் எந்த அளவுக்கு ஆண்களைக் கவர்ந்து இழுக்க முயற்சிப்பார்களோ, அதே அளவுக்கு சில ஆண்களும் தங்கள் கவர்ச்சியால் பெண்களை விழ வைப்பார்கள். 

அன்பு, பரிவு, மரியாதை

இவன் தன் பெண் துணையிடம் அன்பு கலந்த மரியாதையுடன் எப்போதும் நடந்து கொள்வான். அவளுக்காக கார் கதவைத் திறந்து விடுவான்; அவள் உட்காருவதற்காக சேரை இழுத்துக் கொடுப்பான்; காபி போட்டுக் கொடுப்பான்; கால் அமுக்கி விடுவான். இப்படி காலை எழுந்தது முதல், இரவு தூங்கப் போகும் வரை அந்தப் பெண்ணிடம் அவன் காட்டும் அன்பும், பரிவும், மரியாதையும் அளவிட முடியாதவை ஆகும். 

‘ஸ்பெஷல்’ காதல்

இந்த ஆண் ‘க்ளாசிக்’ காதலை நம்புபவன். அவளுக்காக அவன் பூக்களையும், சாக்லெட்டுகளையும் (நம்மூர் மல்லி மற்றும் அல்வா?) வாங்கி வராத நாட்களே இருக்காது. அடிக்கடி அவளைக் கூப்பிட்டு ‘ஐ லவ் யூ’ சொல்வான். கண்ணோடு கண் நோக்கி, தன் காதலை அவளுக்குப் புரிய வைப்பான். அனைத்து விதமான காதல் அசைவுகளையும், அவளுக்காக செய்து காண்பிப்பான். 

சாகசம், வீரம்

காற்று போகிற திசையில் இவன் போவான். இந்த ஆணிடம் வீரமும், சாகசமும் நிறைந்திருக்கும். அருமையாக பைக் ஓட்டியே பெண்களை கவர்ந்திடுவான். திடீரென்று அவளைக் கூட்டிக் கொண்டு மலையேற்றத்திற்குக் கிளம்பி விடுவான். பின் விளைவுகளைப் பற்றி சிறிதும் பயமிருக்காது. இதுப்போன்ற ஆண்களுக்கும் சில பெண்கள் மயங்கத்தான் செய்கிறார்கள். அதே துணிச்சலைக் கொண்டு வர அவர்களும் முயற்சிப்பார்கள்.

இப்படி உங்கள் கணவரிடம் நீங்கள் கண்டு காதலிக்கும் விஷயங்கள் என்னென்ன என்று பதிலை comment ல் தெரிவியுங்கள்..!

Leave a Reply

%d bloggers like this: