மலத்தின் நிறமும், குழந்தையின் உடல் ஆரோக்கிய மாறுபாடும்..!

குழந்தையின் செரிமான மண்டலம் வளர்ச்சி அடைத்து வருவதால், அவை மிகவும் மென்மையானதாக இருக்கும். நீங்கள் உணவில் செய்யும் சிறு மாற்றம் கூட குழந்தையின் மலத்தை பாதிக்கும். நீங்கள் குழந்தைகளின் டயப்பரை மாற்றும் போது கவனிக்கவில்லை என்றால் அது கடினமான ஒன்று தான். குழந்தைக்கு தாய்ப்பால் தவிர ஏதேனும் ஒரு இணையான உணவு மற்றும் நமது சாதாரண உணவை உட்கொள்ளும் போது குழந்தையின் மலத்தில் மாற்றத்தை காணலாம். இங்கு குழந்தைகளின் மலம் மற்றும் அதை சார்ந்த அவர்களின் உடல் ஆரோக்கிய மாறுபாட்டையும் பார்க்கலாம். 

1 பிறந்த குழந்தை

பிறந்த குழந்தைகள் பச்சையிலிருந்து-கருப்பாக மலம் கழிப்பார்கள். இது பார்ப்பதற்கு தார் போலவும், ஓட்டும் தன்மையுடையதாகவும், மோட்டார் எண்ணெய் போன்றும் இருக்கும். இது மெக்கோனியம் என்றும் அழைக்கப்படும், இது தோல் செல்கள், அம்மோனியோடிக் திரவம், மற்றும் சளி ஆகியவற்றால் உருவாகி இருக்கும். இரண்டு முதல் நான்கு நாட்களுக்கு பிறகு, குழந்தையின் மலம் பச்சை நிறமுடையதாகவும், மெக்கோனியம் போல் அல்லாமல், ஒட்டும் தன்மை குறைவாகவும் இருக்கும்.

2 தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள்

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் மலம் கடுகு மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும், இது சாதாரணமானதாக கருதப்படுகிறது. இது பசை போன்ற வடிவம் மற்றும் இது ஓடும் வடிவத்தில் வயிற்று போக்கிற்கான உணர்வை ஏற்படுத்தும். எப்போதும் மலத்திலிருந்து வரும் துர்நாற்றத்தை போல் இல்லாமல், தாய்ப்பால் குடித்து ஆரோக்கியமாக இருக்கும் குழந்தையின் மலத்தில் இனிப்பு வாசனை ஏற்படும்

3 ஃபார்முலா-பால் குடிக்கும் குழந்தைகள்

ஃபார்முலா-பால் குடிக்கும் குழந்தைகளின் மலம் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் வேர்க்கடலை வெண்ணை போன்று பசையாக இருக்கும். இந்த மலம் பெரியதாகவும், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் மலத்தை விட அதிக துர்நாற்றத்துடனும் இருக்கும்.

4 உணவு துகள்கள்

குழந்தைகள் உண்ணும் அனைத்து உணவுகளும் செரிமான மண்டலத்தில் செரிப்பதில்லை. சில உணவுகள் உடைக்க படாமல் நேரடியாக பெருங்குடல் வழியாக வெளியேறி விடுகின்றன. அந்த உணவு துகள்கள் வித்தியாசமான நிறத்தில் குழந்தையின் மலத்துடன் வெளியேறுகின்றன.

குழந்தைகள் எடுத்துக் கொள்ளும் உணவை பொறுத்தே குழந்தைகள் மலத்தில் நிறமாற்றம் ஏற்படும். இதை கண்டு கவலையடைய தேவையில்லை. ஆனால், குழந்தையின் உடல் ஆரோக்கியம் மலத்தின் நிறத்தை சார்ந்தும் இருக்கும்.

5 பச்சை நிற மலம்

அதிக அளவில் இரும்பு சத்துக்கள் நிறைந்த உணவை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அல்லது இரும்பு சத்துக்கான மாற்றுக்களை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது, அவர்களின் மலம் பச்சை நிறத்தில் இருக்கும். பட்டாணி, கீரை, பீன்ஸ் மற்றும் சில உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது, இது போன்ற மாற்றத்தை காணலாம்.

6 ஆரஞ்சு/மஞ்சள்/பழுப்பு நிற மலம்

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளது மலம் ஆரஞ்சு அல்லது மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தால், அது சாதாரமானது. கவலைப்பட வேண்டியதில்லை.

7 மலத்தில் கறுப்பு நிறத்தில் இரத்தம்

குழந்தையின் மலத்தில் கருப்பு நிறத்தில் இரத்தத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். வெடிப்பு ஏற்பட்டிருக்கும் மார்பக காம்புகளில் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதால் இது போன்று ஏற்படுகிறது. இதில் குழந்தையின் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட ஏதும் இல்லை. நல்ல ஆலோசனைக்கு மருத்துவரை அணுகுங்கள்.

இதன் பின் நாம் பார்க்க போகும் அறிகுறிகள் அதிக தீவிர தன்மை உடையவை. இந்த அறிகுறிகளை பார்த்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது சிறந்தது.

8 அதிக நீருடன் ஓடும் மலம்

குழந்தையின் மலத்தில் தண்ணீர் அதிக அளவிலும், அது பச்சை அல்லது மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தால், அது வயிற்று போக்கிற்கான அறிகுறியாகும். இதை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், குழந்தைகளின் உடலில் வறட்சி ஏற்படும்.

9 கடினமான கூழாங்கல் போன்ற மலம்

குழந்தையின் மலம் கூழாங்கல்லை போன்றும் மற்றும் கடினமான உணவு துகள்களுடனும் இருந்தால், உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும். இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு திட உணவை அறிமுக படுத்தும் போது ஏற்படுகிறது. இது சில உணவுகளின் சகிப்பு தன்மை இல்லாமல் இருப்பதன் காரணமாகவும் ஏற்படலாம்.

10 சிவப்பு இரத்தத்துடன் கூடிய மலம்

குழந்தைகள் சாப்பிட்ட உணவாலும் குழந்தையின் மலம் சிவப்பு நிறத்தில் இருக்கலாம். குழந்தையின் சாதாரண மலத்தில் சிவப்பு இரத்தம் இருப்பது அவர்களுக்கு பாலில் இருக்கும் புரத்தின் ஒவ்வாமையினால் அலர்ஜி ஏற்பட்டிருக்கும் அறிகுறியாகும். குழந்தையின் வயிற்று போக்கின் போது இரத்தம் காணப்பட்டால், குழந்தைக்கு பாக்ட்டீரிய நோய் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும்.

11 சளியுடன் கூடிய மலம்

குழந்தையின் மலத்தில் மெல்லிய பச்சை வண்ண கோடுகள் காணப்பட்டால், அது குழந்தைகளுக்கு சில நோய் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும்.

12 வெள்ளை நிற மலம்

சாக்பீஸ் போன்ற வெள்ளை நிறத்திலான மலம், உணவுகள் சரியாக செரிக்கப்படுவதில்லை என்பதற்கான அறிகுறியாகும். இது குழந்தையின் செரிமான மண்டலம் உணவை சரியாக செரிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த வெண்மை நிறமானது, கல்லீரலில் உணவை செரிக்க தேவையான பித்தத்தின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது. 

Leave a Reply

%d bloggers like this: