வரித்தழும்புகளை சரி செய்ய உதவும் விக்ஸ்..!

Video Credits : superWOWstyle! (Youtube) 

உங்கள் உடலில் இருக்கும் சிறு வரித்தழும்புகள் உங்களை வெறுப்படைய செய்யும். நீங்கள் சேலை அணியும் போது உங்கள் இடுப்பு பகுதியில் தெரியும் வரித்தழும்பு உங்களை சிரமப்பட செய்யும். நீங்கள் குட்டைப் பாவாடை அணிய விரும்பும் போதும் அதே நிலை தான். இந்த உலகில் உள்ளவர்களில் 80% மக்களுக்கு இருக்க கூடிய பொதுவான பிரச்சனை தான். இது பெண்களுக்கு மட்டும் ஏற்பட கூடியதல்ல. ஆண்களும் இதனால் பாதிப்படைகிறார்கள்.

இது தொடர்ச்சியான உடல் எடை மாற்றம், ஹார்மோன் மாற்றம், கர்ப்பகாலம் மற்றும் பருவநிலை மாற்றங்களாலும் ஏற்படுகிறது. அதிக அளவில் கொழுப்பு சேர்ந்திருக்கும் இடங்களான அடிவயிறு, மார்பகம், மேல் தோள்பட்டை, முதுகு, தொடை, இடுப்பு மற்றும் பூட்டங்கள் போன்ற இடங்களில் வரித்தழும்புகளை காணலாம். இது எதனால் ஏற்பட்டிருந்தாலும், தந்திரமான முறையில் இவற்றை சரி செய்யலாம்.

நீங்கள் வரித்தழும்புகளுக்கென பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பல வருடங்களாக உபயோகித்து பயனளிக்கவில்லை என வேதனை அடைந்திருக்கலாம். இதனால் நீங்கள் வரித்தழும்புகளுக்கு என்ன செய்தாலும் பயன் தராது என்ற முடிவிற்கு வந்திருப்பீர்கள். உண்மையில் உங்கள் தோல் வசதியாக இருந்தால், அவற்றை நீக்கி விட முடியும். இவை உங்கள் உடல் ஆரோக்கியத்தோடு கலந்ததல்ல. கர்ப்பகாலத்திற்கு பின் ஏற்படும் வரித்தழும்புகள், புலியினுடைய வரியுடன் ஒப்பிடப்படுகின்றன. நீங்கள் அவற்றை சரி செய்ய விரும்பவில்லை என்றால், மறைக்க வேண்டும்.

உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் பயன் தரவில்லை என்று நீங்கள் வீட்டு மருத்துவ முறையை முயற்சித்திருப்பீர்கள். அவற்றில் பல உங்களுக்கு பயன் தந்திருக்காது. இது ஒருவருக்கொருவர் மாறுபடும். உதாரணமாக, உங்களுக்கு வைட்டமின் ஈ எண்ணெய் பலன் தந்திருந்தால் அது மற்றவர்களுக்கும் பயன் தரும் என்று சொல்ல முடியாது.

நீங்கள் சளியால் பாதிக்கப்படும் போது, உங்களுக்கு உதவும் நண்பனான விக்ஸ், இப்போது உங்களது வரித்தழும்புகளை சரி செய்ய உதவுகிறது. இது உங்களால் நம்ப முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், அதிக அளவிலான மக்கள் இதனால் பயன் பெற்றிருக்கிறார்கள். இதை பயன்படுத்துவது எந்த வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. இது உங்களது வரித்தழும்புகளை அதிகப்படுத்தாது.

விக்ஸ்சை பயன்படுத்தி வரித்தழும்புகளை எப்படி சரி செய்யலாம் என்பது விரிவாக வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தேவைப்படுவது விக்ஸ், நன்கு மடக்கி சுற்றக் கூடிய பாலிதீன் பை(Cling wrap) மற்றும் கற்றாழை ஜெல்(செடிகளிலிருந்து நேரடியாக கிடைப்பவை சிறந்தது).

வரித்தழும்புகள் இருக்கும் இடத்தில் விக்ஸ்சை நன்கு தேய்த்து, மடங்க கூடிய பாலிதீன் பையை நன்கு இறுக்கமாகவும், பாதுகாப்பாகவும் சுற்றவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு, அவற்றை மென்மையாக நீக்கவும். பின், கற்றாழை ஜெல்லை சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க அந்த இடத்தில் தடவவும்.

யூகலிப்டஸ் எண்ணெய், சிடார் இலை எண்ணெய், டர்பெண்டைன் எண்ணெய், மற்றும் கற்பூரம் ஆகியவற்றை விக்ஸ் கொண்டுள்ளது. இது அதிக வரித்தழும்பு இருக்கும் சருமத்தை சரி செய்யவும், ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வரித்தழும்புகள் ஏற்படுவதை குறைக்கவும் உதவுகிறது.

தொடர்ந்து தினமும் ஒரு மாதத்திற்கு செய்து வந்தால் நல்ல பலனைக் காண முடியும். இது எவ்வளவு காலம் எடுக்கும் என்பது உங்கள் வரித்தழும்புகளை பொறுத்தது. அவை இப்போது ஏற்பட்டிருப்பவை என்றால் விரைவில், முன்னால் ஏற்பட்டவை என்றால் சரியாக சில காலம் எடுக்கும். 

Leave a Reply

%d bloggers like this: