இரவில் அழும் குழந்தையை கவனித்து கொள்ள உதவும் குறிப்புகள்..!

குழந்தைகள் மிகவும் சிறியவர்களாகவும், அப்பாவிகளாகவும் இருப்பார்கள். அனைத்தும் எப்படி வேலை செய்கிறது என்பதை அவர்கள் கற்று கொள்ள சிறிது காலம் எடுக்கும். குழந்தைகளுக்கென்று சில குறைந்த கால அட்டவணை இருக்கும். ஆனால் அவை பெற்றோரோடு ஒத்து போவதில்லை. இது பெற்றோருக்கு கடினமான ஒன்றாக மாறிவிடுகிறது. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில், நாள் முழுவதும் வேலை செய்து களைப்படைந்த தாய் சோர்வாக உறங்க செல்லும் தருணத்தில் குழந்தை அழ துவங்கி விடும். இங்கு அழும் குழந்தையை இரவில் சமாளிக்க  உதவும் குறிப்புகளை பார்க்கலாம்.

1 குழந்தையை படுக்க வைத்தல்

அம்மாக்கள் செய்யும் மிக பெரிய தவறு, குழந்தை தூங்கிய பின் தொட்டிலில் படுக்க வைப்பதுதான். அவர்கள் தூங்கிய பிறகு தொட்டிலில் படுக்க வைக்கும் போது, தாயினுடைய கை அசைவினால் குழந்தை விழித்து கொண்டு மீண்டும் அழ துவங்கி விடும். எனவே குழந்தைகள் தூங்குவதற்கு முன் அமைதியாக இருக்கும் போது மற்றும் அரை தூக்க நிலையில் இருக்கும் போதே குழந்தைகளை தொட்டிலில் படுக்க வைத்து விடுவது சிறந்தது. அவர்கள் உறங்கிய பின் தொட்டிலில் படுக்க வைக்கும் போது, அவர்களின் தூக்கம் களைய வாய்ப்பிருக்கிறது.

2 அமைதி படுத்துதல்

நீங்கள் குழந்தைக்கு பால் கொடுத்த பின் அல்லது அவர்களின் டையப்பரை மாற்றிய பின்னும் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தால், குழந்தைகள் அசௌகர்யமாகவும், வெறுப்பாகவும் உணர்கிறார்கள் என்று அர்த்தம். நீங்கள் பயிற்சி செய்திருக்கும் வசதியான நிலைகளை முயற்சி செய்து பாருங்கள். குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தால், உங்கள் மார்பகத்தை குழந்தையின் வாயில் வையுங்கள். குழந்தையின் வயிறு நிரம்பி இருந்தாலும், அவர்கள் உங்களது மார்பு காம்பில் வாய் வைக்கும் போது அழுகையை நிறுத்திவிடுவார்கள்.

3 உடன் உறங்க செய்தல்

முதல் ஆறு மாதங்களுக்கு குழந்தையை உங்களுடன் உறங்க செய்யுங்கள். குழந்தையின் உடல் உங்களை போன்று வேலை செய்யாது. அவர்களுக்கு ஒவ்வொரு இரண்டு மணி நேர இடைவெளியில் உணவளிக்க வேண்டும். ஏன் இரவிலும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உணவளிக்க வேண்டும். இதனால், நீங்கள் ஒவ்வொரு முறை எழுவது உங்களையும், குழந்தையையும் வெறுப்படைய செய்யலாம். எனவே, குழந்தையை உங்களுக்கும், கணவருக்கும் நடுவில் உறங்க செய்யுங்கள். இதனால், நீங்கள் எழாமல் குழந்தைக்கு பால் கொடுக்க முடியும். இது குழந்தையை அமைதியடைய செய்து விடும்.

4 பசி அறிகுறிகள்

அமைதியாக இருக்கும் குழந்தைகள் பசி எடுத்த உடன் அழ துவங்கி விடுவார்கள். அவர்கள் அழுவதற்கு முன் சில அறிகுறிகள் மூலம் உங்களுக்கு உணர்த்த முயற்சிப்பார்கள். இந்த அறிகுறிகள் மிக நுட்பமானதாக இருக்கும். இவற்றை அறிந்து நீங்கள் பாலூட்டினால், அவர்கள் அழுகையை நிறுத்தி சமாதானப் படுத்தி விடலாம். இது அவர்கள் இரவில் அழுவதையும் தவிர்த்து விடும். வையில் விரல் வைத்து சப்புதல், ஓய்வின்மை மற்றும் முனுமுனுப்பு சப்தம் போன்றவை குழந்தைகளின் பசியை உணர்த்தும் அறிகுறிகளாகும்.

5 எளிமையாக உணவூட்டுதல்

உங்கள் குழந்தைக்கு உணவூட்டுவதற்கு நீங்கள் அடிக்கடி எழ வேண்டியிருக்கும். அது இரவாகவும் இருக்கலாம். இது உங்கள் தினசரி பழக்கவழங்களுள் ஒன்றாகி இருக்கும். உங்களுக்கு வசதியான ஒரு நிலையை தேர்ந்தெடுத்து, குழந்தைக்கு பாலூட்டும் நிலையில் ஓய்வெடுங்கள். நீங்கள் ஓய்வாக தாய்ப்பாலூட்டும் நிலை எதுவென நீங்கள் கண்டறிய வேண்டும். இந்த நிலையில் குழந்தை உறங்கும் போது, நீங்களும் அவர்களுடன் உறங்கி கொள்ளலாம். இது நாள் முழுவதும் உங்களுக்கு ஏற்பட்ட சோர்வை குறைக்கும்.

குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் போது அவர்களின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இது உங்கள் மீது கவனம் எடுத்துக் கொள்ள கூடாது என்று பொருளல்ல. நீங்களும் குழந்தையும் சௌகர்யமாக இருக்கும் நிலையை கண்டு பிடித்துவிட்டால் இது எளிதாகி விடும்.   

Leave a Reply

%d bloggers like this: