தாயின்

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் ஆண் மற்றும் பெண்ணின் சேர்க்கையால், உருவாகின்றன. ஆணின் விந்துவும், பெண்ணின் அண்டமும் பெண்ணின் கருவறையிலோ அல்லது சோதனைக் குழாயிலோ இணைந்து கரு உருவாகத் தொடங்குகிறது. இவ்வாறு உருவான கரு எப்படி வளர்கிறது? முதலில் எந்தெந்த உறுப்புகள் உருவாகின்றன என்பது பற்றியெல்லாம் யோசிக்கையில், பதில்கள் கிடைத்தாலும் அவற்றை மிஞ்சி நிற்பது ஆச்சரியமே.

கருவறையில் அன்னையின் உணர்வுகளை அனுசரித்து, அவள் உண்ணும் உணவுகளை சுவைத்து, கழித்த சிறுநீரையே குடித்து, தண்ணீர் குடத்திற்குள் வளரும் கருவின் வளர்ச்சி மிகவும் அதிசயமானதே! என்னதான் அறிவியல் கருவின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுத்தாலும், அவற்றை பொய்யாக்கும் வகையிலும் பல சம்பவங்கள் புவியில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஒவ்வொரு பெண்ணிற்கும் தன் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை அறியும் ஆவல் அதிகமாக இருக்கும்; ஆனால், ஸ்கேன் மற்றும் சோனாகிராபி பரிசோதனை மூலம் கருப்பு வெள்ளையாக குழந்தையை காட்டுகின்றனர், மருத்துவர்கள்..! அப்படி பெண்களின் மனதில் இருக்கும் ஆசையை கலர் புல்லாக காட்டவே, இந்த காணொளியுடன் கூடிய பதிப்பு..!! பார்த்து மகிழ்ந்து, மற்றவர் மகிழ, பகிருங்கள்..!

Leave a Reply

%d bloggers like this: