முத்தம் கொடுக்கும் இடங்களும், அதன் அர்த்தமும்..!

முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. “மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்று” எனும் திரைப்பட வாசகம் நமக்கு முத்தத்தின் அர்த்தத்தை உணர்த்தும். முத்தம் அன்புடன் கொடுப்பது, அன்பு கலந்த காமத்துடன் கொடுப்பது என்று பல இருக்கிறது. ஒரு குழந்தையை நமக்கு பிடித்திருந்தால், நாம் அவர்களை தூக்கி முத்தமிடுவது, பெற்றோர் அல்லது பிறந்தவர்கள் நமக்கு பிடித்ததை செய்யும் போது கொடுக்கும் முத்தம் போன்றவற்றை நம் அன்பின் வெளிப்பாடாக கருதுகிறோம். ஆனால், கணவன் மனைவிக்குள் பரிமாறி கொள்ளப்படும் முத்ததில் காதலில் கலந்த காமம் இருக்கும். இங்கு முத்தம் கொடுக்கும் இடங்களும், அதற்கான அர்த்தத்தையும் பார்க்கலாம்.

1 நெற்றியில்

இது பெரும்பாலும் அனைவராலும் முத்தம் பரிமாறிக் கொள்ள படும் இடம் தான். நெற்றியில் முத்தம் கொடுத்தால், வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தம்.

2 கண்களில்

முத்தம் கொடுக்க முகத்தில் பல இடங்கள் இருந்தும் கண்களில் கொடுக்கப்படும் முத்தம், நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தம்.

3 மூக்கில்

மூக்கின் மீது முத்தம் கொடுத்தால், நீ மிகவும் அழகாக இருக்கிறாய். என் கண்களுக்கு உன்னை விட அழகு யாரும் இல்லை என்று அர்த்தமாம்.

4 உதட்டில்

தம்பதியர்கள் அதிகம் உதட்டில் முத்தம் கொடுப்பதை வழக்கமாக்கி கொண்டிருப்பார்கள். இதில் உணர்வுகள் அதிகம் மேலோங்குகிறது. நான் உயிரினும் மேலாக உன்னை நேசிக்கிறேன் என்று அர்த்தம்.

5 கண்களை முடி கொடுப்பது

தம்பதிகள் அல்லது காதலர்கள் கண்களை மூடி கொண்டு உதட்டில் முத்தமிட்டால், அவர்கள் அந்த தருணத்தை ரசித்து முத்தம் கொடுப்பதாகவும், இரண்டு உடல் ஓர் உயிர் என்று கலந்து விட்டதாகவும் அர்த்தம்.

6 கண்களை திறந்து கொடுப்பது

சில தம்பதிகள் அவர்களின் துணையை முத்தமிடும் போது அவர்கள் கண்களை திறந்து கொண்டிருப்பார்கள். உங்களை இதை விட அதிக சந்தோசப்பட வைக்க போவதாகவும், உங்கள் உணர்சிகளை ரசிக்க விரும்புவதாகவும் அர்த்தம்.

7 கன்னத்தில்

நாம் இருவரும் நல்ல தம்பதிகள் அல்லது நல்ல காதலர்கள் என்று உணர்த்துவதோடு, நான் உன்னுடன் நல்ல நட்புறவுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தம்.

8 கழுத்தில்

உங்கள் துணை உங்களை நெருங்கி வந்து கட்டியணைத்து கழுத்தில் முத்தமிட்டால், மிகவும் அன்புடன் நீ எனக்கு வேண்டும் என்பதை உணர்த்தும். பெரும்பாலும் புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் பரிமாறி கொள்வார்கள்.

9 கைகளில்

கைகளின் கொடுக்கும் முத்தம் மதிப்பின் பரிமாணத்தை எடுத்துரைக்கிறது. இது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பெரியவர்கள் கூட வயதில் சிறியவர்களுக்கு கொடுப்பார்கள். அவர்களின் மீதிருக்கும் அன்பு கலந்த மரியாதையை வெளிக்காட்டுவதாக அர்த்தம். 

Leave a Reply

%d bloggers like this: