உங்கள் கணவர் உங்களிடம் கேட்க விரும்பும் 7 விஷயங்கள்

திருமணத்திற்கு பின் உங்கள் வாழ்க்கை சுவாரசியம் இல்லாதது போல் தோன்றலாம். ஆனால் உங்கள் துணையிடமிருந்து சிலவற்றை கேட்கும்போது உங்கள் திருமண வாழ்கையில் சுவாரசியம் அதிகரிக்கும். இங்கே கணவர்கள் மனைவியிடமிருந்து கேட்க ஆசைப்படும் சில விஷயங்கள் தரப்பட்டுள்ளன. இவற்றை நீங்கள் ஏற்கனவே செய்வீர்களாயின் உங்கள் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை நீங்கள் இவற்றை செய்யவில்லையெனில் இதை ஆரம்பிக்க இதுவே சரியான தருணமாகும். இவை சிறிய வார்த்தைகளாக தோன்றலாம் ஆனால் இவற்றின் பலன் அற்புதமானதாகும்.

1 மன்னிப்பு

உங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வது மிகவும் நல்ல விஷயமாகும். இது உங்களை கண்ணியமானவராக காட்டும். எல்லாரும் தவறு செய்யக்கூடியவர்கள்தான், எனவே அதை ஒப்புக்கொளவதிலோ இல்லை மன்னிப்பு கேட்பதிலோ எந்த அவமானமும் இல்லை. கணவர்தான் எப்பொழுதும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று இல்லை. நீங்களும் உங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டு பழகுங்கள். இந்த பழக்கம் உங்கள் உறவை இன்னும் பலப்படுத்தும்.

2 நன்றி கூறுதல்

வெளிநபர்கள் யாராவது உதவி செய்தால் அவர்களுக்கு நன்றி சொல்வோம் அல்லவா? அதேபோல் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் கூறுங்கள். கணவர் உங்களுக்காக செய்யும் அனைத்து செயல்களையும் பாராட்டுவதோடு நன்றியும் கூறுங்கள். உங்கள் கணவர் அலமாரியிலருந்து பாட்டிலை எடுத்து தரும்போதோ, அல்லது காய்கறி வெட்டி தரும்போதோ காதலோடு நன்றி சொல்ல மறக்காதீர்கள். இவை சிறிய விஷயமாக இருந்தாலும் உங்களுக்கிடையே உள்ள காதலை அதிகமாக்கும்.

3 அழகை பாராட்டுங்கள்

உங்கள் கணவர் சாதாரண உடையிலோ அல்லது சற்று சிறப்பான உடையிலோ அழகாக தெரியும்போது வெளியே கூட்டிச்செல்லுங்கள். இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொன்னால் அவர்கள் வெட்கப்படுவதை காணலாம். இப்படி ஒரு வார்த்தை உங்கள் வாயில் இருந்து வரும்போது கணவர் வானத்தில் பறப்பார்.

4 நம்பிக்கையை வெளிப்படுத்துதல்

இந்த வார்த்தை உங்கள் திருமண வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாகும். நம்பிக்கைதான் உங்கள் திருமண வாழ்க்கையின் தூண் ஆகும். ஏதாவது முக்கிய முடிவு எடுக்கும்போது தன்மையாக கணவரின் கையை பற்றிக்கொண்டு, இந்த அற்புத வார்த்தையை கூறுங்கள். இதன் மூலம் உங்கள் மீதுள்ள காதல் இன்னும் அதிகரிக்கும்.

5 கொஞ்சலாக உதவி கேட்டல்

கணவரின் உதவியை நீங்கள் நாடுவதை எப்போதும் விரும்புவார். நீங்கள் அந்த வேலையை சிறப்பாக செய்யக்கூடியவராக இருந்தாலும் கணவரின் உதவியை கேளுங்கள். அவர்கள் தன் குடும்பத்துக்கும், தனக்கு விருப்பமானவர்களுக்கும் முக்கியமானவராய் இருப்பதை மிகவும் விரும்புவார்கள்.

6 சீக்கிரமாக கிளம்புதல்

இது கணவர் எதிர்பாராததாக இருக்கும். அவர்கள் வெளியே செல்ல தயாராக சொல்லும் முன் நீங்கள் தயாராகி அவர்களை ஆச்சரியப்படுத்துங்கள். உங்களால்தான் தாமதமானது என்று அவர் குறை சொல்ல வாய்ப்பு கொடுக்காதீர்கள். நீங்கள் இப்படி நடந்து கொள்ளும்போது அவர் உங்களை அதிகமாக வெளியே கூட்டிச்செல்லுவார்கள்.

7 நேசிப்பதாய் சொல்லுதல்

இறுதியாக உங்கள் நேசத்தை அவருக்கு தெரியப்படுத்துங்கள், அவர் உங்களின் கணவராய் இருப்பதில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள் என்று புரியவையுங்கள். வேலை நிமித்தமாக அவர் வெளியூர் செல்லும்போது அடிக்கடி போன் செய்து அவரை மிஸ் பண்ணுவதாக சொல்லுங்கள். அவர் திரும்பி வரும்போது அவருக்காக ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாய் சொல்லுங்கள். இது அவர் உங்களை நோக்கி வேகமாய் ஓடிவர செய்யும்.

இவைதான் உங்கள் கணவர் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பவை ஆகும். அவரை சிறப்பானவராய் உணர செய்யுங்கள். அவர்கள் அதுக்கு தகுதியானவர்கள்தான்.

Leave a Reply

%d bloggers like this: