உங்கள் மாமியாரிடம் சொல்ல வேண்டிய 5 விஷயங்கள்

மாமியார் – உங்கள் கணவரின் அம்மா; சில நேரங்களில் நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும் உங்களை குறை கூறிக்கொண்டே, உங்களை எந்நேரமும் முறைத்து கொண்டே இருப்பார். சிறிது நேரம் நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஒரு கற்பனை உலகத்திற்கு செல்வோம். அந்த உலகத்தில் உங்கள் மாமியார் உங்களை முழுவதுமாக புரிந்து கொண்டால் எப்படி இருக்கும்? எவ்வளவு அருமையான ஒன்றாக இருக்கிறது. இங்கே ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய மாமியாரிடம் சொல்ல விரும்பும் 5 விஷயங்களை பார்ப்போம். 

1 குறை இல்லாத மனிதர்கள் இல்லை

உங்கள் சமையல் சரி இல்லை என்றாலோ அல்லது உங்களால் ஏதேனும் ஒரு வேலையை சரியாக செய்ய முடியவில்லை என்றாலோ கவலைப்படாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள். முயற்சி திருவினையாக்கும். உங்கள் மாமியார் உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது தவறு. சொல்ல போனால் அவரும் எல்லா விஷயங்களிலும் சிறந்தவராக இருக்க மாட்டார்.

2 நம்மை நேசிப்பவர்களிடம் தான் சண்டையிட முடியும்

சின்ன சின்ன விஷயங்களுக்காக நீங்கள் இரண்டு பேரும் சண்டை போடுவதால், நீங்கள் இருவரும் எதிரிகள் இல்லை. அன்போடு பழகாவிட்டாலும் மரியாதையோடு பழகுங்கள்.

3 உங்களை புரிந்துகொள்ளுதல்

ஒரு காலத்தில் உங்கள் மாமியாரும் ஒரு வீட்டிற்கு மருமகளாக இருந்தவர் தான். புதிய வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த போது அவரும் பல பிரச்சனைகளை சிக்கல்களை சந்தித்திருப்பார். அதனால் நீங்கள் செய்யும் சிறு சிறு செயல்களுக்கு அவர் கோபப்படுவதில் நியாயம் இல்லை. உங்களுக்கு கொஞ்சமாவது அவர் சுதந்திரம் கொடுக்க வேண்டும். உங்களை புரிந்து கொள்ள செய்யுங்கள்.

4 உங்கள் கணவர் வீடு உங்களுக்கும் சொந்தமானது

திருமணத்திற்கு பிறகு உங்கள் கணவரின் வீடு தான் உங்கள் வீடு. உங்கள் மாமியாருக்கு அவர்தான் அந்த வீட்டின் ராணி என்ற எண்ணம் போக வேண்டும். அந்த வீட்டில் முடிவெடுப்பதற்கு உங்களுக்கும் சம உரிமை உள்ளது. ஏனென்றால் நீங்களும் அந்த குடும்பத்தில் ஒருத்தர். உங்கள் உரிமையை பறிப்பது மிகவும் தவறாகும். அன்போடு அவர்களுக்கு புரியும் வையுங்கள்.

5 எது என்னுடையதோ அது உன்னுடையதும் கூட

திருமணத்திற்கு பின் நீங்கள் உங்கள் கணவருடைய வாழ்க்கையில் நுழைந்தாலும், அவருக்கும் உங்கள் மாமியாருக்கும் உள்ள அம்மா – மகன் என்ற உறவு என்றைக்கும் மாறாது. இதை உங்கள் மாமியார் எவ்வளவு சீக்கிரமாக உணர்கிறாரோ அது வரையில் உங்களுக்கு நல்லது. இல்லையென்றால் உங்கள் மீது குறை கண்டுபிடித்துகொண்டே, உங்கள் வாழ்க்கையை நரகமாக்கி விடுவார். சில நேரங்களில் விட்டு கொடுத்தும் காரியம் சாதிக்கலாம்.

Leave a Reply

%d bloggers like this: