கருவில் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் 10 விஷயங்கள்

உங்கள் குழந்தை கருவில் இருக்கும்போதே நீங்கள் அவர்களுடன் பேச தொடங்கிவிடுவீர்கள். அதற்கு காரணம் நீங்கள் பேசுவது அவர்களுக்கு புரியும் என்ற நம்பிக்கைதான். ஆனால், உங்கள் நம்பிக்கை உண்மைதான் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கருவில் இருக்கும்போதே வெளியுலகில் வாழ்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள். இந்த முயற்சி அவர்கள் கருவில் உருவானவுடனே ஆரம்பிக்கின்றது. குழந்தைகள் கருவிலேயே கற்றுக்கொள்ளும் 10 விஷயங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. 

1 சிரிப்பது

சிரிக்காமல் எந்த மனிதனும் வாழ இயலாது, குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே சிரிக்க தொடங்கிவிடுவார்கள். நவீன 4டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கருவில் உள்ள குழந்தை சிரிப்பதை தெளிவாக பார்க்கலாம்.

2 அழுவது

சிரிக்கும் குழந்தைகள் அழவும் கருவிலேயே கற்றுக்கொள்கிறார்கள். குழந்தை பிறக்கும் நிமிடம் தவிர வாழ்க்கை முழுவதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டுமென்றுதான் பெற்றோர்கள் விரும்புவார்கள். இந்த அழும் பழக்கம் திடீரென்று வருவதில்லை. அவர்கள் தாயின் கருவின் இருக்கும்போதே இதனை தொடங்கிவிடுவார்கள். ஆனால், கவலைப்படாதீர்கள் இது கவலைப்படும் அளவு பெரிய பிரச்சினையில்லை.

3 சுவாசித்தல்

எந்த உயிரினமும் சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாது. நீங்கள் யோசித்ததுண்டா பிறந்த குழந்தை யாரும் சொல்லித்தராமலே எப்படி சுவாசிக்கிறார்கள் என்று. ஆய்வுகளின்படி குழந்தைகள் கருவில் இருக்கும்போதே சுவாசிக்க தொடங்கிவிடுகிறார்கள். அம்மாக்கள் அவர்களுக்காக சுவாசிக்கும்போது இரத்த ஓட்டத்தின் மூலம் அவர்களுக்கான ஆக்ஸிஜனை பெற்றுக்கொள்கிறார்கள்.

4 சுவை உணர்தல்

குழந்தைகள் பற்றி ஆய்வுகளில் தெரிந்த மற்றுமொரு ஆச்சரியமான செய்தி என்னவெனில் குழந்தை உருவான 13 வாரங்களில் அவர்கள் சுவைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ளவர்கள். அதுமட்டுமின்றி தனக்கு பிடித்த உணவு எதுவென்றும் அறிந்துகொள்வார்கள். கருத்தரித்திருக்கும்போது சில உணவுகள் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தினால் அது உங்கள் குழந்தைக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம்.

5 கனவு காணுதல்

மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் எப்போதும் விவாதிப்பது குழந்தைகள் கருவில் இருக்கும்போது கனவு காண்பர்களா என்பதுதான். ஆனால் நவீன தொழில்நுட்பத்தில் இதற்கு பதிலுண்டு. தாயின் வயிற்றை சுற்றி சென்சார்களை பொருத்தி குழந்தைகளின் கண் அசைவுகளையும் அவர்கள் உறங்குவதையும் பார்க்கலாம். இதிலிருந்து அவர்கள் கனவு காண்கிறார்கள் என்பது உறுதியாகிறது.

6 தொடுதலை உணர்தல்

உங்கள் வயிறை தொடும்போதெல்லாம் அதற்கேற்றாற்போல் உங்கள் குழந்தை அசைவதை உணர்கிறீர்களா? உங்கள் யூகம் சரிதான். குழந்தைகள் உருவான 8 வாரங்கள் முதல் நீங்கள் தொடுவதை உணரத்தொடங்குவார்கள். உங்களின் ஒவ்வொரு தொடுதலுக்கும் தங்களின் பிஞ்சு கை, கால்களையும் அசைக்க தொடங்குவார்கள்.

7 மொழி அறிதல்

நாம் அனைவரும் அர்ஜுனன்-அபிமன்யு பற்றி அறிந்திருப்போம். ஆனால், பேச கற்றுக்கொள்வதற்கு முன்னரே அர்ஜுனன் கூறியது அபிமன்யுவிற்கு எப்படி புரிந்தது என்று நாம் யோசித்துள்ளோமா?. சமீபத்திய ஆய்வுகளின் படி குழந்தைகள் கருவில் இருக்கும்போதே தாங்கள் தொடர்ச்சியாக கேட்கும் ஒலியை அடையாளம் கண்டுகொள்ளவும், அதை வைத்து தனக்கென மொழியை உருவாக்க முடியுமென்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

8 அனைத்தையும் கேட்பது

குழந்தைகள் தங்கள் கேட்கும் அனைத்தையும் நன்கு கவனிப்பதோடு புரிந்தும் கொள்வார்கள். அவர்கள் வளர்ந்தபின் அவர்களுக்கு எதுவும் நியாபகம் இருக்காது. ஆனால், நீங்கள் அவர்களுடன் ஒரு விவாதமே நடத்தலாம் அவர்களும் அதை புரிந்துகொள்வார்கள். குழந்தை உருவான 20 வாரத்தில் ஒலிகளை உணரவும் 27-வது வாரத்தில் ஒலிகளுக்கு ஏற்றவாறு எதிர்வினை புரிவார்கள்.

9 சுற்றுப்புறத்தை உணர்தல்

மனிதர்களின் குணாதியசங்களை இயற்கை அவர்களின் டிஎன்ஏ-வில் வைத்துள்ளது. மற்றவர்களை போல குழந்தைகளும் விவேகமான இயல்புடையவர்களாக இருப்பார்கள். அவர்களை சுற்றியுள்ள பகுதிகளை ஆராய துவங்கி இருப்பார்கள். குழந்தைகள் கருவில் கண்திறப்பார்கள் என்று நன்கு அறிவோம், அதுமட்டுமன்றி அவர்கள் தங்களின் உறுப்புகளை பார்ப்பதோடு அம்மாவின் உடல் உறுப்புகளையும் காண இயலும்.

10 அம்மாவுடனான பிணைப்பு

அம்மாவுடனான பிணைப்பு என்பது மற்றவர்களுடன் உள்ள பிணைப்பை காட்டிலும் மிகவும் அற்புதமானது. உடல் சம்பந்தமான பிணைப்பை விட குழந்தைக்கும் அம்மாவுக்கும் இடையேயான பிணைப்பானது உணர்வுபூர்வமானதாகும். அம்மாவிற்கு ஏற்படும் சந்தோஷம், துக்கம், பசி மற்றும் கோபம் என அனைத்து உணர்வுகளும் குழந்தைக்கும் செல்லும். கருவில் அவர்களின் மனநிலை கூட தாயின் மனநிலையை பொறுத்தே அமையும்.

Leave a Reply

%d bloggers like this: