குழந்தையின் முதல் பிறந்த நாளன்று நீங்கள் சிறப்பாக தோற்றமளிக்க

உங்களின் குழந்தையின் பிறந்தநாள் உங்களுக்கு விஷேசமான நாள். அந்த நாளில் குழந்தை மட்டுமல்ல நீங்களும் சிறப்பாக தோற்றமளிக்கலாம். அப்படி சிறப்பாக தோற்றமளிக்க உங்களுக்கு சில ஆலோசனைகள். 

1 சன் கிளாசஸ்

நீங்கள் வெட்ட வெளியில் உங்கள் குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடுகிறீர்கள் என்றால் சன் கிளாசஸ் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். குறிப்பாக புகைப்படங்கள் எடுக்கும் போது சன் கிளாசஸ் மேலும் அழகூட்டும். சன் கிளாசஸ் அணிந்தால் நீங்கள் கண்களுக்கு என்று தனியாக அலங்காரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

2 பட்டன் கீழிருக்கும் (Button Down) சட்டைகள்

உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் நீங்கள் Button Down ஷர்ட்களை அணியலாம். இது உங்கள் உடல் எடையை அதிகமாக காட்டாது. எதற்கும் இன்னொரு செட் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். இதனால் குழந்தைகள் உங்கள் மீது சாப்பாட்டை சிந்தினாலும் வேறு மாற்றி கொள்ளலாம்.

3 கச்சிதமான ஆடை

உங்கள் உடலின் நெளிவு சுழிவுகளை கச்சிதமாக காட்டும் ஆடையை அணிந்து கொள்ளுங்கள். அதன் பின் அனைவரின் பார்வையும் உங்கள் மேல் தன் இருக்கும்.

4 மெலிதான ஸ்வெட்டர்

உங்களுக்கு இதமாகவும் சௌகரியமாகவும் இருக்க மெலிதான ஸ்வெட்டர் ஒன்றை அணிந்துகொள்ளுங்கள். இது உங்களின் உடல் பாகங்கள் வெளியே தெரிவதை மறைக்க உதவும். ஸ்வெட்டர் அடர்ந்த நிறத்தில் இருந்தால் மிகவும் நல்லது.

5 நெக்லஸ்கள்

மிக தனித்துமான நெக்லஸ் அணியாமல் பல்வேறு நிறங்களை அணிவது சிறப்பாக இருக்கும். இவை உங்கள் கழுத்தை நெறிக்காத படி சௌகர்யமானதாக இருப்பது சிறந்தது.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இதையெல்லாம் செய்தால் தான் நீங்கள் அழகாக தோற்றமளிப்பீர்கள் என்றில்லை. உங்கள் குழந்தை இந்த உலகத்தில் பிறந்ததற்கு நீங்கள் தான் காரணம். இதை விட அழகான விஷயம் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்ன.

Leave a Reply

%d bloggers like this: