குழந்தை பெற்றபின் உங்களை கவனித்துக் கொள்ள உதவும் 9 வழிகள்..!

பெண்கள் குழந்தையை பெற்றெடுத்த பின்னர், குழந்தையையும் குடும்பத்தையும் மட்டும் கவனித்து தங்களை கவனிக்க மறந்து விடுவர். இதனால், அவர்களின் உடல் அழகு, ஆரோக்கியம், வாழ்க்கை இலட்சியம் என எல்லாவற்றையும் மறந்து, தங்கள் வாழ்க்கையை குழந்தைக்காக குடும்பத்திற்காக அர்ப்பணிக்கின்றனர்; இது சரியே! ஆனாலும் பெண்களே! நீங்கள் உங்கள் மீதும் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்; நீங்கள் நலமாக இருந்தால் தான் குழந்தையை கவனிக்க முடியும். உங்களை நீங்கள் கவனித்துக் கொள்ளும் சில வழிமுறைகளை இந்த பதிப்பில் காணலாம்..

1. உறக்கம்…

குடும்பம், குழந்தை என்று உங்களை நீங்களே வருத்திக் கொள்ளாமல், நேரத்திற்கு உறங்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரமாவது உறங்க வேண்டும்; இரவு 11-அதிகாலை 3 மணி வரையிலான உறக்கம் மிக அத்தியாவசியம்..

2. தனிப்பட்ட நேரம்..

உங்களுக்கென தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கி, தனிமையில் உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, என்ன செய்கிறோம், வாழ்க்கையின் குறிக்கோள் என்ன, குடும்ப நிலையை உயர்த்த என்ன செய்ய வேண்டும் என்பனவற்றையெல்லாம் சிந்தித்து பாருங்கள்..

3. மசாஜ்..

உங்கள் உடலுறுப்புகள் சரியாக இயங்க மசாஜ் அவசியம்; மசாஜ் செய்து கொள்வது மனதிற்கும் சற்று அமைதியை தரும்.

4. அதிகாலை..

உங்களுக்கு நடை பயிற்சி செய்யும் பழக்கம் இருந்தால், இல்லையெனினும் அதிகாலையில் சற்று தூரம் நடந்து சென்று வந்தால், அது புத்துணர்ச்சியை அளிக்கும்; மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

5. மேக்கப்..

வெளியில் செல்லும் போதோ, வீட்டில் ஓய்வாக இருக்கும் போதோ சற்று எளிமையான முறையில், உங்களை நீங்களே அழகுபடுத்தி பாருங்கள்..

6. நண்பர்கள்..

நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடன் படித்த அல்லது பழகிய நண்பர்களை சென்று பார்த்து, பேசி மகிழுங்கள்.. இது உங்களுக்கு நல்லதொரு சுகந்தமான நிம்மதியான மன நிலையை அளிக்கும்.

7. ஷாப்பிங்..

நேரம் கிடைக்கும் போது, உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி, சற்று மாறுதல் தேடுங்கள்..

8. குளியல்..

உங்கள் உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வை போக்கும் வகையில், நல்ல நீண்ட ஒரு குளியலை மேற்கொள்ளுங்கள்; இது உங்களுக்கு புத்துணர்வு அளிக்கும்.

9. உணவு..

உங்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து உண்டு, மனம் மகிழுங்கள்..

Leave a Reply

%d bloggers like this: