சிசேரியன் குறித்த சில தவறான மூடநம்பிக்கைகள்

சிசேரியன் என்று சொன்னாலே அது செயற்கையானது பயங்கரமானது மற்றும் ஆபத்தானது என்று தான் நமக்கு தோன்றும். ஆனால் இவற்றையும் தாண்டி சிசேரியன் பற்றி சில கட்டுக்கதைகள் உலாவுகின்றன. அவற்றை பற்றி இங்கு பார்க்கலாம்.

1 தாய்ப்பால் ஊட்டுவதில் சிரமம்

உங்கள் குழந்தைக்கு உணவு ஊட்டும் முறையை தேர்ந்தேடுப்பது உங்களின் தனிப்பட்ட விருப்பமாகும். ஆனால் தாய்ப்பால் கொடுப்பது என்று வந்துவிட்டால், அதில் சுகப்பிரசவம் செய்தவர்களுக்கும் சிசேரியன் செய்தவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சிசேரியன் செய்தவர்கள் ஆரம்பத்தில் தாய்ப்பால் கொடுக்க சிரமப்பட்டாலும் அது ஒன்றும் முடியாத காரியம் இல்லை. எந்த விதமான பிரசவமாக இருந்தாலும் மூன்று முதல் இருபத்து நான்கு மாதங்கள் வரை தாய்ப்பாலூட்டும் விகிதங்கள் ஒரே மாதிரி தான் இருக்கும். சிசேரியனில் உள்ள பிரச்சனை என்னவென்றால் தாய்ப்பாலூட்டும் போது அறுவை சிகிச்சை செய்த இடத்தில் சில சமயம் வலிக்கும். இதை தடுக்க, குழந்தையை சரியான நிலையில் வைத்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும் அல்லது உங்கள் மருத்துவரை அணுகி குழந்தையை எந்த நிலையில் வைத்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை பெறுங்கள்.

2 சிசேரியனுக்கு பிறகு சுகப்பிரசவம் சாத்தியமற்றது

பலர் சிசேரியன் செய்த பிறகு சுகப்பிரசவம் சாத்தியமற்றது என்றும், கவனமாக இருக்க வேண்டும் எனவும் நம்புகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. சிசேரியன் செய்த பிறகு சுகப்பிரசவம் சாத்தியமே. சுமார் 60% – 80% பெண்களிடம் நடத்திய சோதனையின் முடிவில் இது நிரூபணமாகியுள்ளது.

3 கால இடைவெளி

சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் இரண்டுக்கும், இயல்பு நிலைக்கு திரும்ப எடுக்கும் கால அவகாசம் ஒன்று தான். இது முற்றிலும் தவறானது. சுகப்பிரசவத்திற்கு பிறகு, மருத்துவமனையில் ஒன்றிரண்டு நாட்கள் தங்க வைப்பார்கள். பின், இயல்பு நிலைக்கு திரும்ப ஒன்று முதல் இரண்டு வாரங்கள் ஆகும். ஆனால் , சிசேரியன் செய்த பிறகு மருத்துவமனையில் நான்கு முதல் ஐந்த நாட்கள் தங்க வேண்டும். இயல்பு நிலைக்கு திரும்ப மூன்று முதல் நான்கு வாரங்கள் ஆகும். குறிப்பாக சிசேரியன் செய்த பெண்கள், கனமான பொருட்களை தூக்குவதிலோ, உடற்பயிற்சி செய்வதிலோ அல்லது உடலுறவு கொள்வதிலோ கவனமாக இருக்க வேண்டும்.

4 சுகப்பிரசவத்தை விட திட்டமிட்ட சிசேரியன் மேலானது

பிரசவத்தில் சிக்கல்கள் இருக்கும் போதும், தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே சிசேரியன் செய்வார்கள். மருத்துவர்களும் தேவை என்றாலொழிய சிசேரியனை பரிந்துரைக்க மாட்டார்கள். பிரசவ தேதியை சிசேரியனில் முடிவு செய்யலாம் என்றாலும், சிசேரியனை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது. சிசேரியன் செய்யும் போது அதிக ரத்த போக்கு மற்றும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சுகப்பிரசவம் திட்டமிடப்படாத ஒன்றாக இருந்தாலும் சிசேரியனில் உள்ள ஆபத்துகளை ஒப்பிட்டு பார்த்தால் சுகப்பிரசவமே சிறந்தது என்று உங்களுக்கே புரியும். 

Leave a Reply

%d bloggers like this: