தாய்ப்பால் புகட்டுவது குறித்து தெரியாத சில விஷயங்கள்

தாய்ப்பால் புகட்டுவது என்பது அனைத்து தாய்மார்களும் தாய்மையின் போது கடந்து வரும் பாதை. இது கேட்பதற்கு எளிதான காரியமாக தெரிந்தாலும், நிஜத்தில் இது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதுமட்டுமல்ல, இது ஒவ்வொரு தாய்மாருக்கும் வேறுபாடும். இங்கே, தாய்ப்பால் கொடுப்பது குறித்து பலருக்கும் தெரியாத சில விஷயங்களை பார்ப்போம். 

1 வலி மிகுந்தது

தாய்ப்பால் புகட்டுவது ஒரு இயற்கையான செயல்முறையாக இருந்தாலும், அதற்கு பொறுமை மிகவும் அவசியம். தாய் மற்றும் குழந்தை இரண்டு பேருக்கும் இதில் பொறுமை தேவை. பல தாய்மார்களுக்கும் சொல்லப்படாத விஷயம் என்னவென்றால் இது வலி மிகுந்தது. இந்த வலி சிறிது நாட்களுக்கு அல்லது சில வாரங்களுக்கு கூட நீடிக்கலாம். ஒரு ஆய்வில் 81% தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது வலியால் அவதிப்படுவதாக கூறியுள்ளனர். இதை எவ்வளவு வேகமாக கடந்து செல்கின்றீரோ அது வரை உங்களுக்கு நல்லது.

2 குழந்தையை பழக்கப்படுத்துவதில் சிரமம்

எல்லா குழந்தைகளும் உடனடியாக தாய்ப்பால் குடிக்க கற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கும் கற்றுக்கொள்ள சிறிது காலம் பிடிக்கும். சில குழந்தைகள் உடனடியாக கற்றுக்கொண்டாலும், முழுமையாக, தேவையான பாலை குடிக்காமல் நடுவில் தூங்கிவிடுவார்கள். அந்த மாதிரி நேரத்தில் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது சற்றே சிரமமான விஷயம் தான்.

3 தாய்ப்பால் சுரப்பு

உங்கள் குழந்தைக்கு பசிக்கும் போதெல்லாம் உங்கள் உடலால் தாய்ப்பால் சுரக்க முடியாது. சில நேரங்களில் உங்கள் குழந்தைக்கு அதிகமாக பால் தேவைப்படும். ஆனால் அந்த அளவிற்கு உங்கள் உடலில் தாய்ப்பால் சுரக்காது. அதே சமயம் உங்கள் உடலில் அதிகமாக சுரக்கும் நேரத்தில், குழந்தையின் தேவை மிக குறைவாகவே இருக்கும். அதனால், சில நேரங்களில் தாய்ப்பாலை புட்டிகளில் பிடித்து குளிர்சாத பெட்டிகளில் பதப்படுத்தலாம்.

4 தாய்ப்பால் கசிவு

தாய்ப்பால் கசிவு என்பது மிகவும் அரிதான ஒன்று என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், பிரசவத்திற்கு பின் ஆறு முதல் எட்டு வாரங்களில் தாய்ப்பால் கசிவு ஏற்பட நிறைய வாய்ப்பிருக்கிறது. பால் சுரப்பது உங்கள் கையிலோ கட்டுப்பாட்டிலோ இல்லை என்றாலும், அதை சமாளிக்க வேண்டியது உங்கள் கையில் தான் உள்ளது. குழந்தைக்கு கொடுக்கலாம் அல்லது மார்பக பம்ப் மூலம் பாலை புட்டிகளில் நிரப்பி வைக்கலாம்.

5 சோர்வை உண்டாக்கும்

தாய்ப்பால் கொடுக்கும் போது ஒரு நாளைக்கு 500 கலோரிகள் வரை எரிக்கப்படும். இதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் எல்லாம் கரைந்து விடும். குறிப்பாக இடுப்பு பகுதிகளில் உள்ள கொழுப்புகள் எல்லாம் கரைந்து விடும்.

Leave a Reply

%d bloggers like this: