தொப்பையை மறைக்க உதவும் 10 வழிகள்

அழகை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. உடல் அழகை பெற அவர்கள் உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி என செய்வார்கள். ஆனால் திருமணத்தின் பின் அவர்கள் வாழ்வில் சிறு மாற்றங்கள் ஏற்படும், குழந்தை பிறந்ததும் முற்றிலும் மாறிவிடும். அவர்களது முழு கவனமும் குழந்தையை கவனித்து கொள்வதிலேயே இருக்கும். அவர்களை கவனித்து கொள்ள தவிறிவிடுவதால், உடல் அமைப்பு மாறி இருக்கும். இதில் முதன்மையானது பிரசவ கால தொப்பை. பெண்களுக்கு இவற்றை குறைக்க நேரமிருக்காது. ஆனால் அவர்களுக்கு பிடித்தமான ஆடை அணிந்து வெளியில் செல்லும் போது தொப்பை அவர்களை சங்கடப்படுத்தும் ஒன்றாக இருக்கும். இங்கு பெண்கள் தொப்பையை குறைக்க முடியவில்லை என்றாலும், மறைக்க உதவும் 10 வழிகளை பார்க்கலாம். 

1 V- கழுத்து ஆடைகள்

சற்று தளர்வான V- கழுத்து ஆடைகள் அணிவதால், உங்கள் தொப்பை அதனுள் மறைக்கப்படும். உங்கள் தோள் மற்றும் மார்பு பகுதி இறுக்கமாகவும், தொப்பை இருக்க கூடிய வயிற்று பகுதி சற்று தளர்வாகவும் இருக்கும் படியான ஆடைகளை அணிய வேண்டும். இது போன்ற ஆடைகளை தேர்வு செய்யும் போது, உங்கள் உடலை இது சமமாக காட்டும்.

2 ஆபரணங்கள்

பெண்கள் பெரும்பாலும் ஆபரணங்களின் சக்தியை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இது அவர்களின் தோற்ற பரிமாணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். கழுத்திலும், இடுப்பிலும் அணியும் ஆபரணங்கள் உங்களை அழகாக காட்டுவதோடு, உங்கள் உடல் அமைப்பபை அழகாக காட்டும். சில வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்களை அதனுடன் இணையாய் இருபவற்றோடு வாங்கி அணியும் போது, நீங்கள் உங்கள் தொப்பையை நினைத்து வருத்தப்பட தேவை இல்லை.

3 உடல் வடிவமைப்பு ஆடைகள் (body shapers)

ஸ்பான்டெக்ஸ் பொருளால் உருவாக்கப்பட்ட உடல் வடிவமைப்பு ஆடைகளை பயன்படுத்தலாம். இவை உங்கள் உடலை இறுக்கமாக்கி உங்களை சிக்கென்ற தோற்றத்துடன் வெளிக்காட்ட இது உதவும். இது உங்கள் தொப்பையான வயிற்றை மறைத்து தட்டையாக வெளிப்படுத்தும். இவை பெரிதும் உதவுவதாக பெரும்பாலான பெண்கள் கூறுகிறார்கள்.

4 அடுக்கடுக்கான ஆடைகள்

இது உங்கள் தொப்பை மற்றும் சமசீரற்ற வயிற்று பகுதியை தட்டையாகவும், அழகான தோற்றத்தையும் ஏற்படுத்தும். ஜாக்கெட்டுகள் அல்லது பிளேஸர்களுடன் உங்கள் ஆடைகளை அடுக்குவது போன்ற தோற்றம் உங்களுக்கு பெரிதும் உதவும். நன்கு பொருந்த கூடிய பிளேஸர்கள் மற்றும் ஜாக்கெட்டுகள் வாங்கி அணிவது அழகான ஆர்வத்தை தூண்டக்கூடிய பரிமாணத்தை கொடுக்கும்.

5 உயரமான ஆடைகள்

உயரமான இடுப்பு ஜீன்ஸ் தோற்ற மாயைகளை உருவாக்க வசதியாகவும், சிறந்ததாகவும் இருக்கிறது. அதிக இடுப்பு கொண்ட டெனிம் அல்லது A- வரி பாவாடை உங்கள் இடுப்பு சிறியதாக இருக்கும்போது உடலின் நீளத்தின் பாதி கீழே இருக்கும்.டெனிம் அல்லது வரிவரியான பாவாடை நீளமாக இருப்பதால் உங்கள் வயிற்று பகுதியை சிறிதாக காட்டும். மேலும் இது சரியான தோற்றத்தை கொடுக்கவும் உதவுகிறது.

6 பேப்லெம் ஆடைகள்

மேற்சட்டையுடன் கால் சட்டை பொருந்தி இருப்பது போன்ற ஆடைகளை உபயோகிக்கலாம். இடுப்பு பகுதியில் சிறிய சுருக்கங்கள் இருக்கும் படியான ஆடைகளை வாங்குங்கள். இதில் இருக்கும் சுருக்கம் உங்கள் தொப்பையை மறைத்து அழகாக வெளிப்படுத்தும்.

7 பெல்ட்கள்

பாவாடைகள்(skirts) மற்றும் ஜீன்ஸ் அணியும் போது பெல்ட்டுகளை பயன்படுத்துங்கள். இது உங்கள் வயிற்றை தட்டையாக காட்ட உதவும். நீங்கள் அணியும் உடைகள் இறுக்கமானதாக இல்லாமல் சற்று தளர்வாக இருக்கும் படி அணிவது சிறந்தது.

8 குர்தாக்கள் அல்லது காஃப்டன்கள்

இது போன்ற பாரம்பரிய உடைகளை சற்று தளர்வாக அணிவது தொப்பையை மறைத்து உடலை அழகாக காட்டும். இது போன்ற உடைகள் பாரம்பரியத்திற்கு ஏற்றதாகவும், நாகரிகமாகவும் கருதப்படுகின்றன.

9 நீளமான பாவாடைகள்

நீளமான பாவாடைகள் மற்றும் முக்கால் கால் சட்டைகள் போன்றவை உங்களை ஒல்லியாகவும், உங்கள் தொப்பையை மறைத்தும் அழகான மாயையை ஏற்படுத்தும். இவை நாகரீகமானதாகவும் கருதப்படுகிறது.

10 கருப்பு

கருப்பு உடல் மெலிந்திருப்பது போன்ற மாயையை ஏற்படுத்த கூடியது. நீங்கள் அணிய கூடிய ஆடைகள் கருப்பு வண்ணத்தில் இருந்தால் அவை உங்களை ஒல்லியாகவும், உங்கள் வயிற்று சதை குறைந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.  

Leave a Reply

%d bloggers like this: