பிரசவத்தின் போது தேவைப்படும் 5 அவசியமான பொருட்கள்

பிரசவத்திற்கு தயாராகும் போது முதல் எழும் கேள்வியே என்ன என்ன பொருட்களை எடுத்து செல்ல வேண்டும் என்பது தான். அளவுக்கதிகமான பொருட்களை எடுத்து செல்வது மிக குறைந்த பொருட்களை எடுத்து செல்வதும் மிகவும் தவறானது. நீங்கள் மருத்துவமனையில் எத்தனை நாட்கள் தங்க வேண்டியிருக்கும் என்று தெரியாது என்பதால், அவசியமான பொருட்கள் சிலவற்றை காட்டாயமாக எடுத்து செல்ல வேண்டும். அவை என்னவென்று இப்போது பார்க்கலாம். 

1 உடைமைகள்

முதல் முக்கியமான பொருள் உங்கள் துணிகள். நீங்கள் எந்த உடையில் சௌகரியமாக உணர்வீர்களோ அந்த துணிகளை எடுத்து கொள்ளுங்கள். மேலும் மற்ற பொருட்களான தலையணை, போர்வை, துண்டு, டூத் பிரஸ், பேஸ்ட், எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களை சௌகரியமாக உணர வைக்கும் பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

2 உணவு

நம்மில் யாருக்கும் பிரசவ வலி எப்போது வரும் மற்றும் பிரசவம் முடிய எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியாது. பலர் மருத்துவமனையில் கிடைக்கும் உணவுகளை உண்பர். ஆனால் வீட்டு சாப்பாடே சிறந்தது. அதுவும் உங்களுக்கு பிடித்தமான உணவு என்றால் மிகவும் நல்லது. பழங்கள், பிஸ்கட் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். மேலும் தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் ஆகியவையும் எடுத்துக்கொள்ளலாம்.

3 மின்னணு பொருட்கள்

இது உங்கள் பிரசவத்தை சுலபமாக்க போவதில்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பொருளாகும். உங்கள் கைப்பேசி தான் உங்களை வெளியுலகத்தோடு தொடர்பில் வைத்திருக்க உதவும். அதனால், மறக்காமல் கைப்பேசி மற்றும் சார்ஜ்ர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு பிடித்தமான இசையை பதிவேற்றி கொள்ளுங்கள். அதனால் உங்களுக்கு நன்றாக பொழுதும் போகும்.

4 குழந்தைகளுக்கான பொருட்கள்

குழந்தைகளுக்கு தேவையான நாப்கின்கள் ( சிறிய அளவு ), போர்வை, துணிகள், பருத்தி துண்டுகள் மற்றும் இன்னும் பல தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தயாராக வைத்திருங்கள்.

5 பிரசவத்திற்கு பின் தாய்க்கு தேவையானவை

பிரசவத்திற்கு பின் தாய்மார்களுக்கு வேறு விதமான தேவைகள் இருக்கும். அதனால் அதற்கு தேவையான துணிகள், துண்டுகள், நாப்கின்கள், உள்ளாடைகள், உணவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் முன்பே கூறியது போல், உங்களுக்கு சௌகரியமாக உணரும் பொருட்களை மறக்காமல் எடுத்துக்கொள்ளுங்கள். 

Leave a Reply

%d bloggers like this: