பிறந்த குழந்தையை எப்போது வீட்டிற்கு வெளியே எடுத்து செல்லலாம்

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களிடம் இருக்கும் மிக முக்கியமான கேள்வி இது. குழந்தை பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்களில் வெளியே எடுத்துச்சென்றால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்கு வெளியே எடுத்து செல்வதை தவிருங்கள். குழந்தையை வெளியே எடுத்து செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை இப்போது பார்ப்போம்.

1 அதிக வெயில்

அதிக நேரம் வெயிலிலும் வெப்பத்திலும் குழந்தையை வெளிப்படுத்தினால், அவர்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் அதிக வெப்பத்தில் அவர்களை வெளியே எடுத்து செல்வதை தவிருங்கள். குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருப்பதால் அதிக பாதிப்புகள் ஏற்படும். இதமான வெப்பத்தில் அவர்களை வெளியே அழைத்து செல்லுங்கள்.

2 அதிக வெப்பம் மற்றும் குளிர்

மேற்சொன்ன அதே காரணங்கள் இதற்கும் பொருந்தும். அதிக வெப்பம் மற்றும் குளிரில் குழந்தையின் சருமம் பாதிக்கப்படும் என்பதால் அக்காலங்களில் குழந்தையை வெளியே அழைத்து செல்வதை தவிருங்கள். குளிரில் குழந்தைக்கு சளி பிடிக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லதல்ல.

3 ஆடைகள்

குழந்தைக்கு அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைந்த ஆடைகளையே அணிவிக்காதீர்கள். குழந்தைக்கு அதிகமாக உடை அணிந்தால், அவர்களுக்கு அதிகமாக வியர்க்கவும் உடம்பின் வெப்பநிலை அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு. இதுவே குறைந்த ஆடை அணிந்தாலும், வானிலை குளிராக இருந்தால் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சூழ்நிலைக்கு ஏற்ப குழந்தைக்கு உடை அணிவது சிறப்பு.

 4 சுற்று சூழல்

உங்கள் பகுதியில் ஏதேனும் நோய் பரவி வந்தால் குழந்தையை வீட்டிற்குள் வைத்திருப்பது நல்லது. குழந்தையின் நோய்எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதால், அத்தகைய காலத்தில் குழந்தையை வெளியே எடுத்து செல்வதை தவிருங்கள்.

5 போர்வை

நீங்கள் குழந்தையுடன் வெளியே செல்லும் போது சில விஷயங்களை கவனத்தில் வைத்திருங்கள். வேறுபட்ட வானிலைகளில் இருந்து குழந்தையை பாதுகாக்க எப்போதும் ஒரு போர்வையை கையில் வைத்திருங்கள்.

வெளியில் உள்ள சுத்தமான காற்றை சுவாசிப்பது தப்பில்லை. ஆனால் குழந்தையின் பாதுகாப்பே முக்கியம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

Leave a Reply

%d bloggers like this: