முதல் முறை தாயானவர்களின் உணர்வுகள்

நீங்கள் உங்கள் சிறிய குழந்தையை உயிர்ப்பித்திருக்கிறீர்கள். இப்போது நீங்கள் தாய் எனும் ஸ்தானத்தை அடைந்திருக்கிறீர்கள். எந்த ஒரு செயலையும் புதிதாக செய்வது எளிதான ஒன்று அல்ல. முதல் முறை தாய்மை அடைந்திருக்கும் உங்களுக்கும் இது எளிதான ஒன்றாக தோன்றாமல் இருக்கலாம். தூக்கமில்லாத இரவுகள், நச்சரிக்கும் சுய சந்தேகம், என்ன செய்வது போன்ற உணர்வுகள் எப்போதும் போதுமானதாக இருக்காது. புதிது புதிதாக ஏதும் தோன்றி கொண்டே இருக்கும். இவை அனைத்தும் ஒரு புதிய தாய் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்கிற சில காரியங்களே. நீங்கள் உங்களால் முடிந்த வரை சிறந்த அம்மாவாக இருக்கிறீர்கள். 

1 தூக்கம் கனவாகும்

தூக்கமின்மை என்பது தினசரி நிகழ்வாக மாறும். இந்த தூக்கமின்மையிலிருந்து எந்த அன்புள்ள அம்மாவாலும் தப்பிக்க முடியாது. இந்த தலை கீழான பாதையில் நீங்கள் பயணித்தேயாக வேண்டும். இது ஓரிரு நாட்களில் முடிய கூடிய ஒன்றல்ல. பல மாதங்களுக்கு தொடரக் கூடிய ஒன்று. இதனால் உங்களுக்கு தலைவலி, எரிச்சல், மறதி மற்றும் மன அழுத்தம் போன்றவை ஏற்படும். உதவி கேட்பதை நினைத்து கவலையடைய வேண்டியதில்லை. உங்கள் குழந்தையை கணவர் அல்லது உறவினர்களின் பாதுகாப்பில் விட்டுவிட்டு நீங்கள் சிறிது நேரம் உறங்குங்கள்.

2 விருப்பத்திற்குரிய ஆடைகள் வெறும் நினைவாகும்

உங்களுக்கு பிடித்த ஆடைகள் அணிந்த நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கும். உங்களது உடைகள் உங்களுக்கு இப்போது சிறியதாகி இருக்கும். உடல் அமைப்புகளை அழகாக கட்சிதமாக காட்டும் உடைகளை அணிய முடியாததை நினைத்து ஏங்குவீர்கள். நீங்கள் எப்போதும் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்பது தான் உண்மை. உங்கள் நல்வாழ்வில் உங்கள் கவர்ச்சிக்கு என எந்த நீதிபதிகளும் இல்லை. நீங்கள் மீண்டும் பழைய உடல் எடைக்கு திரும்ப முடியும் என நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் விலைமதிப்பற்ற சிறு குழந்தையை நினைக்கும் போது, இவை ஒன்றும் இல்லாததாக தோன்றும். நீங்கள் பழைய தோற்றத்தை பெற உடல் பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.

3 தாய்ப்பால் கொடுப்பது

தாய்ப்பால் ஊட்டுவது கடினமாக தோன்றலாம். நீங்கள் உங்கள் குழந்தையை சரியாக வைத்து பால் கொடுக்கவில்லை என்றால், அதனால் ஏற்பட கூடிய வலி நரகத்தை விட கொடுமையானதாக இருக்கும். புண் மற்றும் மார்பக காம்புகளில் ஏற்படும் வெடிப்புகள் வலியுடன் அசௌகர்யத்தையும் ஏற்படுத்தும். இதை சரி செய்ய கூடிய தயாரிப்புகள் அதிகமாக கடைகளில் கிடைப்பதால், இதெற்கென நீங்கள் கவலை பட வேண்டியதில்லை. நீங்கள் இதற்கான தீர்வுகளை நினைத்து கவலை கொள்ளாமல், ஆரோக்கியமான உணவு உட்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.

4 சரியாக செய்தும் சரியில்லாமல் மாறிவிடுவது

நீங்கள் மற்றவர்கள் சொன்ன எல்லாவற்றையும் மற்றும் உங்களுக்கு மற்றவர்கள் உணர்த்தும் எல்லாவற்றையும் செய்கிறீர்கள். ஆனால் உங்கள் குழந்தை அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து அழும். இது உங்களை சரியான பெற்றோர் இல்லை என்பதை போல் உணர செய்யும். உங்கள் குழந்தையை சரியான முறையில் வளர்ப்பது எப்படி என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்கள் வீட்டை சுத்தமாகவும் குறைகளற்றதாகவும் வைத்துக் கொள்ளுங்கள். இது நீங்கள் விரும்பும் சில நபர்களின் உதவிகள் இல்லாமல் செய்வது சற்று கடினமான ஒன்று தான்.

5 ஹார்மோன் மாற்றங்கள்

நீங்கள் எதாவது ஒரு வேலையாக ஒரு அறையில் நுழைந்திருப்பீர்கள், ஆனால் அது ஏன் என்று மறந்திருப்பீர்கள். ஒரு சில செயல்களை ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என்பதையே மறந்திருப்பீர்கள். உதாரணமாக, சில பொருட்களை கையில் வைத்து கொண்டே தேடுவது, சாவிகளை பிரிட்ஜ்ல் வைக்க போவது, காய்களை ஆணியில் மாட்டுவது போன்றவற்றை கூட செய்யலாம். இப்படி செய்தால் அதை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை. இது உங்கள் தவறல்ல. உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் தான் நிகழ்கின்றன. இது சிறிது காலம் எடுக்கும், ஆனால் விரைவில் நீங்கள் புத்திசாலித்தனமான, மறதி இல்லாத, வழக்கமான நிலைக்கு திரும்புவீர்கள்.

6 தனிமை

உங்களது எல்லா முயற்சிகளிலும் தனிமையை உணர்வீர்கள். யாருடைய துணையும் இல்லாதது போலவும், ஏன் உங்கள் கணவர் கூட உங்களுக்கு துணை இல்லாதது போல் தனிமையாய் உணரவீர்கள். குழந்தையை நீங்கள் எவ்வளவு விரும்பினாலும், சில நேரங்களில் உங்கள் பொறுமையை பெரிதும் சோதிக்கும். உங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியாத அளவிற்கு, உங்களது அனைத்து பிரச்சனைகளும் தலையை உண்பது போல் உணர்வீர்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்களை தொடர்பு கொண்டு சொல்லுங்கள். உங்கள் கவலைகளை மனதில் புதைத்து வைக்கும் பொழுது, அவை உங்களை நரக வேதனை அடைய செய்யும்.

உங்கள் குழந்தையுடனான இந்த நினைவுகள் உங்களுக்கு மீண்டும் கிடைக்க பெறாத பொக்கிஷம் ஆகும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்து பெற்ற உங்கள் செல்ல குழந்தையின் சிரிப்பை பார்க்கும் போது, நீங்கள் பட்ட சின்ன சின்ன அனைத்தும் காற்றில் கரைந்து விடும்.

Leave a Reply

%d bloggers like this: