முதல் முறை தாயானவர்கள் செய்யும் 10 தவறுகள்

கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வழக்கமான பழக்கவழக்கங்களின் மீது ஒரு நல்ல எண்ணை எடுத்துக் கொள்ளும் என்பதில் ஆச்சரியமில்லை. இது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். தாயாக இருப்பதால் உங்களுடைய தோள் மீது நீங்கள் ஏற்கனவே நிறைய பொறுப்பை வைத்திருக்கிறீர்கள், உங்கள் தினசரி அழகுகளில் இருந்து உங்களை மேலும் தள்ளி வைக்கிறீர்கள். அதேபோல் நீங்கள் அழகு குறித்த பல புதிய தவறுகளையும் செய்கிறீர்கள். புதிய அம்மாக்கள் செய்யும் 10 தவறுகள் இங்கு தரப்பட்டுள்ளது. 

1 சன்ஸ்க்ரீன் லோஷன் போட மறத்தல்

பெரும்பாலான பெண்கள் அம்மாவான பிறகு அதிக நேரத்தை குழந்தையுடன் பொது இடங்களிலேயே செலவிடுகின்றனர். சூரியனின் உக்கிரமான வெப்பத்திலிருந்து உங்களை பாதுகாக்க வேண்டும். மேலும், சூரியன் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும் நேரம் இது என்பதை உணருங்கள். எனவே வெளியில் செல்லும்போதெல்லாம் சன்ஸ்க்ரீன் லோஷன் போட மறந்துவிடாதீர்கள்.

2 முடியை பாதுகாக்க மறத்தல்

உங்களின் சருமத்தை பாதுகாப்பது போல் முடியை பாதுகாப்பதும் அவசியமாகும். சரும பாதுகாப்பிற்கு சன்ஸ்க்ரீன் லோஷன் போடுவது போல் முடியையும் பாதுகாக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் உங்கள் முடிக்கு வண்ணம்  பூசியிருந்தால் சூரிய ஒளி அதற்கு இன்னும் வண்ணம் பூசக்கூடும்.எனவே, அதற்கென இருக்கும் ஸ்பிரே அல்லது முடியை பாதுகாக்க தொப்பிகளையும் பயன்படுத்தலாம்.

3 அதிக அலங்காரம்

குழந்தையை தூக்கிக்கொண்டு விழாக்களுக்கு செல்லும் போது வழக்கமான அலங்காரத்தை கடைபிடிப்பது கடினமாகும். உங்கள் குழந்தையின் குறும்பு கைகள் உங்களின் அலங்காரத்தை ஒரு வழி செய்துவிடும். எனவே அதிகளவு அழகுசாதன பூச்சுக்கள் இல்லாத இயற்கையான உபகரணங்களையோ அல்லது தண்ணீரால் பாதிக்கப்படாத நீண்ட நேரம் வரக்கூடிய அலங்காரம் செய்து கொள்வது சிறந்தது.

4 கைகள் வறண்டு போகுதல்

உங்கள் குழந்தையுடன் இருக்கும்போது நாப்கின் மாற்றுதல், துணிகளை துவைத்தல் என தொடர்ச்சியான வேலைகளால் உங்கள் கைகள் வறண்டு காட்சியளிக்கும். எனவே, உங்களுடன் குணப்படுத்தும் மருந்து வைத்திருப்பது நல்லதாகும். ஏனெனில் உங்கள் குழந்தையையும் இதே கைகளால்தான் நீங்கள் தொடவேண்டும்.

5 முடி அகற்ற மறத்தல்

உங்கள் காய், கால்களில் அதிக முடிகள் இருக்கும்போது உங்களால் கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இது சாதாரணமாய் தெரிந்தாலும், உங்களின் மணவாழ்க்கைக்கு இது மிகவும் அவசியம். முடி அகற்றுவது உங்களுக்கு சோம்பேறித்தனமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், அதை செய்துவிடுவது தான் உங்களுக்கு நல்லது.

6 முகம் கழுவ மறத்தல்

குழந்தைக்கு பாலூட்டும் போது நீங்கள் சற்று தூங்குவது சகஜம் தான். ஏனெனில், அதன்பின் நாள்முழுவதும் நீங்கள் குழந்தை பின்னாடியே ஓட வேண்டியிருக்கும். எதுவாயினும், தூங்குவதற்கு முன் முகத்தில் உள்ள அலங்காரத்தை நீக்கிவிடுங்கள், அதில் பல பாக்டீரியாக்கள் இருக்கலாம். எனவே தூங்குவதற்கு முன் முகத்தை நன்கு கழுவிவிட்டு தூங்குங்கள்.

7 பாதங்களை பற்றி மறத்தல்

உங்களின் பாதங்களுக்கும் சிறிது கவனம் தேவைப்படும். இல்லையேல் குழந்தையுடனான உங்களின் மாலை நடைபயிற்சி கொடுமையானதாக இருக்கும். எனவே பாதங்களை நன்கு சுத்தப்படுத்திவிடுங்கள். குறிப்பாக குளியலுக்கு பின் ஈரமின்றி நன்கு உலர வைக்கவும்.

8 அவசர அழகு சாதன பொருட்களை மறத்தல்

உங்களுக்கு எப்போது அவசர அழகு சாதனங்கள் தேவைப்படும் என்று உங்களுக்கே தெரியாது. அதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க சிறிய கிளிப், முடிக்கு தேவையான பின்கள், லிப் பாம் போன்றவற்றை உடன் எடுத்து செல்லுதல் அவசியம்.

9 உடற்பயிற்சிகளை தவிர்த்தல்

இது பெரும்பாலும் செய்ய முடியாதது. ஆனால் கண்டிப்பாக செய்ய வேண்டியது கூட. தொடர்ச்சியான உடற்பயிற்சியே உங்களின் உடலமைப்பையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். சின்ன நடைப்பயிற்சி, எளிமையான உடற்பயிற்சி போன்றவை உங்களின் மனஅழுத்தத்தை குறைப்பதோடு இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

10 போதுமான அளவு நீர் அருந்தாமலிருத்தல்

தினசரி போதுமான அளவு நீர் அருந்துதல் என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால், வேலை மிகுந்த நாட்களில் நீங்கள் அதை மறந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். எதுவாயினும், போதுமான அளவு நீர் அருந்த முயற்சி செய்யுங்கள். இது உங்கள் எடையை கட்டுக்குள் வைப்பதோடு உங்கள் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

Leave a Reply

%d bloggers like this: