வாழ்க்கையை பற்றி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய 10 விஷயங்கள்

உங்கள் குழந்தை வெளி உலகத்திற்கு செல்லும்முன் அவர்கள் சில விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும். பெற்றோராக அவர்களுக்கு இங்குள்ள மோசமான உலகத்தை பற்றியும் அவர்கள் எந்த விஷயங்களிலெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென சொல்லித்தர வேண்டியது உங்கள் கடமையாகும்.

எல்லா பிரச்சினைகளுக்கும் உங்களால் அவர்களை தயார் செய்ய இயலாது. ஆனால், அவற்றிற்கான ஒரு சிறிய முன்னோட்டத்தை தர இயலும். அவர்களை பயமுறுத்துவது உங்கள் நோக்கமல்ல, இருப்பினும் பிரச்சினைகளை சமாளிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். வாழ்க்கையை பற்றி உங்கள் குழந்தைக்கு நீங்கள் அவசியம் சொல்லித்தர வேண்டிய 10 விஷயங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

1 தோல்வியிலிருந்து மீண்டுவருதல்

உங்கள் குழந்தைகள் அவர்களின் வாழ்க்கையின் ஒருகட்டத்தில் தோல்வியை சந்திப்பார்கள். பெற்றோராக உங்கள் கடமை யாதெனில், தோல்வி என்பது வாழ்கையின் ஒரு சாதாரண அங்கம்தான் என்று புரிய வைக்கவேண்டும். அவர்கள் அதை புரிந்துகொள்ளும் பட்சத்தில் தோல்விகள் அவர்களை ஒருபோதும் பாதிக்காது.

2 நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுத்தல்

” நன்றி சொல்லுதல்”, “மன்னிப்பு கோருதல்” போன்ற நல்ல பழக்கங்கள் இல்லாதவர்களை யாரும் விரும்பமாட்டார்கள். எனவே சிறுவயது முதலே நல்ல பழக்கங்களையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் சொல்லி கொடுத்து வளர்ப்பது அவசியமாகும்.

3 உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துதல்

உங்கள் குழந்தைக்கு வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் பொருள் முக்கியமா அல்லது உறவுகள் முக்கியமா என்று முடிவெடுக்கும் நிலை வரும். அவர்களுக்கு பொருளை விட உறவுகளே முக்கியமென்று சொல்லிக் கொடுங்கள். பொருட்களை வாங்கிவிடலாம் ஆனால், உறவுகளையோ, உணர்வுகளையோ அப்படி வாங்க முடியாதென்று புரிய வையுங்கள்.

4 சரியான நண்பர்களை தேர்ந்தெடுத்தல்

உங்கள் குழந்தைகள் வளரும்போது அவர்கள் நண்பர்களுடன்தான் அதிக நேரத்தை செலவிடுவார்கள். எனவே நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாய் இருக்க கற்றுக் கொடுங்கள்.

5 பெரிவர்களை மதிக்க கற்றுக்கொடுத்தல்

இது தலைமுறைக்கு தலைமுறை மறைந்து வருவதாகும். வயதை மட்டும் கருத்தில் கொண்டு ஒருவருக்கு மரியாதை ஏன் தரவேண்டும் என்னும் எண்ணம் அதிகரித்து வருகிறது. உங்கள் குழந்தைக்கு புரியவையுங்கள் அவர்களின் புத்திக்கூர்மைக்கும், அனுபவத்திற்கும் கண்டிப்பாக மரியாதை தரவேண்டுமென்று.

6 வெற்றியையும், தோல்வியையும் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ளுதல்

உங்கள் குழந்தையின் வாழ்க்கை பல போட்டிகள் நிறைந்ததாக இருக்கப்போகிறது. உண்மையாதெனில், எல்லா நேரங்களிலும் அவர்களால் வெற்றி பெற இயலாது. சில சமயங்கள் தோல்வியடையும் போது, அவர்கள் மனமுடையாமல் உத்வேகத்துடன் அடுத்தமுறை வெற்றிபெற வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களின் அடுத்த சவாலை புன்னகையுடன் எதிர்கொள்ள நம்பிக்கையளியுங்கள்.

7 தைரியமாக உண்மையை கூற கற்றுக்கொடுத்தல்

நீங்களே விளைவுகளை நினைத்து பயந்து உண்மையை கூற இப்பொழுதும் பயப்படுவீர்கள். ஆனால் உங்கள் அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள் பொய் கூறி பயந்து கொண்டிருப்பதை விட உண்மையை கூறுவது சிறந்தது என்று. உங்கள் குழந்தைக்கு புரியவைக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் பொய் கூறுதல் அவர்களின் குணாதிசயத்தை முற்றிலுமாக மோசமாக மாற்றிவிடும் என்பதுதான்.

8 அனைத்திலும் இருந்து கற்றுக்கொள்ளுதல்

எளிதில் சொல்லக்கூடியதும், ஆனால் நம்மால் கடைபிடிக்க முடியாததும் இதுதான். ஒருவர் உங்களை விட சில விஷயங்களில் சிறந்தவராக இருப்பார்கள். ஆனால் உங்களின் ஈகோ அதை ஒத்துக்கொள்ள தடுக்கும். அவர்களை பார்த்து பொறாமைப்படாமல் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். இதை செய்ய நீங்கள் கற்றுக்கொண்டு உங்கள் குழந்தைக்கும் கற்றுக்கொடுங்கள்.

9 அன்பாய் இருக்க கற்றுக்கொடுத்தல்

உங்களிடம் அன்பாய் இருப்பவர்களிடம் மட்டும்தான் அன்பாய் இருக்கவேண்டுமென அவசியமில்லை. அன்பு ஒன்றும் கொடுத்து வாங்கும் பொருள் அல்ல. இது ஒருவரை காயப்படுத்துவதை விட சிறந்தது என்று அவர்களுக்கு புரிய வையுங்கள்.

10 வாழ்க்கை ஒரு வரம்

அனைத்திலும் முக்கியமானது இதுதான். வாழ்க்கை ஒரு வரமென்று புரிய வைப்பதுதான். நாள் முழுவதும் என்ன துயரத்தை சந்திக்க நேர்ந்தாலும் எத்தகைய சவாலை எதிர்கொண்டாலும், அவர்கள் சுவாசிக்கும் அருமையான காற்றும் அற்புதமான சூரிய ஒளியும் இயற்கையின் பரிசென உணர்த்துங்கள். இந்த வாழ்க்கை மீண்டும் கிடைக்கப்போவதில்லை எனவே மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென கற்றுக்கொடுங்கள்.

Leave a Reply

%d bloggers like this: