குழந்தைகளுக்கான கல்வி:ஒவ்வொரு குழந்தையும் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்

குழந்தை வளர்ப்பு என்பது குழந்தைக்கு தேவைப்படும் உணவு, ஆடைகள், அன்பு, பாசம் இவற்றை அளிப்பது மட்டுமல்ல. குழந்தைக்கு தேவையான அறிவினை போதிப்பது, நல்ல கல்வியை அளிப்பது, நல்ல பள்ளியில் சேர்த்து விடுவது இவை போதுமா? இவையும் போதாது.. பின் என்னதான் செய்ய வேண்டும் என்று குழம்புகிறீரா? குழந்தைகளுக்கு அடிப்படை தேவைகள், அடிப்படை கல்வி இவற்றை அளிப்பதுடன், அவர்களின் கற்பனை திறன் மேம்பட, அறிவை அகண்டமாக்க சிறந்த புத்தகங்களை, புத்தக வாசிப்பினை அறிமுகப்படுத்த வேண்டும்.. அப்படி அறிமுகப்படுத்த வேண்டிய புத்தகங்கள் எவை என இந்த பதிப்பில் படித்து அறியலாமா?? 

1. Alice’s Adventures in Wonderland- Lewis Carroll

இது ஒரு அற்புதமான கதை. அலைஸ் எனும் சிறுமி தன் உலகத்திலிருந்து, முயல் கூட்டத்தின் உலகிற்குள் எதேச்சையாக சென்று விடுகிறாள். அங்கிருந்து வெளிவருவது எப்படி என்று தெரியாமல், அந்த உலகத்தை பற்றி முழுமையாக அறிய ஆர்வத்துடன் வலம் வருகிறாள். இந்த கதை குழந்தைகள் படிக்க ஏற்றது.

2. Charlie and The Chocolate Factory- Roald Dahl

இக்கதையில், மிகவும் வறுமையில் வாடும் சார்லி பக்கெட் எனும் சிறுவன் wonka சாக்லேட் நிறுவனம் நடத்தும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பின், அவன் வாழ்க்கையில் நடைபெறும் மாற்றங்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறந்த தன்னம்பிக்கைக் கதை ஆகும்.

3. The Lion, the Witch and the Wardrobe- CS Lewis

Chronicles of Narnia வின் சிறந்த 7 புத்தகங்களுள் இதுவும் ஒன்று. குழந்தைகள் படித்து, மகிழ, கற்பனை திறன் பெற சிறந்த புத்தகம்..

4. Treasure Island- Robert Louis Stevenson

இதில் Treasure Island-ன் வரைபடத்தினை கதாபாத்திரங்கள் எப்படி பெறுகின்றனர், அந்த இடத்தை எப்படி அடைகின்றனர், அங்கு என்ன நடக்கிறது என்று இந்த கதை விறுவிறுப்பாக செல்லும். குழந்தைகள் படிக்க ஏற்றது.

5. A Bear Called Paddington- Michael Bond

இந்த கதை நகைச்சுவை, கருத்துக்கள், கற்பனைகள் என அனைத்தும் கலந்த மிகச் சிறந்த கதை..

6. Matilda- Roald Dahl

பெற்றோராலும் நண்பர்களாலும் சரியாக கவனிக்கப்படாத மாட்டில்டா எனும் சிறுமி, எவ்வாறு தன் ஆசிரியரால் அக்கறை காட்டப்பட்டு, வாழ்வில் மகிழ்ச்சியையும், ஆதரவையும் பெறுகிறாள் என்பதே இந்த கதையின் சுவாரசியம்..!

7. Oliver Twist- Charles Dickens

குழந்தைகளுக்கு வறுமையின் தன்மையை உணர்த்தி, அவர்களின் கற்பனை திறனை மேம்பாடடைய செய்யும் நல்ல கதை..

8. Charlotte’s Wed- EB White
 

இக்கதை மனிதாபிமானம், வீர தீரங்களை பற்றி குழந்தைகளின் மனதில் விதைக்கும் வகையில் விளங்கும்..!

9. The Cat in the Hat- Dr. Seuss

இந்தக் கதையோ விறுவிறுப்பான களம், அருமையான நகைச்சுவை, அதிகப்படியான சிரிப்பு என அனைத்தையும் அள்ளித்தரும் உங்கள் குழந்தைச் செல்வங்களுக்கு..!

10. The Jungle Book- Rudyard Kipling

இது மிகச் சுவாரசியமான கதை. இதில் மௌக்லி எனும் சிறுவன் எப்படி ஓநாய்களால் வளர்க்கப்பட்டான், எப்படி காட்டில் வாழ்ந்தான் என்பதே கதை..! குழந்தைகள் படிக்க ஏற்றது.

மேற்கூறிய புத்தங்களுள் பல திரைப்படங்கள் வடிவிலும் உள்ளன. jungle book, paddington என பல புத்தங்கள் திரைப்படமாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால், குழந்தைகளுக்கு திரைப்படங்களை மட்டுமே காட்டாமல், புத்தக வாசிப்பு பழக்கத்தினை வழக்கமாக்குங்கள்..!  

Leave a Reply

%d bloggers like this: