குழந்தைகள் விரும்பும் 3 அசைவ உணவுகள்..!

குழந்தைகள் பிறந்தது முதல் 6 மாத காலம் வரை தாய்ப்பாலின் சுவையை மட்டுமே கண்டிருப்பர்; பின் நீங்கள் திட உணவு அளிக்கத் தொடங்கியதும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் சுவை அவர்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கும். குழந்தைகளுக்கு அசைவ உணவுகளின் சுவையை அறிமுகப்படுத்த வேண்டியதும் அன்னையின் கடமையே.. அப்படி அசைவ உணவுகளை குழந்தைகள் விரும்பும் வண்ணம், அவர்களுக்கு ஏற்ற வகையில் எப்படி சமைப்பது என்பது குறித்து இந்த பதிப்பில் பார்க்கலாம். 

1. சிக்கன் கூழ்..

சிக்கன் என்பது எல்லோரும் விரும்பி உண்ணும் அசைவம். இது குழந்தைகளுக்கும் கட்டாயம் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்..

1 கப் வேகவைத்த, பொடியாக நறுக்கப்பட்ட எலும்பில்லாத சிக்கன், ¼ கப் சிக்கன் வேக வைத்த நீர் அல்லது சாதாரண நீர்.

செய்முறை..

1. நறுக்கப்பட்ட சிக்கனை கூழ் பதத்திற்கு வருமாறு செய்து அதனுடன் சிறிது சிறிதாக நீர் சேர்த்து கட்டி சேராமல் கூழ் தயாரிக்கவும்.

2. இதனுடன் சுவைக்கு சிறிது மிளகையோ அல்லது காய்கறிகள், உலர் பழங்களையோ சேர்க்கலாம்.

2. மீன் கூழ்..!

மீன் என்பது எல்லோரும் விரும்பி உண்ணும், உடலுக்கு பலவித நன்மை பயக்கும் அசைவம். இதுவும் குழந்தைகளுக்கும் கட்டாயம் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்..

1 கப் வேகவைத்த, பொடியாக நறுக்கப்பட்ட முள்ளில்லாத மீன், ¼ கப் நீர்.

செய்முறை..

1. நறுக்கப்பட்ட மீனை கூழ் பதத்திற்கு வருமாறு செய்து அதனுடன் சிறிது சிறிதாக நீர் சேர்த்து கட்டி சேராமல் கூழ் தயாரிக்கவும்.

2. இதனுடன் சுவைக்கு சிறிது மிளகையோ அல்லது காய்கறிகள், உலர் பழங்களையோ சேர்க்கலாம்.

 

3. குழந்தைகளின் ஆம்லெட்..!

முட்டை குழந்தைகள் விரும்பும் ஒரு உணவு. முட்டையை விதவிதமான முறையில் சமைக்கலாம்; முட்டை சேர்த்து சமைக்கப்படும் சமையல்களில் குழந்தைகளை பெரிதும் கவர்வது, ஆம்லெட். அதை செய்வது குறித்து இப்பொழுது பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்..

வெண்ணெய், பால், 2 முட்டைகள், கூழாக்கப்பட்ட காய்கறிகள்

செய்முறை..

1. சூடாக்கப்பட்ட சட்டியில், வெண்ணெயிட்டு உருக்கிக் கொள்ளவும்.

2. பின் முட்டைகளை உடைத்து, பாலுடன் கலக்கிக் கொண்டு, சட்டியில் இடவும்.

3. முட்டை சற்று வெந்த பின், கூழாக்கப்பட்ட காய்கறிகளை இட்டு வேக வைக்கவும்; மேலும் சிறிது வெண்ணெய் சேர்க்கவும்.

4. முட்டையை திருப்பிப் போட்டு, நன்றாக வெந்தபின் குழந்தைகளுக்கு பரிமாறவும்..

 

Leave a Reply

%d bloggers like this: