கேழ்வரகு(ராகி) முறுக்கு – தீபாவளி ஸ்பெஷல்

கேழ்வரகு என்பது காலப்போக்கில் நம்மால் மறக்கப்பட்ட தானியங்களில் ஒன்று. இது போன்ற தானியங்களே நம் முன்னோர்களை எந்த வித நோயுமின்றி நூறாண்டு காலம் வாழ்வதற்கான ஆரோக்கியத்தை கொடுத்து. கேழ்வரகில் கால்சியம், புரதம், இரும்பு சத்து, நார் சத்து மற்றும் தாதுக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. இவை குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன. இவற்றை சமைத்து சாப்பிட சொன்னால் பெரியவர்களே தவிர்க்கும் இந்த காலத்தில் குழந்தைகள் எப்படி சாப்பிடுவார்கள். ஆனால், அதையே திண்பண்டமாக கொடுக்கும் போது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் சாப்பிடுவார்கள். இங்கு கேழ்வரகில் எப்படி முறுக்கு செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

1 ராகி மாவு – அரை கப்

2 அரிசி மாவு – கால் கப்

3 கடலை மாவு – கால் கப்

4 மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி

5 எள் – அரை தேக்கரண்டி

6 வெண்ணை – ஒரு தேக்கரண்டி

7 தண்ணீர், உப்பு – தேவையான அளவு

8 எண்ணெய் அல்லது நெய் – பொரிப்பதற்கு

செய்முறை

1 வாணெலியில் எண்ணெய் ஊற்றாமல், ராகி மாவை மென்மையாக வறுத்து கொள்ளவும்.

2 பின் ராகி மாவு, அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், எள் மற்றும் வெண்ணையை ஒன்றாக கலந்து, அதனுடன் தண்ணீர் சேர்த்து, முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

3 இந்த மாவை சுத்தமான பருத்தி துணியில் முறுக்கு போல் பிழிந்து கொள்ளுங்கள்.

4 வாணெலியில் எண்ணெய் அல்லது நெய்யை சூடேற்றி, முறுக்கு போல் சுற்றி வைத்திருக்கும் கலவையை பொரித்தெடுங்கள்.

5 சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி முறுக்கு தாயார்.

கடையில் திண்பண்டங்களை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதை விட, சுத்தமான முறையில் சுவையாக திண்பண்டங்களை வீட்டிலேயே தயாரித்து குழந்தைகளுக்கு கொடுங்கள். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். மேலும் குழந்தைகளுக்கு இது போன்ற தானியங்கள் பற்றியும் அந்த ஆரோக்கியத்தை பற்றியும் சொல்லி கொடுத்தால், உங்கள் வருங்கால தலைமுறையினரையும் ஆரோக்கியத்தோடு வாழ வழி செய்யும். 

Leave a Reply

%d bloggers like this: