நோய்வாய்ப்பட்ட குழந்தையை பராமரிக்க உதவும் 9 வழிகள்..!

பொதுவாக குழந்தைகளை பிறந்தது முதல், 1 வயது வரை ஏதேனும் நோய்த்தொற்றுகள் தாக்கிக் கொண்டே இருக்கும். ஏனெனில், அச்சமயத்தில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையான வளர்ச்சி பெற்றிருக்காது. ஆகையால், இக்காலகட்டத்தில் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் முறைகள் குறித்து இந்த பதிப்பில் பார்க்கலாம். 

Colic என்றால் என்ன?

Colic என்பது குழந்தைகளுக்கு வயிற்றுப் பகுதியில் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் உண்டாகும் வலியான நிலை. இது தாய்ப்பால் ஊட்டும் அன்னை உண்ணும் தவறான உணவு மற்றும் குழந்தையின் நோய் எதிர்ப்புசக்தி குறைவால் நிகழும்; 3 மாத குழந்தைகளுக்கு ஏற்படும். இச்சமயத்தில் குழந்தைகளை கவனமாக, அக்கறையாக பார்த்துக் கொள்ள வேண்டும்..

colic-ன் அறிகுறிகள்:

இந்நோய் தொற்று ஏற்பட்டுவிட்டால், குழந்தைகள் அழுதுகொண்டே, சிணுங்கிக் கொண்டே இருப்பர்; அவர்களின் அடிவயிற்று பகுதியில், வலி தோன்றும். பொதுவாக நிறுத்தாது அழுவர், அதுவும் குறிப்பாக சாயங்கால சமயங்களில் அழுகையை நிறுத்தவே முடியாது.

பரிசோதிக்கப்பட்ட முறைகள்..

குழந்தைகள் தொடர்ந்து அழுதால், அது அவர்களுக்கு இருதய அடைப்பை ஏற்படுத்தலாம். ஆகவே குழந்தைகள் நீண்ட நேரம் அழுதால், அவர்களின் அழுகையை கட்டாயம் நிறுத்திட வேண்டும். அப்படி அவர்களை சமாளிக்க உதவும், ஏற்கனவே செய்துபார்த்து பரிசோதிக்கப்பட்ட எளிய முறைகளை இந்த பதிப்பில் காணலாம்.

1. கங்காரு..

குழந்தை அழும் சமயம், கங்காருவின் நினைவு உங்களுக்கு வர வேண்டும்; கங்காரு தன் குட்டியை எப்படி மடியில் கட்டி அணைத்துக் கொள்ளுமோ, அதே போல், குழந்தையை அணைத்து வீட்டினுள்ளேயோ அல்லது வெளியிலோ சற்று நடந்து சென்று வாருங்கள்; நிச்சயம் குழந்தைகள் அழுகையை நிறுத்திடுவர்.

2. rock-star..

குழந்தைகள் அழுகையில், நீங்கள் ஒரு rock-star போல் மாறி, ஆடியோ பாடியோ அழுகையை நிறுத்த முயற்சிக்கலாம் அல்லது குழந்தையை வண்டியில் (stroller) அழைத்துக் கொண்டு வெளியில் சென்று வரலாம்.

3. சப்தங்கள்..

குழந்தையை திசை திருப்பும் வகையில், ஏதேனும் சப்தங்களை உண்டு செய்து அழுகையை நிறுத்தலாம்; அல்லது குழந்தைக்கு பிடித்த பாடல்களை கேட்குமாறு செய்யலாம்.

4. ஒத்தடம்..

குழந்தைக்கு வலி உள்ள இடங்களில், பருத்தி ஆடையை வெந்நீரில் நனைத்து ஒத்தடம் அளிக்கவும் அல்லது குழந்தையை வெந்நீரில் குளிப்பாட்டவும்.

5. மசாஜ்..

குழந்தைகளுக்கு வலி உள்ள இடங்களில், மெதுவாக மசாஜ் செய்யவும்..

6. ”colic carry” நிலை..

குழந்தையை உங்கள் கையில் குப்புற படுக்க வைத்து, குழந்தையின் தலை உங்கள் உள்ளங்கையில் குப்புற இருக்குமாறு படுக்க வைத்து, மெதுவாக தட்டிக் கொடுக்கவும்.

7. சுற்றுதல்..

குழந்தையை துணி கொண்டு கதகதப்பாக இருக்குமாறு சுற்றிக் கொண்டால், குழந்தை அழுகையை நிறுத்திவிடும்.

8. சுகந்தமான சூழல்..

குழந்தைக்கு தொந்தரவு தரும் வெளிச்சம் மற்றும் சப்தங்களை நிறுத்தி, குழந்தைக்கு சுகந்தமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்து, அழுகையை நிறுத்தவும்.

9. சைக்கிளிங்..

குழந்தையின் கால்களை சைக்கிளிங் செய்வது போல், மெதுவாக அசைத்தால், குழந்தை அழுகையை நிறுத்தும்.

ஆகையால், பெற்றோர்களே குழந்தைகள் நீண்ட நேரம் அழுதால், மேற்கூறிய முறைகளை கையாண்டு, அவர்களின் அழுகையினை நிறுத்தி, குழந்தையை கவனித்துக் கொள்ளுங்கள்..

Leave a Reply

%d bloggers like this: